கர்ப்பகால கட்டுக்கதைகளும் உண்மைகளும்!

Pregnant Myths
Pregnant Myths
Published on

ஒரு பெண்ணின் வாழ்வில் மிகவும் முக்கியமான மற்றும் அழகான தருணங்களில் ஒன்று கர்ப்பம். புதிய உயிரை சுமக்கும் இந்த பயணத்தில், மகிழ்ச்சியும் எதிர்பார்ப்பும் ஒருபுறம் இருக்க, பல்வேறு கட்டுக்கதைகளும், தவறான நம்பிக்கைகளும் பரவலாக உள்ளன. இவை பெரும்பாலும் அனுபவமற்ற தம்பதியினருக்கு குழப்பத்தையும் தேவையற்ற பயத்தையும் ஏற்படுத்துகின்றன. அத்தகைய கட்டுக்கதைகள் பற்றிய சில விஷயங்களை இந்தப் பதிவில் பார்க்கலாம். 

கர்ப்ப காலத்தில் சில குறிப்பிட்ட உணவுகளின் மீது அதிக நாட்டம் ஏற்படுவது இயல்பு. ஆனால், இது கட்டுப்படுத்த முடியாத ஆசையாக இருக்க வேண்டிய அவசியமில்லை. சத்தான உணவுகளை உட்கொண்டு, ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தைப் பின்பற்றுவதன் மூலம் இந்த ஆசைகளைக் கட்டுப்படுத்தலாம்.

"இரண்டு பேருக்கு சாப்பிட வேண்டும்" என்பது கர்ப்ப காலத்தில் அடிக்கடி கேட்கப்படும் அறிவுரை. உண்மையில், கர்ப்பிணிப் பெண்ணுக்கு கூடுதலாக கலோரிகள் தேவை என்பது உண்மைதான். ஆனால், இரண்டு மடங்கு உணவு உட்கொள்ள வேண்டும் என்பது தவறான கருத்து. முதல் மூன்று மாதங்களில், வழக்கமான உணவே போதுமானது. அடுத்தடுத்த மாதங்களில், குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையான கூடுதல் சத்துக்களை பூர்த்தி செய்யும் வகையில், மருத்துவரின் ஆலோசனைப்படி, சிறிய அளவில் சத்தான உணவுகளை சேர்த்துக்கொள்ளலாம். அதிகப்படியான உணவு உடல் எடையை அதிகரித்து, வேறு சில உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.

கர்ப்ப காலத்தில் அதிக சோர்வு ஏற்பட்டால் பெண் குழந்தை பிறக்கும் என்ற கருத்தும் பரவலாக உள்ளது. ஆனால், சோர்வு என்பது கர்ப்ப காலத்தில் ஏற்படும் பொதுவான உடல் மாற்றங்களில் ஒன்று. இது ஒவ்வொரு பெண்ணுக்கும் மாறுபடலாம். குழந்தையின் பாலினத்திற்கும் சோர்வுக்கும் எந்த தொடர்பும் இல்லை. குழந்தையின் பாலினத்தை தீர்மானிப்பது குரோமோசோம்கள் மட்டுமே.

இதையும் படியுங்கள்:
16 வருடங்கள் சாப்பிடாத பெண்… என்ன காரணம்?
Pregnant Myths

கர்ப்பிணி பெண்கள் உடற்பயிற்சி செய்யக்கூடாது என்ற கருத்து மிகவும் தவறானது. மிதமான உடற்பயிற்சி கர்ப்ப காலத்தில் மிகவும் நல்லது. இது உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்கவும், மன அழுத்தத்தை குறைக்கவும், நல்ல தூக்கத்தை ஊக்குவிக்கவும் உதவுகிறது. இருப்பினும், கடினமான உடற்பயிற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. எந்தவொரு புதிய உடற்பயிற்சியையும் தொடங்குவதற்கு முன், மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியம்.

நெஞ்செரிச்சல் ஏற்பட்டால், பிறக்கும் குழந்தைக்கு அடர்த்தியான முடி இருக்கும் என்ற நம்பிக்கை பல காலமாக நிலவி வருகிறது. இது முற்றிலும் தவறான கருத்து. கர்ப்ப காலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் கருப்பையின் அழுத்தம் காரணமாக நெஞ்செரிச்சல் ஏற்படுகிறது. இதற்கும் குழந்தையின் முடி வளர்ச்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை.

இதையும் படியுங்கள்:
பனிக்காலத்தில் சரும அழகைப் பராமரிப்பதற்கான சில டிப்ஸ்கள்!
Pregnant Myths

கர்ப்ப காலத்தில் சருமம் பொலிவாக இருந்தால், உடல் ஆரோக்கியமாக உள்ளது என்று அர்த்தம் என்பது ஒரு பொதுவான நம்பிக்கை. ஹார்மோன் மாற்றங்களால் சருமத்தில் ஏற்படும் மாற்றங்களே இந்த பொலிவுக்கு காரணம். ஆரோக்கியமான உணவு மற்றும் வாழ்க்கை முறை ஆரோக்கியத்தை உறுதி செய்யும். சரும பொலிவு மட்டுமே ஆரோக்கியத்தின் அளவுகோல் அல்ல.

கர்ப்ப காலத்தில் உடலுறவு கொள்ளக் கூடாது என்ற தவறான எண்ணம் பலரிடம் உள்ளது. மருத்துவ ரீதியாக தடை இல்லாத வரை, கர்ப்ப காலத்தில் உடலுறவு கொள்வது பாதுகாப்பானது. சந்தேகங்கள் இருந்தால், மருத்துவரை அணுகி ஆலோசனை பெறலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com