பெற்றோர்கள் குழந்தைகளுடன் வெளியே செல்லும்போது மனதில் கொள்ள வேண்டிய பாதுகாப்பு விஷயங்கள்!

Child Protection
Child Protection
Published on

குழந்தைகளை வெளியில் கூட்டிச் செல்லும்போது பெற்றோர்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். குழந்தைகள் ஆர்வம் மிகுந்தவர்களாக இருப்பதால் சிறிய விஷயங்களையும் ஆராய முயற்சிப்பார்கள். அதனால் அவர்களின் பாதுகாப்பு, ஆரோக்கியம், வசதி ஆகியவற்றை பெற்றோர்கள் நினைவில் கொள்ள வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.

1. பாதுகாப்பு: குழந்தையை எப்போதும் கையைப் பிடித்துக் கொள்ளுதல் (கூட்டமான இடங்களில்), சாலையைக் கடக்கும்போது, போக்குவரத்து சிக்னல் மற்றும் பாதுகாப்பான பாதையைத் தேர்வு செய்தல். குழந்தைக்கு பெயர், பெற்றோர் தொடர்பு எண் கொண்ட ID அட்டை / கைப்பட்டி அணிவித்தல். கூட்டம் கூடிய இடங்களில் குழந்தையைப் பின்தொடர்ந்து கவனித்தல். குழந்தைக்கு, ‘தொலைந்தால் என்ன செய்ய வேண்டும்’ என்ற எளிய வழிகாட்டுதலைக் கற்பித்தல்.

2. ஆரோக்கியம் & உணவு: தூய்மையான குடிநீர் பாட்டிலை எடுத்துச் செல்லல், குழந்தைக்கு பழக்கப்பட்ட சிறிய ஸ்நாக்ஸ் / சத்து நிறைந்த உணவு எடுத்துச் செல்லல், சாலையோர சுத்தமற்ற உணவுகளைத் தவிர்த்தல், கடும் வெயிலில் தொப்பி, காப்புக் குடை, சன்ஸ்கிரீன் பயன்படுத்துதல், குளிரான இடங்களுக்கு செல்லும்போது சரியான வெப்ப உடைகள் அணிவித்தல்.

இதையும் படியுங்கள்:
குழந்தைகளின் பாதுகாப்பான இடமாக வீட்டை மாற்ற பயனுள்ள 10 ஆலோசனைகள்!
Child Protection

3. துணி & வசதி: காலநிலைக்கேற்ற உடை அணிவித்தல் (வெயில் - பருத்தி, குளிர் - ஸ்வெட்டர்), சுலபமாக ஓடவும் நடக்கவும்கூடிய சரியான காலணி அணிவித்தல், கூடுதல் உடைகள், டயப்பர் (சிறிய குழந்தைகளுக்கு) எடுத்துச் செல்லல், ருமால் / tissues / wet wipes எடுத்துச் செல்லல்.

4. பொது இடங்களில் நடத்தை: குழந்தைக்கு மற்றவர்களைத் தொந்தரவு செய்யக் கூடாது என்று முன்பே சொல்லிக் கொடுக்கல், பூங்கா / விளையாட்டு தளங்களில் பாதுகாப்பான விளையாட்டு கருவிகள் மட்டும் பயன்படுத்தச் செய்தல், குப்பை போட வேண்டிய இடம் பற்றி அறிவுறுத்தல் (தூய்மை பழக்கம்).

5. அவசர நிலை முன்னெச்சரிக்கை: சிறிய First Aid Kit (ப்ளாஸ்டர், ointment, bandage, சானிடைசர்) எடுத்துச் செல்லல், குழந்தைக்கு அருகில் உள்ள போலீஸ் நிலையம் / பாதுகாப்பு காவலர் இருப்பின் காட்டிக் கொடுத்தல், பெற்றோரின் கைப்பேசி எப்போதும் சார்ஜ் நிலையில் வைத்திருத்தல்.

6. மன அழுத்தம் இல்லாமல் மகிழ்ச்சி தருதல்: அதிகக் கட்டுப்பாடு விதிக்காமல் பாதுகாப்பான சுதந்திரம் வழங்கல், குழந்தைகளுடன் பேசி, அவர்களை ஆர்வமூட்டும் விதமாக வழிகாட்டுதல், அவர்களின் சிறு கேள்விகளுக்கும் பொறுமையாக பதிலளித்தல், வெளி உலக அனுபவம் குழந்தைக்கு மகிழ்ச்சியாகவும் பயிற்சியாகவும் மாறுவதை உறுதி செய்தல்.

இந்த Checklistஐ மனதில் அச்சிட்டு வைத்துக்கொண்டு, வெளியில் செல்லும் முன் ஒவ்வொரு புள்ளியையும் சரிபார்க்கலாம்.

இதையும் படியுங்கள்:
குழந்தைகளின் அசைவுகளில் ஒளிந்திருக்கும் அசாத்திய திறமைகள்!
Child Protection

குழந்தைகள் நண்பர்களுடன் பழகுவதை கண்காணிக்க:

1. தொடர்ந்து உரையாடல்: குழந்தையின் தினசரி அனுபவங்களைக் கேட்கும் பழக்கம் கொண்டிருங்கள். ‘இன்று பள்ளியில் யாருடன் விளையாடினாய்?’, ‘உனக்கு யாருடன் அதிகம் நண்பத்துவம் உள்ளது?’ போன்ற கேள்விகளை அன்பாகக் கேளுங்கள். குழந்தையின் பேச்சில் வரும் பெயர்களை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

2. நண்பர்களை அறிதல்: வீட்டிற்கு நண்பர்களை அழைத்து வர ஊக்குவிக்கவும். அவர்களுடன் நேரம் செலவழித்து, நடத்தையை கவனிக்கவும். அவர்கள் நண்பர்களின் குடும்பத்தினரையும் அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள்.

3. செயல்களில் பங்குபற்றுதல்: பள்ளி நிகழ்ச்சிகள், விளையாட்டுக்கள், பிறந்த நாள் விழாக்கள் போன்றவற்றில் பங்கேற்கவும். அங்கு குழந்தையின் பழக்க வழக்கத்தையும், நண்பர்களுடன் நடக்கும் தொடர்புகளையும் கவனிக்கலாம்.

4. அடையாளங்களை கவனித்து நம்பிக்கையுடன் அணுகுதல்: குழந்தை திடீரென மன அழுத்தம், அலட்சியம் அல்லது கோபம் காட்டினால், நண்பர்களின் தாக்கம் இருக்கலாம். அவர்கள் பேசும் சொற்கள், நடத்தையில் மாற்றம் ஏற்பட்டதா என்பதை கவனிக்கவும். ‘நான் உன்னை நம்புகிறேன், ஆனால் சில விஷயங்கள் பற்றி கவனமாக இருக்கணும்’ என்று மென்மையாக சொல்லுங்கள்.

கண்காணிப்பை கட்டுப்பாடாக அல்லாமல், அன்பான கவனிப்பாக மாற்றினால் குழந்தைகள் திறந்த மனதுடன் பெற்றோரை நம்புவார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com