முதியோர்களுக்கு செய்துத் தரும் வசதிகள் அவர்களுக்கு நாம் செய்யும் நன்றிக்கடன்!

Elderly facility
Elderly facility
Published on

நாம் சிறு குழந்தைகளாக இருக்கும்போது தவழ்ந்து, ஓடி விளையாடி, அடிபட்டு வரும் நம்மை அரவணைத்துக்கொள்ளும் பெற்றோர், இப்போது வயது முதிர்ந்தவர்களாக நமது அரவணைப்பை எதிர்பார்த்துக் காத்திருக்கும் நிலையில், நமது வீட்டில் இருப்பார்கள். வயது முதிர்வால் அவர்கள் கவனமின்றி தடுமாறி விழுவதும், பிற பாதிப்புகளும் அவர்கள் மீதான கவனத்தை அதிகமானதாக்கும்.

குறிப்பாக, வீடுகளில் முதியோர்கள் தங்களது சுதந்திரத்தையும், தனிப்பட்ட வாழ்க்கையையும், அதேவேளையில் பாதுகாப்பான சூழலிலும் இருக்க வழிவகை செய்வது என்பது மிகவும் முக்கியம். வீட்டில் இருக்கும் அனுபவப் பொக்கிஷங்களான முதியோர்கள்  தவறுதலாக கீழே விழுவதைத் தடுக்கவும், அவர்களது பாதுகாப்பை உறுதி செய்யவும் சில யோசனைகளை இந்தப் பதிவில் காண்போம்.

வீட்டில் செய்யும் மாற்றங்கள்: முதியோர்கள் தங்களது அன்றாடப் பணிகளை எளிதாகச் செய்ய, அவர்களுக்குத் தேவையான வசதிகள் கொண்டதாக வீட்டின் அமைப்பு இருக்க வேண்டும். வயதானவர்களை தடுமாற வைக்கும் தரையிலிருக்கும் மடங்கிய விரிப்புகள், கயிறு போன்றவற்றை அல்லது குப்பைகள் போன்ற ஆபத்துகளை அகற்றவும்.

இதையும் படியுங்கள்:
குழந்தைகளுக்கு படிப்பில் ஆர்வத்தை அதிகரிக்க சில ஆலோசனைகள்!
Elderly facility

பொதுவான தடுமாற்றம் தரும் விஷயங்களான படிக்கட்டுகள் மற்றும் குளியலறைகள் போன்ற முக்கிய இடங்களில் தகுந்த பிடிக்க வசதியான கைப்பிடிகளை நிறுவவும்.

குறைவான வெளிச்சம் முதியவர்களுக்கு ஆபத்து. அது அவர்களை தடுமாற வைக்கும் வாய்ப்பு உள்ளதால் விளக்குகளை அவர்கள் வந்து செல்லும் இடங்களில் அதிகம் பயன்படுத்த வேண்டும். மேலும். கீழே விழும் அபாயத்தைக் குறைக்க, நடைபாதைகள், படிக்கட்டுகள் மற்றும் அறைகளில் விளக்கு வெளிச்சத்தை மேம்படுத்தவும்.

குளியலறை பாதுகாப்பு: குளிக்கும்போது அவர்களுக்குத் வசதியாக ஷவர் அல்லது குளியல் தொட்டியில் பிடிப்புக் கம்பிகளை நிறுவவும். அதேபோல், கழிப்பறையில் ஏறுவதையும் இறங்குவதையும் எளிதாக்க உயர்த்தப்பட்ட கழிப்பறை இருக்கையை நிறுவுவதைக் கருத்தில் கொள்ளுங்கள்.

கழிப்பறையில் அவர்கள் இயற்கைக்கடன் கழித்து எழும்போது பிடிக்க ஆதரவாக கைப்பிடிகளை சுவற்றில் பதிப்பது அவசியம். குளியலறை மற்றும் கழிப்பறை சென்று வந்தபின் கால்களின் ஈரத்தை துடைக்க ஏதுவான ஈரம் உறிஞ்சும் துணி மேட்களை அவர்கள் பயன்படுத்த உதவவும்.

தரை மற்றும் படிக்கட்டுகள்: வயதானவர்கள் கீழே விழுவதைத் தடுக்க இரட்டை பக்க டேப் அல்லது வழுக்காத பின்புறம் கொண்ட பாதுகாப்பான விரிப்புகளை தரைக்குப் பயன்படுத்தலாம். படிக்கட்டுகள் இருந்தால் நன்கு வெளிச்சமாகவும் உறுதியான கைப்பிடிகள் இருப்பதையும் உறுதி செய்யவும்.

அதிகமாக அவர்கள் உபயோகிக்கும் பகுதிகளில் வழுக்காத தரையை நிறுவுவதைக் கருத்தில் கொள்ளுங்கள். தற்போது அதற்கான சொரசொரப்பான மற்றும் பலவகை டைல்ஸ் வகைகள் கிடைக்கின்றன.

இதையும் படியுங்கள்:
வாழ்க்கையில் வசந்தம் வீடு தேடி வர சில ஆலோசனைகள்!
Elderly facility

சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகள்: சமநிலை மற்றும் வலிமையை மேம்படுத்த வழக்கமான உடற்பயிற்சியை ஊக்குவிக்க வற்புறுத்ததுங்கள். வயதாகிறது என்று சும்மா இருந்தால் உடல் நலம் குன்றி விடும். வயதானவர்களுக்கு வழக்கமான கண் மருத்துவப் பரிசோதனைகள் அவசியம் தேவை.

உடல் நல பாதிப்புகளுக்காக அவர்கள் எடுக்கும் மருந்துகள், அவர்களுக்குத் தடுமாறும் அபாயத்தைத் தரவில்லை என்பதை உறுதிப்படுத்த சுகாதார நிபுணருடன் மருந்துகளை மதிப்பாய்வு செய்யவும். இத்துடன் முதியோர்கள் தங்களது தனிமை உணர்வைப் போக்க, தோழமை மற்றும் ஆதரவு தேவை. அது அவர்களுக்கு மகிழ்ச்சியையும், பாதுகாப்பு உணர்வையும் அளிக்கும்.

முதியோர்கள் தங்களது உடல்நலப் பிரச்னைகளை கவனித்துக்கொள்ள தேவையான மருத்துவ உதவிகள் உடனுக்குடன் அவர்களுக்குக் கிடைக்க வேண்டும். மேலும், அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்குவது நமது கடமை. ஆனால், அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை மதித்து அவர்களை மகிழ்ச்சியாகவும் சுதந்திரமாகவும் வைத்திருப்பது அவர்களுக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடன்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com