

சுந்தரமூர்த்தி நாயனாருக்கு ஈசன் பிரபஞ்ச நடனக் கோலத்தை காட்டியருளிய தலமாகவும், பராசர முனிவர் லிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்ட தலமானதும், கரிகால் சோழன் வளர்ந்த இடமான பஞ்ச க்ஷேத்திரங்களில் ஒன்றான ஈசன் சப்தரிஷிகளுக்கு ரிஷபாரூடராக காட்சிதந்த தலம்தான் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருப்பனையூர் சௌந்தரேஸாவரர் என்ற அழகிய நாதர் பிரஹன்நாயகி அம்மனுடன் அருள் பாலிக்கிறார்.
தேவாரப் பாடல் பெற்ற 75வது சிவஸ்தலமாகும். இத்தலம், இராஜேந்திரசோழ பனையூர் என்று பழங்காலத்தில் அழைக்கப்பட்டது. பனைமரங்கள் அதிகமாக இருந்ததால் தாலவனம் என்று அழைக்கப்பட்டது தாலம் என்றால் பனை.
தந்தை இளஞ்சேரல் சென்னியை இழந்த கரிகாலன் எதிரிகளுக்குப் பயந்து இரும்பிடத்தலையார் என்ற புலவரின் உதவியோடு தங்கிய தலம். இறைவன் பெயர் தாலவனேஸ்வரர். இறைவி பிரகன்நாயகி. தீர்த்தம் பராசர தீர்த்தம். பராசரர் தமது வழிபாட்டின் போது அமிர்தத்தின் ஒரு பகுதியை குளத்தில் இறக்கிவிட்டார்.
எனவே அதற்கு அமிர்த தீர்த்தம் என்ற பேயர் ஏற்பட்டது. சம்பந்தர், சுந்தரர், அப்பர், மாணிக்கவாசகர், சேக்கிழார், கௌதமர், அத்ரி, பராசர முனிவர், மகாலக்ஷ்மி, கரிகால் சோழன் ஆகியோர் வணங்கிய தலம்.
சுந்தரர் திருவாரூர்ப்பங்குனி உத்தர திருநாளுக்காக பரவையாரின் வேண்டுகோள்படி திருப்புகலூர் இறைவனிடம் பொன் பெற்று தம்மையே புகழ்ந்து என்று பாடித் திருப்புகலூர் வணங்கிய பின்பு திருப்பனையூர் நினைத்து வரலானார். அப்போது ஊரின் புறத்தே இறைவன் நடனக்காட்சி காட்டியருள எதிர் சென்று தொழுது வணங்கி அறங்காவலர் வார் அழகியல் என்ற பதிகம் பாடி அருள் பெற்றார். இந்நிகழ்ச்சியின் நினைவாக இன்றும் வடகிழக்கில் உள்ள மாணிக்க நாச்சியார் திட்டிற்கு அருகே உள்ள குளம் சந்தித்த தீர்த்தம் என்ற பெயருடன் விளங்குகிறது.
சுந்தரர் வரலாற்றுத் தொடர்புடைய திருவாரூரில் உள்ள மாற்றுரைத்த பிள்ளையார் நினைவாக இங்கு பிராகாரத்தில் உள்ள பிள்ளையாரும் மாற்றுரைத்த விநாயகர் என்று அழைக்கப் படுகிறார்
சம்பந்தர் திருப்பனையூர் தேவாரம் பாடியுள்ளார். வள்ளலாரும் திருவருட்பா பாடியுள்ளார். கோவில் வாயில் நுழைந்ததும் துணை இருந்த வினாயகர் _தந்தையை இழந்து பிறந்த கரிகாலனை கொன்று அரசை காப்பாற்ற நினைத்தால் தாயத்தார்களிடமிருந்து காப்பாற்ற முயன்ற தாய்மாமன் இருப்பிடத்தை யார் எனும் புலவர் பிறர் அறியாமல் குழந்தையையும் தாயையும் பனையூருக்கு அனுப்பி வைத்தார்.
எட்டு ஆண்டுகள் இங்கு பாதுகாப்பாக இருந்தார். கரிகால் சோழனுக்கு துணையிருந்ததனால் இந்த வினாயகர் துணை இருந்த வினாயகர் எனும் பெயர் பெற்றார். இங்குள்ள பனைமரங்கள் என்ன முதிர்ச்சியடையும் காலத்தில்ோ வித்திட்டு முளைக்காத (வாழையைப்போல) முறையாக பனங்கன்றுகள் தாமாகவே தோன்றி வளர்ந்து வருகின்றன. கல்வெட்டில் இறைவன் பனங்காட்டிறைவன் என்று குறிக்கப் பெறுகின்றன. இங்கு பிராகாரத்தில் சப்தரிஷிகள் வழிபட்ட ஏழு லிங்கங்கள் வரிசையாக உள்ளன.
பராசர முனிவர் வழிபட்ட சிவலிங்கமேனி மேற்கு நோக்கியது. இங்குள்ள சோமாஸ்கந்தர் இடக்கையில் பழம் ஏந்தி உள்ளார். கல்வெட்டில் இக்கோவில் இராஜேந்திர சோழ பனையூர் என்றே சொல்லப் பட்டிருக்கிறது.
பதவி உயர்வு பணி இடமாற்றம் கிடைப்பதற்கு சிவனையும் திருமணத்தடை நீங்க துர்க்கையை வழிபடுகிறார்கள் சிவராத்திரி வைகாசி விசாகம் திருக்கார்த்திகை திருவாதிரை போன்ற திருவிழாக்கள் நடைபெறுகின்றன.