16 வருடங்கள் சாப்பிடாத பெண்… என்ன காரணம்?

Ethiopia girl
Ethiopia girl
Published on

எத்தியோப்பியாவில் ஜிம்மாவை சேர்ந்த ஒரு பெண் 16 வருடங்களாக சாப்பிடாமல் இருந்திருக்கிறார். இவர் குறித்த முழு விவரத்தையும் பார்ப்போம்.

மனிதர்களால் மட்டுமல்ல எந்த உயிரினங்களாலும் சாப்பிடாமல் உயிர் வாழவே முடியாது. குறைந்தது 1 வாரம் உணவில்லாமல் வாழலாம். அதற்கும் நீர் அருந்தி சமாளித்தாக வேண்டும். ஒருவர் வெகுநாட்கள் சாப்பிடாமல் இருக்கும்போது பசி மட்டுமல்ல, உடலில் எந்த கழிவும் சேராது, இதனால் உடலில் பல மாற்றங்களும் ஏற்படும்.

ஆனால், எத்தியோப்பியாவின் ஜிம்மாவைச் சேர்ந்த முலுவொர்க் அம்பாவ், 16 வருடங்களாக சாப்பிடவும் இல்லை, தண்ணீர் குடிக்கவும் இல்லை என்றால் நம்பமுடிகிறதா? 26 வயதாகும் இந்த பெண் தனது 10 வயதிலிருந்து சாப்பிடவில்லையாம். அந்த வயதிலிருந்து பசியோ தாகமோ அவருக்கு எடுக்கவில்லை என்பதுதான் இதற்கான காரணம்.

குழந்தையாக இருக்கும்போது சாப்பிட்டுவிட்டு பள்ளிக்குச் செல் என்று அவரது குடும்பத்தினர் கூறியிருக்கின்றனர். ஆனால், அவருக்கு பசியே இல்லாததால், சாப்பிட்டுவிட்டேன் என்று பொய்க் கூறி பள்ளிக்கு சென்றிருக்கிறார். அங்குதான் ஆரம்பித்திருக்கிறது இந்த விரதம்.

இதையும் படியுங்கள்:
தித்திக்கும் திருவாதிரைக் களியும் கச்சாயமும் செய்யலாம் வாங்க..!
Ethiopia girl

எதுவும் சாப்பிடவில்லை என்பதால், குளிக்க மட்டுமே பாத்ரூம் செல்வாராம்.

அதேபோல் திருமணத்திற்கு பிறகு குழந்தை பெற்ற பிறகு அவருக்கு பால் சுரக்க வில்லையாம். இதனால் குழந்தைக்கு தாய் பாலே கொடுக்கவில்லையாம்.

இதன்பிறகு மூன்று ஆண்டுகளாக எத்தியோப்பியா, துபாய் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளில் பல சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டார். ஆனால், எந்த சோதனையிலும் அவருக்கு பசி ஏன் எடுக்கவில்லை, தாகம் ஏன் எடுக்கவில்லை என்பது மட்டும் தெரியவில்லை. மருத்துவர்கள் தங்களால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் செய்துப் பார்த்துவிட்டார். ஆனால், விடை தெரியவில்லை.

உலகிலேயே இதுபோன்ற அறிய குறைபாடு யாருக்குமே கண்டறியவில்லை என்பதால், மருத்துவர்கள் இந்த முயற்சியை அப்படியே கைவிட்டுவிட்டனர்.

ஆனால், அந்த பெண்ணின் குடும்பத்தினர்கள் இது கடவுளின் ஆசிர்வாதம் என்று நம்புகிறார்கள்.

இதையும் படியுங்கள்:
இந்தியாவில் தனிமை விரும்பிகளுக்கேற்ற 5 அற்புத இடங்கள்!
Ethiopia girl

இவர் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கிறார். இதுவரை, 18 நாட்கள் உணவு நீர் இன்றி இருந்த நபர்தான் அதிக நாட்கள் சாப்பிடாமல் இருந்த நபர் என்ற சாதனையைப் படைத்திருந்தார். இதனையடுத்து இந்த பெண்ணின் செய்தி வெளியே வந்ததும், அந்த சாதனையை முறியடித்த பெண் என்று கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கிறார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com