பட்ஜெட் சமையலறை புதுப்பிப்பு: அதிக செலவின்றி அழகாக்குவது எப்படி?

renovate-kitchen
renovate-kitchen
Published on

வீட்டின் சமையலறையை மாற்ற வேண்டுமென்றால் புதிய டைல்ஸ், விலை உயர்ந்த மர வேலைகள் செய்யவேண்டும் என்பது பொதுவாக அனைவரின் எண்ணமாக உள்ளது. அதற்கு அதிக செலவாகும் என்பதால் இந்த வேலையை தள்ளிப்போடுவர். ஆனால் 500 ரூபாய்க்கும் குறைவான செலவில் சமையலறையை புதுப்பிக்கும் யோசனைகளை இப்பதிவில் காண்போம்.

வினைல் ரோல்கள்

பொலிவிழந்து காணப்படும் சமையலறை மேடையை நன்றாக சுத்தம் செய்து மார்பில் வடிவ வினைல் ரோல் ஸ்டிக்கரை ஒட்ட சாதாரண கல்லும் விலை உயர்ந்த கிரானைட்போல தோற்றமளிக்கும். இந்த வினைல் ரோல்கள் ஆன்லைனில் 250 ரூபாய்க்கு கிடைக்கின்றன.

புஷ் லைட்ஸ்

சமையலறையின் மேல்நிலை அலமாரிகளுக்கு கீழ் எல்இடி குழாய் விளக்குகளை பொருத்துவதால் இருளிலும் அந்த இடம் உயர்தர மாடுலர் சமையலறை போல அழகாகக்காட்சி தரும். இந்த எல்இடி குழாய் விளக்குகளை 180 ரூபாய்க்கே வாங்கலாம்.

பழைய ஜாடிகளைப் புதுப்பிக்கவும்

ஜாம் மற்றும் தேனுக்கான கண்ணாடி ஜாடி மூடியை கழுவி சுத்தம் செய்து கருப்பு அல்லது தங்க நிற பெயிண்ட் அடித்து வரிசையாக வைப்பதால் ஒரே மாதிரியான ஜாடிகளாக காட்சியளித்து ஒழுங்கோடு அழகாகவும் இருக்கும்.

எஸ்-கொக்கிகள்

சமையலறையின் ஜன்னல் அல்லது எந்தவொரு கம்பியிலாவது உலோக S வடிவ கொக்கிகளை பயன்படுத்தி கரண்டிகள் ,சட்டிகள், குவளைகளுக்கு பயன்படுத்த சமையலறை புதியதுபோல காட்சி தரும். இந்த கொக்கிகள் செட் 100 ரூபாய்க்கும் குறைவாகவே இருக்கும்.

இதையும் படியுங்கள்:
கைக்கெட்டும் தூரத்தில் ஆரோக்கியம்: பால்கனி தொட்டிகளில் காய்கறி வளர்ப்பது எப்படி?
renovate-kitchen

லினன் துணிகளுடன் வண்ணம் தீட்டவும்

சமையலறையில் இருக்கும் அழுக்கான மற்றும் பழைய துணிகளை மாற்றி வட்டு பிரகாசமான கடுகு மஞ்சள் மற்றும் இலை பச்சை போன்ற அடர்த்தியான நிறங்களைக்கொண்ட பருத்தி கைத்துண்டுகளை ஓவனின் கைப்பிடி அல்லது கொக்கியில் போட சமையலறை பொலிவாக காட்சி தரும். இந்த வகை துணிகள் 120 ரூபாய்க்கு கிடைக்கின்றன.

அட்டைப் பெட்டி பிரிப்பான்கள்

பழைய அட்டைப் பெட்டிகளை சரியான அளவிற்கு வெட்டி செய்தித்தாள் அல்லது மலிவான பழுப்பு நிற காகிதத்தில் சுற்றி அதில் கரண்டிகளையும் கத்திகளையும் தனித் தனி இடங்களில் சேமிக்க செலவில்லாமல் சமையலறை சூப்பராக காட்சி தரும்.

பசுமை புதுமை

ஒரு கண்ணாடி பாட்டிலில் மணி பிளான்ட் அல்லது புதினா செடியை ஜன்னல் ஓரத்தில் வைத்தால் பசுமையின் காரணமாக சமையலறையின் சூழலே அழகாகவும்,புதுமையாகவும் காட்சி தரும். இந்த செடியை 50 ரூபாய்க்கோ அல்லது இலவசமாகவோ வாங்கலாம்.

கைப்பிடிகளில் உலோக நாடா

பழைய அலமாரி கைப்பிடிகளின் மேல் வெள்ளி, செம்பு நிற உலோக பூச்சு நாடாவை பயன்படுத்த முழு அலமாரியும் புத்தம் புதியதாக தோற்றம் அளிக்கும். உலோக நாடா 150 ரூபாய்க்கு கிடைக்கிறது.

சிறிய பொட்டலங்களுக்கு கூடைகளைப் பயன்படுத்தவும்

உதிரியாக குழப்பத்தை உருவாக்கும் மசாலா பொருட்கள் மற்றும் பிஸ்கட் பாக்கெட்டுகளை மூன்று பிளாஸ்டிக் வலைக்கூடைகளில் சேமிக்க கையாள்வது எளிதாவதோடு உடனடியாக சமையலறை பெரிதாகவும் சுத்தமாகவும் காட்சி தரும். இந்த வகை கூடைகள் 100 ரூபாயிலிருந்து கிடைக்கின்றன.

இதையும் படியுங்கள்:
வீட்டுக்குள் வளர்க்கும் மணி பிளாண்ட்: பூச்சிகளைத் தடுக்குமா அல்லது ஈர்க்குமா?
renovate-kitchen

கரும்பலகை அல்லது ஸ்டிக்கர்கள்

சமையலறையில் அன்றைய உணவு பட்டியலை எழுதி வைக்க கரும்பலகை பெயிண்ட் மற்றும் அவரவர் உருவாக்கும் ஸ்டிக்கரை பயன்படுத்த அழகான கஃபே தோற்றம் ஏற்படுகிறது . இதனை 150 ரூபாய்க்கே வாங்கலாம்.

மேற்கூறிய பொருட்கள் அனைத்தும் விலை மலிவாக இருந்தாலும் உயர்தரமான காட்சியை உருவாக்கி சமையலறையை புதிதாக்குகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com