கைக்கெட்டும் தூரத்தில் ஆரோக்கியம்: பால்கனி தொட்டிகளில் காய்கறி வளர்ப்பது எப்படி?

vegetable-garden-at-home
vegetable-garden-at-home
Published on

ன்றைய நாட்களில் பெரிய அபார்ட்மெண்ட்களிலும் கூட பால்கனிகளில் தொட்டிகளில் செடிகளை வளர்த்து வருவது மிகவும் மகிழ்ச்சி தரக்கூடிய ஒன்றாக உள்ளது. அந்த வீட்டுப் பிள்ளைகள் அவர்களுக்கு பிடித்த பூச்செடிகளை தொட்டிகளில் வைத்து, அது பூக்கும் தருணத்தில் ஆனந்தப்படுகின்றனர்.

வீட்டின் பெரியவர்களும் ஏதேனும் உபயோகமானதாக வளர்த்தால் நன்றாக இருக்கும் என்று ஆசைப் படுகின்றனர். உங்கள் பால்கனியில் எளிதாக வளர்க்கக்கூடியதும், உங்கள் தினசரி சமையலுக்கு உதவியாக இருக்கும் சில காய்கறி செடிகளைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

தக்காளி, கத்திரிக்காய், மிளகாய், வெண்டைக்காய் மற்றும் வெள்ளரிக்காய் ஆகியவற்றை வளர்க்க சிறிய தொட்டிகள், மண் அல்லது தேங்காய் நார் (cocopeat), மற்றும் கொஞ்சம் தண்ணீர் இருந்தாலே போதும்; இவை நன்றாக வளரும்.

பால்கனியில் நீங்கள் வளர்க்கக்கூடிய 7 காய்கறிகள் இதோ சில உங்களுக்காக.

தக்காளி

முதலில், தக்காளி கோடைக்கால தோட்டத்திற்கு மிகவும் ஏற்றது. இது தொட்டிகளில் நன்றாக வளரும் மற்றும் சூரிய ஒளி மற்றும் முறைப்படி நீர் ஊட்டத்திற்கு நல்ல பதில் அளிக்கும். உங்கள் வீட்டுச் சமையலறையில் உள்ள இரண்டு தக்காளிகளை எடுத்துக்கொண்டு அதன் விதைகளை தொட்டிகளில் விதைத்தால்போதும். விரைவில் ஆரோக்கியமான, இயற்கை முறையில் வளர்ந்த சாறு நிறைந்த பழங்களைப் பெறுவீர்கள்; அவை உங்கள் உணவிற்கு நிறமும் சுவையும் சேர்க்கும்.

கத்திரிக்காய்

கத்திரிக்காய் (aubergine). அதன் ஆழமான ஊதா நிறம் மற்றும் வெள்ளை நிறம் கொண்ட வகைகள் உங்கள் பால்கனிக்கு அழகையும் தரும். கத்திரிக்காய் வெயில் காலங்களில் விளையும் பயிர் மற்றும் அதன் வேர் பரவ சிறிது பெரிய தொட்டி தேவை. சரியான பராமரிப்புடன், இது தொடர்ந்து விளைச்சலை அளிக்கும்.

இதையும் படியுங்கள்:
ஸ்மார்ட் கிச்சன் டிப்ஸ்: நேரத்தையும் பணத்தையும் மிச்சப்படுத்தும் 12 வழிகள்!
vegetable-garden-at-home

மிளகாய்

பச்சை மிளகாய் தொட்டிகளில் எளிதாக வளரும் மற்றும் குறைந்த பராமரிப்பே போதுமானது. இந்தச் சிறிய மிளகாய் செடிகள் விரைவில் காய்க்கத் தொடங்கிவிடும். இவை வளர சிறிய இடம் மட்டும் போதும். இது உங்கள் உணவுக்கு சுவை சேர்ப்பதோடு, ஆரோக்கியத்தையும் அதிகரிக்கும்.

வெண்டைக்காய்

வெண்டைக்காய் அல்லது லேடிஃபிங்கர், கோடைக்கால பயிராகும். இது நேராக மேலே வளர்வதால் சிறிய இடங்களுக்கு ஏற்றது மற்றும் கோடை வெப்பத்தை விரும்புகிறது. முறைப்படி நீர் ஊட்டமும் சூரிய ஒளியும் கிடைத்தால், வெண்டைக்காயை தொடர்ந்து அறுவடை செய்யலாம். பச்சை மற்றும் சிவப்பு நிறங்களில் இது காணப்படும்.

பாகற்காய்

இது ஒரு கொடி வகை. இதை வளர்க்க சிறிய தொட்டி அல்லது பக்கெட் போதும். சுற்றிலும் சிறிய கம்பிகளை வைத்து படர விடலாம். விரைவில் காய்க்கத் தொடங்கிவிடும்.

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காயை வளர்ப்பது மிகவும் எளிது. ஒரு நடுத்தர அளவு தொட்டியில் விதைகளை விதைத்தால் போதும். இது கொடி வகை என்பதால், பால்கனி கம்பிகளில் அல்லது கயிறுகளில் கட்டி படரவிடலாம்.

முலாம் பழம்

இதுவும் ஒரு கொடி வகை. வெள்ளரிக்காய் போலவே இதையும் எளிதில் வளர்க்கலாம். அதிக பராமரிப்பு தேவை இல்லை ஆனால் நல்ல பலன் தரும்.

Horticultural Science இதழின்படி, தொட்டிகளில் தோட்டம் அமைப்பது நகர்ப்புறங்களில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது, குறிப்பாக நிலம் குறைவான இடங்களில். ஆய்வுகள் கூறுவதாவது, தக்காளி, கத்திரிக்காய் மற்றும் மிளகாய் போன்ற கோடைக்கால காய்கறிகள் போதுமான சூரிய ஒளி, வெப்பம் மற்றும் சரியான நீர் வடிகால் கிடைத்தால் தொட்டிகளில் நன்றாக வளரும்.

இதையும் படியுங்கள்:
ஆடம்பர மோகம் மற்றும் எதிர்மறைச் சிந்தனைகளைத் தவிர்ப்பது எப்படி?
vegetable-garden-at-home

நிபுணர்கள் மேலும் கூறுவதாவது, தினமும் குறைந்தது ஆறுமணி நேர சூரிய ஒளி கிடைக்கும் பால்கனிகளில் பயனுள்ள காய்கறி தோட்டம் உருவாக்க முடியும்.

பால்கனி தோட்டம் புதிய காய்கறிகளை வழங்குவதோடு, இயற்கையுடன் நம்மை இணைக்கும் ஒரு அழகான அனுபவமாகும். நகர வாழ்க்கையில் இழந்து வரும் அந்த இயற்கை நெருக்கத்தை மீண்டும் பெற இது ஒரு சிறந்த வழி.

சிறிய இடம் இருந்தாலே போதும்; ஆர்வமும் சற்றே நேரமும் இருந்தால், உங்கள் பால்கனியே ஒரு சிறிய பசுமை தோட்டமாக மாறும். நீங்கள் வளர்க்கும் இந்த காய்கறிகள் உங்கள் உணவுக்கு சுவையும், உங்கள் மனதுக்கு மகிழ்ச்சியும் தரும்.

இன்று முதல் ஒரு சிறிய தொட்டியிலாவது தொடங்கிப் பாருங்களேன்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com