சாதத்தை குழையாமல் வடிக்க சில எளிய ஆலோசனைகள்!

Rice
Rice
Published on

பெண்கள் சிலர் தற்காலத்திலும் சாதத்தை குழையாமல் வடிப்பது எப்படி என்பதை தெரிந்து வைத்துக்கொள்ளாமல் இருக்கிறார்கள். சாதம் குழையாமல், பளபளவென வடிப்பது எப்படி என்பதை இந்தப் பதிவில் காண்போம்.

தண்ணீரை அடுப்பில் வைத்து கொதிநிலை வரும்போது, சற்று நேரம் ஊற வைத்துக் கழுவி சுத்தம் செய்த அரிசியை அதில் போட வேண்டும். தண்ணீர் கொதிக்கும் வரை அதிக தீயிலும், கொதிநிலை வந்ததும் மிதமான தீயிலும் அடுப்பை வைக்க வேண்டும்.

ஒரு கப் அரிசிக்கு ஒன்றரை கப் தண்ணீர் வீதம் என்ற அளவில் தண்ணீர் வைக்க வேண்டும். ஆனால், அரிசி நீளமாக இருந்தால் தண்ணீர் கொஞ்சம் கூட வைத்துக் கொள்ளலாம். அதேபோல், உலையில் உள்ள அரிசியை அடிக்கடி கிளறிக்கொண்டே இருக்கக் கூடாது. அப்படி கிளறிக்கொண்டு இருந்தால் சாதம் குழைந்து விடும். அதேபோல், மிதமான தீயில் அரிசி வெந்தால் நன்கு வேகும்.

இதையும் படியுங்கள்:
ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பான் க்ளீனிங் முறைகள்!
Rice

சாதம் வடித்த பின்னர் அதில் தண்ணீர் கோர்த்து இருந்தாலும், அரிசி உடைந்து குழைந்திருந்தாலும் போதுமான நீர் இல்லை இன்று அர்த்தம். இதோடு நீரும் சாதத்தில் இறுகிவிடும். அப்படி சாதம் குழைந்துவிட்டால் உடனே ஒரு ஸ்பூன் எண்ணெய் அல்லது வெண்ணெய் விட்டு கிளறிவிட்டால் சாதம் உதிரியாக இருக்கும். தண்ணீரை வடித்து விட்டாலும் சாதத்தில் தண்ணீர் இறங்காது. எனவே, உலைக்கு தண்ணீர் வைக்கும்போது கவனமாகப் பார்த்து வைப்பதோடு, சாதத்தில் தண்ணீர் உறைந்து இருந்தால் உடனே அகலமான பாத்திரத்தில் கொட்டி ஆற விடுவது நல்லது.

மண் பாண்டங்களில்  சமைக்கும்போது மரக்கரண்டிகளைப் பயன்படுத்துவது நல்லது. நீங்கள் சாதம் எப்படி வடித்தாலும் அது குழைந்து போனால், உலையில் அரிசி போடும்போது சிறிது உப்பு சேர்த்தால் எந்த வகையான அரிசியாக இருந்தாலும் அது வெந்து குழையாது.

இதையும் படியுங்கள்:
ஏசி அறையில் ஒரு வாளி தண்ணீர்… நிம்மதியான உறக்கத்திற்கான ரகசியம்!
Rice

முக்கியமாக, அரிசி உலையில் வேகும்போது அடுப்பின் அருகில் இருந்து சரியான பதத்தில் அதை வடித்து விட வேண்டும். குறிப்பிட்ட நேரத்துக்கு பிறகும் அதிக நேரம் அடுப்பில் சாதம் இருந்தால் குழைந்து போகும். சாதம் வெந்த உடனே வடித்த பின் பாத்திரத்தை நிமிர்த்தி அதை நன்றாகக் குலுக்கி, பின்னர் அகலமான பாத்திரத்தில் கொட்டி ஆற வைத்தால் சாதம் உதிரியாக இருக்கும்.

குக்கரில் சாதம் வேக வைக்கும்போது ஒரு டம்ளர் அரிசிக்கு ஒன்றரை டம்ளர் என்ற வீதத்தில் தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் ஒரு  விசில் விட்டு வந்தவுடன் இரண்டாவது விசில் வந்ததும் அடுப்பை அணைத்து விடவும். இப்போது சத்தம் அடங்கியவுடன் திறந்து எடுத்தால் சாதம் நன்கு வெந்து உதிரியாக இருக்கும். அதன் பிறகு அதை வேறு பாத்திரத்தில் மாற்றவும். மேற்கண்டபடி சாதத்தை வடித்தால், குழையாமல் உதிரி உதிரியாக இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com