ஒருவரின் மரணத்தின் பின் கண்கள் மற்றும் தாடை திறந்திருக்க காரணம் என்ன?

Death
DeathImg credit: freepik
Published on

ஒரு பிரேதத்திற்கு கண்கள் மற்றும் தாடைப் பகுதி ஏன் திறந்தவாறு இருக்கிறது? மரணத்திற்கு முன் எதையேனும் பார்த்து அச்சப்பட்ட காரணத்தினாலா? 

மனித உடல் ஒரு சிக்கலான இயந்திரம் போன்றது. இதில் ஒவ்வொரு உறுப்பும் ஒன்றோடு ஒன்று இணைந்து செயல்பட்டு நம்மை உயிருடன் செயல்பட வைக்கின்றன. நாம் உயிருடன் இருக்கும் வரை நம் உடலில் தொடர்ச்சியாக வேதிவினைகள் நடைபெற்றுக் கொண்டே இருக்கும். இதற்கு நாம் சுவாசிக்கும் காற்று, உண்ணும் உணவு ஆகியவை ஆற்றல் மூலமாக செயல்படுகின்றன. இறப்பு என்பது நமது உடல் முற்றிலுமாக செயலிழக்கும் நிலையாகும். இதற்குப் பின்னால் பல்வேறு காரணங்கள் இருக்கலாம். இதயத்துடிப்பு நின்று போதல், மூளை செயல்படாமல் போதல், போன்றவை இறப்புக்கு மிக முக்கிய காரணங்களாக அமைகின்றன. 

ஒரு மனிதன் இறந்து சுமார் 20-25 நிமிடங்களில் கண்கள் மற்றும் தாடையின் தசைகள் இறுகிப்போய் படிப்படியாக திறந்த நிலையினை அடையும். 2-3 மணி நேரங்களில் கை கால் தசைகளும் இறுகிவிடும்.

இதையும் படியுங்கள்:
டிரெண்டாகும் மஷ்ரூம் காபி: ஆரோக்கியமானதா? ஆபத்தா?
Death

12 மணி நேரங்களில் உடலில் உள்ள ஒட்டுமொத்த தசையும் இறுக்கிய நிலையை அடையக்கூடும். இதற்குக் காரணம், மரணத்திற்குப் பிறகு ரத்த ஓட்டம் தடைபட்டு விடுவதினால் செல்களின் கால்சியம், Tropomyosin என்ற புரதத்தை நீக்கி, பிரேதத்தின் தசை நார்களை நன்றாகத் திறந்த நிலையில் வைத்திருக்கும். 

பின்பு, இறந்த ஒருவரின் உடலில் எஞ்சி இருக்கும் ஆற்றல், அத்திறந்த தசைநார்களை அடைந்து, தானாகவே அவற்றை செயல்படுத்தும். அந்த சக்தி தீர்ந்தவுடன், பிரேதத்தால் மீண்டும் சக்தியை உற்பத்தி செய்ய முடியாது.  அதனால், அப்படியே தசைகள் செயலிழந்து இறுகி, யாராலும் தளர்த்த முடியாத நிலையினை அடையும். 

இதையும் படியுங்கள்:
நல்ல இரவு தூக்கத்திற்கு உதவும் நெய்… இப்படி பயன்படுத்துங்களேன்!
Death

இது ‘Rigor Mortis’ என்ற ஒரு இயற்கையான நிகழ்வு. 36 மணி நேரத்தில் தசை செல்கள் சிதைய ஆரம்பித்து, மீண்டும் தளர்ந்த நிலையினை அடைந்துவிடும். ஆனால், சில போலி ஆசாமிகள், இந்த நிலையின் உண்மை என்னவென்று அறியாமல், இறந்த ஆத்மாவிற்கு நிறைவேறாத ஆசைகள் உள்ளது எனக் கூறி, பிரேதத்தின் உறவினர்களிடம் பணம் பறிக்க முற்படுகின்றனர். 

உடல் இறுகும் இந்த விளைவு, மரணம் நிகழ்ந்த நேரத்தைத் தோராயமாகக் கணக்கிட உதவுகிறது. இது குற்ற விசாரணைகளில் மிகவும் முக்கியமான தகவலாக இருக்கும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com