சிறந்த 30 சாலை பாதுகாப்பு வாசகங்கள்!

Road safety slogans in Tamil.
Road safety slogans in Tamil.

பாதுகாப்பை நினைவூட்டும் சாலை பாதுகாப்பு வாசகங்கள்.

திருக்குறள் முதல் மத நூல்கள் வரை அனைத்தும் சொல்வது நல்லதை நினைத்தால், நல்லதே நடக்கும் என்பதை தான். இதனாலையே இன்று அதிகமான உயிர்பலிகளை ஏற்படுத்தும் போக்குவரத்து வழித்தடங்கள் மற்றும் வாகனங்களில் பல்வேறு வகையான பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு வாக்கியங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவை மனிதர்களுக்கு நல்ல சிந்தனையை தருவதோடு, பாதுகாப்பையும் நினைவு ஊட்டுவதாக அமைந்திருக்கிறது. இவ்வாறு நாம் பயன் படுத்தும் பல்வேறு சாலை பாதுகாப்பு வாசகங்களை பார்ப்போம்.

இதையும் படியுங்கள்:
வயர்லெஸ் சார்ஜிங் சாலை! ரோடு மேல போனாலே சார்ஜ் ஏறிடும்!
Road safety slogans in Tamil.
  1. தலைக்கவசம் ! உயிர்க்கவசம்!

  2. சாலை பாதுகாப்பு! நம் உயிர் பாதுகாப்பு!

  3. சாலை விதிகள்! சாவைக் குறைக்கும்!

  4. போதையில் வாகனம் ஓட்டாதீர்கள் !

  5. உங்கள் கவனம் சாலையில் இருக்கட்டும்! தொலைபேசியில் அல்ல!

  6. விபத்துக்கள் உங்களை எதிர் கொள்ளும் முன் வேகத்தை குறைத்து ஓட்டுங்கள் !

  7. சேமிக்க நினைத்தது சில நொடிகள்! சேதமடைந்தது பல உயிர்கள்!

  8. சாலையில் முந்தாதே ! அது உன் உயிரை பறிக்கும்!

  9. தாமதமான வேகம் உங்களை தாமதப்படுத்தலாம் ஆனால் அதிக வேகம் நிச்சயம் மரணத்தை ஏற்படுத்தும்!

  10. சாலை விதிகளை பின்பற்றுங்கள் அது உயிர் காக்கும்!

  11. சாலை ஒழுக்கம் பேணுபவரே ! வாழ்வின் ஒழுக்கத்தை பேணுவார் !

  12. சாலையில் வாகனம் ஓட்டும் போது எச்சரிக்கையாக இருங்கள்! சாலை விதிகளை பின்பற்றுங்கள்!

  13. நாளை வாழ இன்றே சாலை விதிகளை பின்பற்றுங்கள்!

  14. வாகனம் ஓட்டும் போது தொலைபேசியை பயன்படுத்த வேண்டாம்! அது உங்கள் குடும்பத்தை தனிமைப்படுத்தும்!

  15. சாலை விதிகளை அறிவோம்! சாலை விபத்தை தவிர்ப்போம்.!

  16. சாலை விதிகளை மதிப்பதே விபத்தில்லா வாழ்க்கையின் வழி!

  17. பொறுமையாக ஓட்டுவோம் ! பிறர் உயிர் காப்போம்!

  18. சோகத்தை தரும் வேகத்தை கைவிடுவோம்!

  19. வேகமான பயணமே! எமது இறுதிப் பயணமாக இருக்கும்!

  20. கவனச் சிதறலை ஏற்படுத்தும் கைப்பேசியை விட்டு விட்டு கவனத்துடன் வாகனத்தை செலுத்துங்கள்!

  21. மனிதநேயத்தை காக்கும் சாலை விதிகளை இன்றே பின்பற்றுவோம்! வாருங்கள்!

  22. சாலையில் சாகசம் செய்யாதே இறந்து விடுவாய்!

  23. முறையற்ற பயணம் வாழ்க்கையின் இறுதி முடிவாகவே இருக்கும்!

  24. சாலை விளக்கே எம் வாழ்க்கையின் ஒளி விளக்கு!

  25. வேகம் விவேகம் அல்ல! வேகத்தை குறைத்து விபத்தை தடுப்போம்!

  26. சாலை விதியை மதித்து நடப்பதன் மூலமே ஒரு உயிரையேனும் காத்து கொள்ள முடியும்!

  27. மனித வாழ்வின் பயணங்கள் இறுதி வரை தொடர வேண்டுமெனில் சாலை விதிகள் பேணப்படல் வேண்டும்!

  28. சுதந்திரமான பயணத்திற்கு சாலை விதிகளை பின்பற்றல் வேண்டும்!

  29. நம் விதியை தீர்மானிப்பதே சாலை விதி! சாலை விதியை பேணுவோம், அனைவரினதும் நலம் காப்போம்.!

  30. சாலை விதியை கடைப்பிடிப்போம்! அனைவரதும் உயிரை தம் உயிர் என கருதுவோம் !

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com