0 ரூபாய் செலவில் மாடித்தோட்டம்…  பிளாஸ்டிக் பாட்டில் இருந்தா போதும்!

குப்பையில் வீசப்படும் பழைய பிளாஸ்டிக் பாட்டில் மூலம் உங்கள் வீட்டை ஒரு பசுமையான நந்தவனமாக மாற்றும் செலவில்லாத அட்டகாசமான தோட்டக்கலை ரகசியங்கள் இதோ!
Plastic bottle gardening பிளாஸ்டிக் பாட்டில்
Plastic bottle gardening பிளாஸ்டிக் பாட்டில்
Updated on

தினமும் நாம் தண்ணீர் குடித்துவிட்டுத் தூக்கி எறியும் பொருட்களால் பூமிக்கு எவ்வளவு பெரிய பாதிப்பு ஏற்படுகிறது என்பது நம் அனைவருக்கும் தெரியும். இப்படி குப்பையில் சேரும் பொருட்களை வைத்து நமது வீட்டை ஒரு அழகான சோலையாக மாற்ற முடியும். 

கொஞ்சம் கற்பனைத் திறன் இருந்தால் போதும், தூக்கி எறியப்படும் ஒரு பிளாஸ்டிக் பாட்டில் கூட உங்கள் வீட்டுச் செடிகளுக்குப் பெரிய அளவில் உயிர் கொடுக்கும். இதை வைத்து எப்படிச் செலவில்லாமல் செடி வளர்க்கலாம் மற்றும் மாடித்தோட்டத்தை அழகுபடுத்தலாம் என்பதைப் பற்றி இப்போது பார்ப்போம்.

மாடித் தோட்டத்திற்கான செங்குத்து அமைப்பு!

இடப்பற்றாக்குறை உள்ள பெருநகரங்களில் செங்குத்து தோட்டம் அமைப்பது இப்போது ஒரு பெரிய ட்ரெண்ட் ஆக மாறி வருகிறது. பழைய தண்ணீர் கேன்களின் நடுப்பகுதியைக் செவ்வக வடிவில் லேசாக வெட்டி எடுத்துக்கொள்ளுங்கள். அதில் சிறிதளவு தேங்காய் நார் உரம் மற்றும் மண்ணைக் நிரப்பி, சுவற்றில் வரிசையாகக் கயிறு கொண்டு கட்டித் தொங்கவிடலாம். 

Plastic bottle gardening பிளாஸ்டிக் பாட்டில்
Plastic bottle gardening பிளாஸ்டிக் பாட்டில்

இதில் புதினா, கொத்தமல்லி போன்ற அன்றாடத் தேவைக்கான கீரை வகைகளை மிக எளிதாக வளர்க்க முடியும். இது பார்ப்பதற்கு மிகவும் அழகாகவும் இருக்கும், அதே சமயம் வீணாகும் பொருட்களுக்கு ஒரு நல்ல மறுசுழற்சி முறையாகவும் அமையும்.

செலவில்லாத சொட்டு நீர் பாசன முறை!

நாம் இரண்டு மூன்று நாட்கள் குடும்பத்துடன் வெளியூருக்குச் செல்ல நேர்ந்தால், வீட்டில் இருக்கும் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றுவது ஒரு பெரிய சிக்கலாக மாறும். இதற்குக் கடைகளில் விலை உயர்ந்த கருவிகளை வாங்க வேண்டிய அவசியமே இல்லை. 

ஒரு பாட்டிலின் மூடியில் சிறிய ஊசியால் ஓரிரண்டு துளைகளை இட்டு, அதில் தண்ணீரை முழுமையாக நிரப்பிச் செடியின் வேர்ப்பகுதியில் தலைகீழாகச் சொருகி விட்டால் போதும். இந்தச் சொட்டு நீர் பாசனம் மூலம் செடிகளுக்குத் தேவையான ஈரம் பல நாட்களுக்கு மெதுவாகச் சென்றுகொண்டே இருக்கும். இதனால் வெயில் காலங்களில் கூடச் செடிகள் வாடாமல் எப்போதும் பசுமையாகவே இருக்கும்.

இதையும் படியுங்கள்:
விதை இல்லாமலேயே தானாக முளைக்கும் அதிசய பனைமரங்கள்: பனையூரின் தெய்வீக ரகசியம்!
Plastic bottle gardening பிளாஸ்டிக் பாட்டில்

விதை முளைப்பதற்கான சிறிய தொட்டிகள்!

புதிதாக நாற்று விடுவதற்குப் பெரிய தொட்டிகள் அல்லது நர்சரி கவர்கள் எப்போதுமே தேவையில்லை. குளிர்ந்த பானங்கள் குடித்துவிட்டு வீசும் பாட்டில்களின் கீழ்ப்பகுதியை மட்டும் சரிபாதியாக வெட்டி எடுத்து, விதை தொடக்கக் கலன்களாக பயன்படுத்தலாம். 

இதன் அடிப்பகுதியில் உபரி நீர் எளிதாக வெளியேறச் சிறு துளைகளை இட வேண்டியது மிக முக்கியம். விதைகள் முளைத்துச் சிறிய செடியாக வளர்ந்தவுடன், அதைப் பெரிய தொட்டிக்கு எந்த சேதமும் இன்றி எளிதாக மாற்றிவிடலாம். தற்போதைய ட்ரெண்டான சிறு கீரைகள் வளர்ப்பதற்கும் இந்த முறை மிகச் சிறப்பாகக் கைகொடுக்கும்.

இதையும் படியுங்கள்:
இயற்கையைப் போற்றிக் காத்திட 13 கட்டளைகள்!
Plastic bottle gardening பிளாஸ்டிக் பாட்டில்

இயற்கையைப் பாதுகாப்பது நமது வீட்டுச் சமையலறையில் இருந்தே தொடங்க வேண்டிய ஒரு சாதாரணப் பழக்கம் ஆகும். அடுத்த முறை குப்பையில் ஒரு பிளாஸ்டிக் பாட்டில் வீசப்படும் போது, அதனுள் ஒரு அழகான செடி வளர்வதை உங்கள் மனக்கண்ணில் ஒருமுறை நினைத்துப் பாருங்கள். எந்தவொரு செலவும் இல்லாமல் நமது வீட்டைப் பசுமையாக மாற்றும் இந்த அட்டகாசமான ஐடியாக்களை இன்றே உங்கள் தோட்டத்தில் ட்ரை பண்ணி அசத்துங்கள்.

logo
Kalki Online
kalkionline.com