மழைக்காலத்துல சுவிட்ச் போர்டு ஈரமாகுதா? இந்தத் தப்பப் பண்ணா ஷார்ட் சர்க்யூட் கன்ஃபார்ம்!

மின்வாரிய விதிகளை மீறி செய்யும் சிறு தவறுகள் பெரிய விபத்துகளை உருவாக்கும்.
சுவிட்ச் போர்டு
சுவிட்ச் போர்டுGemini image
A.N.ராகுல்

அனைவருக்கும் வணக்கம் என் பெயர் ராகுல் நான் ஒரு பொறியியல் பட்டதாரி, தமிழின் மீது உள்ள ஆர்வத்தால் எழுத்து துறையில் என்னை இணைத்துள்ளேன். என்னுடைய பொதுவான குறிக்கோள் நான் செய்யும் விஷயங்களால் மற்றவர்கள் பலனடைய வேண்டும் என்பதே, அதை என் தாய்மொழி மூலம் இந்த எழுத்து துறையின் வாயிலாக பங்காற்ற விரும்புகிறேன். ஆக வாசகர்களே நீங்கள் என் சேகரிப்புகளை பொழுதுபோக்கு, பொது அறிவு என்று எந்த கண்ணோட்டத்தில் பார்த்தாலும் இறுதியில் நீங்கள் பெரும் அந்த திருப்திகரமான உணர்வே, நான் எழுதுவதற்கு கிடைத்த பலன்.

Updated on: 

மழைக்காலத்துல வீட்டு சுவிட்ச் போர்டு ஈரமாகிட்டா நம்ம என்ன செய்யணும், என்ன செய்யக்கூடாதுனு முதல்லயே ரொம்ப தெளிவா பாத்துடலாம். ஏன்னா, ரீசண்டா மழை பெய்ஞ்சப்போ எங்க வீட்டு சுவிட்ச் போர்டு குள்ள லைட்டா தண்ணி நுழைஞ்சத கவனிக்காம கை வச்சு, எனக்கு ஒரு சின்ன எலக்ட்ரிக் ஷாக் அடிச்ச அனுபவம் இருக்குங்க, நல்லவேளை பெரிய ஆபத்து இல்லாம தப்பிச்சேன். அதனால தான் சொல்றேன், இந்த மழைக்காலத்துல சுவத்துக்குள்ள மறைஞ்சிருக்கும் ஆபத்துக்களை நாம சும்மா சாதாரணமா எடுத்துக்கவே கூடாது.

நம்ம தமிழ்நாட்டோட அதிகாரப்பூர்வ கரண்ட் ஆபீஸ் TANGEDCO மற்றும் மத்திய மின்சார ஆணையமான Central Electricity Authority (CEA) ரூல்ஸ் படி, மழைத்தண்ணியும், கரண்ட்டும் ஒண்ணா சேரும்போது ஏற்படுற இந்த 'ஈரப்பதம்' ரொம்பவே டேஞ்சரானது பாஸ்!.

நம்ம கண்ணுக்கு சுவிட்ச் போர்டு வெளியில ஈரமில்லாம தெரிஞ்சாலும், அதுக்கு பின்னாடி இருக்குற ஒயரிங் கனெக்ஷன்ல சின்ன சின்ன நீர்த்துளிகள் லாக் ஆகியிருக்கலாம். இது மெதுவா போர்டோட இன்சுலேஷன் (Insulation) பவரை கம்ப்ளீட்டா காலி பண்ணி, 'எலக்ட்ரிக்கல் டிராக்கிங்' (Electrical Tracking) அப்படின்ற ஒரு டேஞ்சரான நிலையை உருவாக்கிடும். அதாவது, கரண்ட் போகக் கூடாத ஈரமான சுவர்கள்ல கூட மின்சாரம் பாய ஆரம்பிச்சிடும்.

இந்த மாதிரி சுவிட்ச் போர்டுல ஈரப்பதத்தை கவனிச்ச உடனே நாம செய்ய வேண்டிய முதல் வேலை, மெயின் சுவிட்ச் அல்லது இ.பி மெயின் போர்டுல (Distribution Board) இருக்குற மெயின் எம்.சி.பி-யை (MCB - Miniature Circuit Breaker) ஆஃப் பண்ணி பவர் சப்ளையை மொத்தமா கட் பண்றதுதான்!. இந்த மாதிரி டைம்ல வீட்ல ஆர்.சி.சி.பி (RCCB - Residual Current Circuit Breaker) அப்படின்ற ஒரு சேஃப்டி விஷயம் இருந்தா, கரண்ட் லீக் ஆன உடனே அதுவா மெயினை தானா ட்ரிப் பண்ணி நம்மள ஷாக் அடிக்காம காப்பாத்திடும். ஆனா, பல வீடுகள்ல இந்த ஆர்.சி.சி.பி செட்டப் ஒழுங்கா வேலை செய்யுறது இல்லனு ‘எலக்ட்ரிக்கல் experts’ சொல்றாங்க. அதனால நாமதான் ரொம்ப அலர்ட்டா இருக்கணும்.

ஆனா நம்ம மக்கள் பண்ற பெரிய தப்பு என்ன தெரியுமா? சுவிட்ச் வேலை செய்யுதான்னு 'செக்' பண்றதுக்காக ஈரமான சுவிட்சை திரும்பத் திரும்ப ஆன், ஆஃப் பண்ணி பார்ப்பாங்க. உள்ளே ஈரப்பதம் இருந்தா இது உடனே 'ஷார்ட் சர்க்யூட்' (Short Circuit) ஆகி போர்டே பிளாஸ்ட் ஆகிடும்!

சுவிட்ச் போர்டு
சுவிட்ச் போர்டுGemini image

அதேபோல, ஹேர் டிரையர் அல்லது ஹீட்டரை வச்சு சுவிட்ச் போர்டை காய வைக்கிறதோ, இல்லனா ‘டஸ்ட் கிளீன்’ பண்றேன்னு சொல்லி கெமிக்கல் ஸ்பிரே அல்லது வாட்டர் ரெப்பலண்ட் லிக்விட்களை உள்ளே தெளிக்கிறதோ கம்ப்ளீட்டா டேஞ்சர் ஆன பழக்கம். இதனால காப்பர் டெர்மினல்கள்ல (Copper terminals) சீக்கிரமா துரு புடிச்சி (Corrosion) டேமேஜ் ஆகிடும். அப்புறமா ரெசிஸ்டன்ஸ் (Resistance) அதிகமாகி, சுவிட்ச் போர்டு பயங்கரமா ஹீட் ஆகி தீப்பிடிக்கக் கூட சான்ஸ் இருக்கு!.

இதையும் படியுங்கள்:
நனைந்த மொபைல் உயிர்பெற முதல் 1 மணிநேரத்தில் இதை செய்யுங்க!
சுவிட்ச் போர்டு

சுருக்கமா சொன்னா, சுவிட்ச் போர்டைச் சுத்தியிருக்கிற சுவத்துல கை வைக்கும்போது லைட்டா விறுவிறுனு ஷாக் அடிச்சாலோ, இல்லனா சுவிட்சை போடும்போது உள்ளே இருந்து டக் டக்குனு ஸ்பார்க், இல்ல விசித்திரமான சத்தம் கேட்டாலோ உள்ளே தண்ணி போயிருக்குனு அர்த்தம்; அதுமட்டும் இல்லாம ஏதாச்சும் ஒரு பட்டனை அமுக்கின உடனே மெயின் போர்டுல இருக்குற MCB சுவிட்ச் டக்குனு தானா கீழ விழுந்து (Trip ஆகி) பவர் கட் ஆனாலும் போர்டுக்குள்ள ஈரப்பதம் லாக் ஆகியிருக்குனு நாம ஈஸியா கண்டுபிடிச்சிடலாம்!.

சோ, மழை சீசன்ல சுவிட்ச் போர்டு ஈரத்த ஒரு சாதாரண விஷயமா நினைக்காம, அதுக்கு பின்னாடி இருக்குற பெரிய எலக்ட்ரிக்கல் பிரச்னையை (Electrical Hazard) தெரிஞ்சு நடந்துக்கோங்க. போர்டு நல்லா காயுற வரைக்கும் அதைத் தொடவே கூடாது.

இதையும் படியுங்கள்:
அச்சச்சோ! மழைக்காலத்தில் ஷாக் அடிப்பதற்கு பின்னால் இப்படி ஒரு விஷயம் இருக்கா?
சுவிட்ச் போர்டு

அவசரப்பட்டு மெயினை ஆன் பண்ணாம, ஒரு நல்ல எலக்ட்ரீஷியனை கூப்பிட்டு கம்ப்ளீட்டா செக் பண்ணிட்டு அப்புறமா ஆன் பண்றதுதான் புத்திசாலித்தனம். உங்க பாதுகாப்பு தான் பாஸ் எப்பவுமே ரொம்ப முக்கியம்! சோ, இந்த மழைக்காலத்துல எல்லாரும் ரொம்ப உஷாரா இருங்க மக்களே!. 

வாசகர்கள் மழைக்காலத்தில் மின் சாதனங்களால் ஏற்படும் விபத்துகளைத் தடுத்து, தங்களையும் தங்கள் குடும்பத்தையும் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள தேவையான தெளிவான விழிப்புணர்வைப் பெறுவார்கள்.

logo
Kalki Online
kalkionline.com