பழைய வீடு வாங்குவதில் மறைந்திருக்கும் ஆபத்துகள்! - ஏமாறாமல் இருக்க இதைச் செய்யுங்கள்.

கட்டடத்தின் தரம் முதல் சட்ட ஆவணங்கள் வரை நீங்கள் கட்டாயம் கவனிக்க வேண்டிய ரகசிய செக்-லிஸ்ட்.
பழைய வீடு
பழைய வீடுAI image
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

சொந்தமாக வீடு வாங்க நினைப்பது நல்ல விஷயம்தான். எல்லோராலும் புதிய வீட்டை வாங்க முடியாது. நிதிநிலை காரணமாக பழைய வீட்டை வாங்க வேண்டிய நிலை ஏற்படலாம். அப்படி வாங்கும் பொழுது சில முக்கியமான விஷயங்களை உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.

பழைய வீடுகளை வாங்குபவர்கள் பெரும்பாலும் சட்ட சிக்கல்கள், மறைக்கப்பட்ட பழுதுகள் மற்றும் நிதிப் பற்றாக்குறை போன்றவற்றை எதிர்கொள்கின்றனர். இந்த சிக்கல்கள் வீட்டின் மதிப்பை விட அதிக கூடுதல் செலவை ஏற்படுத்திவிடும். வாங்குபவர்கள் சந்திக்கும் முக்கிய பிரச்னைகள் சில:

1. சட்ட மற்றும் ஆவணச் சிக்கல்கள்:

வீட்டின் தற்போதைய உரிமையாளரின் பெயரில் முறையான பட்டா உள்ளதா என்பதை சரி பார்க்க வேண்டும். பூர்வீக சொத்தாக இருந்தால், மற்ற வாரிசுகளுக்கு உரிய பங்கு கொடுக்கப்பட்டுள்ளதா அல்லது அவர்கள் பெயரில் வில்லங்கம் உள்ளதா எனப் பார்க்க வேண்டியது மிகவும் அவசியம்.

உள்ளூர் நிர்வாகத்தால் (CMDA, DTCP அல்லது உள்ளாட்சி அமைப்பு) அந்த வீட்டிற்கு முறையாக அப்ரூவல் வாங்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்வது மிக மிக முக்கியம்.

2. கட்டடத்தின் தரம் மற்றும் பழுதுகள்:

கட்டடத்தின் ஆயுள்:

அடுத்ததாக ஆனால் மிகவும் முக்கியமான ஒன்று, பழைய வீடு விற்பனையில் அதன் உறுதித்தன்மையை வல்லுனர்களைக் கொண்டு ஆய்வு செய்யவேண்டும். பழைய கட்டடத்தின் அடித்தளம் வலுவாக இருக்கிறதா என்பதை ஒரு சிவில் இன்ஜினியர் மூலம் பரிசோதிக்க வேண்டும். 30 முதல் 40 ஆண்டுகள் கடந்த கட்டடங்கள் என்றால் அவற்றின் ஆயுள் குறைவாக இருக்கும்.

பழைய வீடு
பழைய வீடுAI image

ஓதம் மற்றும் கசிவு:

சுவர்களில் ஈரப்பதம், மழைநீர் கசிவு மற்றும் கழிவறை குழாய்களில் ஏற்படும் பழுதுகள் பழைய வீடுகளில் சாதாரணமாக காணப்படும்.

மின்சார ஒயரிங்:

வீட்டின் பழைய மின்சார ஒயரிங் நவீன உபகரணங்களின் பயன்பாட்டைத் தாங்குமா அல்லது புதிய ஒயரிங் மாற்ற வேண்டுமா என்பதை சரி பார்க்க வேண்டும்.

விற்பனைக்கு வரும் வீட்டை நாம் பார்க்கச் செல்லும்போது இருந்த நிலையில் அப்படியே நமக்கு ஒப்படைக்க வேண்டும். அதில் உள்ள பயன்பாட்டுப் பொருட்களை மட்டுமே பழைய உரிமையாளர்கள் எடுத்துச் செல்லலாம்.

ஆனால் சில இடங்களில் ஸ்விட்ச் போர்டுகள், தண்ணீர் மோட்டார்கள், வீட்டிற்குள் உள்ள விளக்குகளை எடுத்துச் செல்கின்றனர். எனவே இது போன்ற விஷயங்களை முதலில் கவனித்து, வீடு வாங்க முன் பணம் கொடுக்கும் பொழுதே இதைப் பற்றி கண்டிப்பாக தெரிவித்து விடுவது நல்லது. அப்போதுதான் வீட்டை வாங்கியவுடன் குடிபோவதற்கு எந்தவித சிரமமும் சிக்கலும் இன்றி அமையும்.

இதையும் படியுங்கள்:
அடக்கடவுளே... இந்த 4 வாசனை தான் பாம்பை காந்தம் மாதிரி இழுக்குதாம்!
பழைய வீடு

3. நிதி மற்றும் கடன் சார்ந்த பிரச்னைகள்:

கட்டடத்தின் வயதைக் கருத்தில் கொண்டு வங்கிகள் நாம் எதிர்பார்க்கும் முழுமையான வீட்டுக் கடனை வழங்கத் தயங்கலாம். சொத்துப்பதிவுக்கு ஆகும் கட்டணம் சில நேரங்களில் கூடுதல் சுமையாக மாறலாம். பெயிண்டிங், உடைந்த தளங்களை மாற்றுதல் மற்றும் பிளம்பிங் வேலைகளுக்கு கணிசமானத் தொகையை செலவிட நேரிடலாம்.

4. இடவசதி மற்றும் வடிவமைப்பு சிக்கல்கள்:

பார்க்கிங் மற்றும் காற்றோட்டம்: பழைய வீடுகளில் கார்களை வைப்பதற்கான போதிய இடவசதி இல்லாமல் போகலாம். இன்றைய நவீன வசதிக்கு ஏற்ப காற்றோட்டம், வெளிச்சம் மற்றும் சமையலறை வசதிகள் இருக்கிறதா என்பதை சரி பார்க்கவும் வேண்டும்.

இதையும் படியுங்கள்:
அலுமினியமா ஸ்டீலா, எது பெஸ்ட்னு தெரியாம குக்கர் வாங்காதீங்க!
பழைய வீடு

இந்த தகவல்கள் மூலம், விற்பனையாளர்கள் மறைக்கும் பழுதுகளையும், சட்ட நுணுக்கங்களையும் முன்கூட்டியே கண்டறிந்து, உங்கள் முதலீட்டிற்கு முழுமையான பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள முடியும்.

logo
Kalki Online
kalkionline.com