வீட்டில் அதிர்ஷ்டம் பெருக அலமாரியில் இருக்கும் இந்த 10 பொருட்களை உடனே அகற்றுங்கள்!

Items to remove from the shelf
shelf
Published on

லமாரிகளை சுத்தமாகவும் நேர்த்தியாகவும் வைத்திருப்பது சற்றே சவாலான விஷயம். ஆனால், சிறிது மெனக்கெட்டால் அது சாத்தியமே. பெரும்பாலும் புதிய உடைகளை வாங்கினால் அவற்றை அடுக்குவதற்கு இடமில்லாமல் அலமாரிகள் நிரம்பி வழியும். அலமாரியிலிருந்து உடனடியாக அப்புறப்படுத்த வேண்டிய பத்து பொருட்களைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

1. ஒருபோதும் அணியாத பழைய ஆடைகள்: பழைய புடைவைகள், சுடிதார் செட்டுகள் போன்றவற்றை எப்போதாவது உடுத்தலாம் என்று அலமாரியில் அடுக்கி வைத்திருப்போம். ஆனால், மாதக்கணக்கில், ஏன் வருடக்கணக்கில் கூட அவை உபயோகிக்கப்படாமல் சும்மாவே இடத்தை அடைத்துக் கொண்டிருக்கும். எனவே, அவற்றை எடுத்து தேவைப்படுபவர்களுக்கு தானமாகக் கொடுத்து விடலாம்.

இதையும் படியுங்கள்:
மழைக்காலங்களில் மளிகைப் பொருட்களைப் பராமரிக்க 10 ஸ்மார்ட் வழிகள்!
Items to remove from the shelf

2. பொருந்தாத ஆடைகள்: நமது மனதுக்குப் பிடித்த சில ஆடைகள் இருக்கும். ஆனால், எடை அதிகரித்திருந்தால் அவற்றை அணிய முடியாது. உடல் எடையை குறைத்து விட்டு இவற்றை அணியலாம் என்று பத்திரப்படுத்தி வைத்திருப்போம். ஆனால், அவை உபயோகப்படுத்தப்படாமல் சும்மா இருக்கும். எனவே, அவற்றையும் எடுத்து தேவைப்படுவோருக்கு அளித்து விடலாம்.

3. துளைகள் கொண்ட சாக்ஸ் அல்லது ஒற்றை சாக்ஸ்: உடைகளுக்கு தகுந்தவாறு சாக்ஸ் வாங்கி வைத்திருப்போம். ஏதாவது ஒரு இடத்தில் ஓட்டை உள்ள சாக்ஸ் இருக்கும் அல்லது ஒரு ஜோடியில் ஒன்று மட்டும் இருக்கும். இன்னொன்றை தேடி எடுத்து அணியலாம் என்று வைத்திருப்பீர்கள். ஆனால், அவை நாட்கணக்கில் உள்ளே தூங்குவதில் ஒரு பிரயோஜனமும் இல்லை. உடனே அவற்றை அகற்றவும்.

4. உடைந்த ஹேங்கர்கள்: உடைகளை அழகாக ஹேங்கரில் மாட்டி வைக்கும் பழக்கம் பெண்களுக்கு உண்டு. சில ஹேங்கர்கள் ஆண்டுக்கணக்கில் உழைத்து ஒரு இடத்தில் உடைந்து போய் சேதப்பட்டு இருக்கும். அவை கவனிக்கப்படாமல் அலமாரியில் இருக்கும். எனவே, அவற்றை தூக்கி எறிந்து விட்டு நல்ல தரமான மரத்தால் ஆன ஹேங்கர்களை வாங்கி வைக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
ஒருவர் உங்களை ஏமாற்றுகிறார் என்பதை தெரிந்து கொள்வது எப்படி?
Items to remove from the shelf

5. பழைய துண்டுகள்: ஆண்டுகள் பல ஆன சாயம் போன, நூல் இழை பிரிந்துபோன துண்டுகளை பலர் அலமாரியில் அடுக்கி வைத்திருப்பார்கள். அவற்றை செல்லப்பிராணிகளை துவட்ட அல்லது அவற்றுக்கு விரிப்பாக விரித்து விடலாம் என வைத்திருப்பர். அவற்றையும் அப்புறப்படுத்தலாம்.

6. அசௌகரியமான காலணிகள்: உடைக்கு மேட்சாக சிலருக்கு காலணிகள் அணியும் வழக்கம் உண்டு. அவர்கள் ஷூ ரேக் நிறைய பழைய காலணிகளை அடுக்கி வைத்திருப்பார்கள். சில செருப்புகள் காலுக்கு பத்தாமல் இருக்கலாம். இன்னும் சில நல்ல விலை உயர்ந்ததாக இருக்கும். ஆனால், பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கும் இவற்றையும் அப்புறப்படுத்துவது நல்லது.

7. ஷூ பெட்டிகள், பேக்கேஜ் பெட்டிகள்: நிறைய வீடுகளில் பீரோவின் மேல் பட்டுப்புடைவை வாங்கின அட்டைப் பெட்டிகள், பேண்ட் ஷர்ட் சுடிதார், வாங்கிய அட்டைப்பெட்டிகள் இருக்கும். ஷூ ரேக்கில் ஷூக்கள் வாங்கிய பெட்டிகளை பத்திரமாக சேமித்து வைத்திருப்பார்கள். ஆனால், இவை பல்லி, கரப்பான் போன்ற உயிரினங்களுக்கு வசிப்பிடமாக மாறிவிடும். எனவே, இவற்றை உடனே தூக்கி எறியவும்.

இதையும் படியுங்கள்:
உங்கள் வாழ்க்கையை தலைகீழாக மாற்றியமைக்கும் 10 நேர மேலாண்மை தந்திரங்கள்!
Items to remove from the shelf

8. சாயம்போன, எலாஸ்டிக் விட்டுப்போன ஆடைகள்: குழந்தைகள் அணியும் ரெடிமேட் பேண்டுகள், பெண்களின் பட்டியாலா லெக்கின்ஸ் போன்றவற்றை வாஷிங்மெஷினில் போட்டு எடுக்கும்போது அவை எலாஸ்டிக் விட்டுப்போகும். லூசான எலாஸ்டிக்குடன் அவற்றை அணியவும் முடியாமல் சும்மா அலமாரியில் வைத்துப் பலன் இல்லை. இவற்றை மறுசுழற்சி செய்யலாம் அல்லது அவற்றை வெட்டி வேறு உபயோகத்திற்குப் பயன்படுத்தலாம்.

9. பழைய படுக்கை விரிப்பு போர்வைகள்: தொண்டு நிறுவனங்கள் ஆதரவற்றோர் இல்லத்திற்கு இவற்றை நன்கொடையாக அளித்து விடலாம். இவை இடத்தை அடைத்து வேறு பொருட்கள் வைக்க முடியாமல் செய்யும்.

10. காலியான மேக்கப் பொருட்கள்: தீர்ந்துபோன கண் மை டப்பா, ஐலைனர், லிப்ஸ்டிக், பவுடர் டப்பா, பல் உதிர்ந்து போன சீப்பு போன்றவற்றை எதற்கென்றே தெரியாமல் சிலர் மேக்கப் பொருட்கள் வைக்கும் பெட்டியில் அல்லது அலமாரியில் வைத்திருப்பார்கள். இவற்றை உடனே அகற்ற வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com