உப்பு பரிகாரம்: அதிர்ஷ்டம், செல்வம் பெருகும்; வீட்டை சூழ்ந்திருக்கும் கெட்ட சக்திகள் விலகும்!
வெள்ளிக்கிழமைகளில் உப்பு வாங்கினால் வீட்டில் செல்வம் சேரும் என்பது நம்பிக்கை. குளிக்கும்போது நீரில் உப்பை கலந்து குளித்தால் நம்மைச் சுற்றியிருக்கும் கெட்ட சக்திகள் விலகிப் போய் விடுமாம். கையில் உப்பை வைத்துக் கொண்டு இருக்கும்போதே நம் உடலில் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். வீட்டில் அனைத்து செல்வங்களும் நிலைத்து நிற்க வேண்டும் என்பதற்காக புது வீட்டிற்கு குடி போகும்போது உப்பை முதலில் எடுத்துச் செல்வார்கள். பணப் பிரச்னைகள் தீர இப்படிச் செய்யலாம்.
அதிகாலையில் எழுந்ததும் ஒரு கை நிறைய உப்பை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு வெள்ளைக் காகிதத்தை மடியில் வைத்துக் கொண்டு இரண்டு கைகளையும் இறுக்கமாக மூடிக் கொள்ளுங்கள். பின்பு கிழக்குப் பக்கமாக அமர்ந்து கொண்டு உங்களுக்கு என்ன வேண்டுமோ அதை சத்தமாகவோ அல்லது மௌனமாகவோ திரும்பத் திரும்ப பத்து நிமிடம் வரை சொல்லிக்கொண்டே இருங்கள்.
மனதில் உள்ள குழப்பங்கள், கோபங்கள், ஆசைகள் அனைத்தையும் வெளிப்படுத்துங்கள். இறுதியில் உங்கள் கையில் உள்ள உப்பை பேப்பரில் மடித்து தண்ணீரில் கரையுங்கள்.
பொதுவாக, உப்பு நம்மைச் சுற்றி அதிக பாசிட்டிவ் அலைகளை உருவாக்கும் சக்தி கொண்டது. இதுவே இந்த முறையின் ரகசியம். பொதுவாகவே, கோயிலுக்குச் செல்லும்போது உப்பு வாங்கிப் போடுவது வழக்கம். அதற்குக் காரணம் கோயிலைச் சுற்றி அதிக நேர்மறை எண்ணங்கள், அலைகள் உருவாகக்தான். அங்கிருக்கும் நேர்மறை எண்ணங்கள் நம்மைச் சுற்றி நல்ல தெளிவையும், நம்பிக்கையையும் தருவதாக இருக்கும்.
கைக்குள் உப்பை வைத்துக் கொண்டு நேர்மறையாகப் பேசினால் உடலில் நேர்மறை சக்தி அதிகரிக்கும். நேர்மறை அலைகள்தான் நம்மைச் சுற்றி நல்ல வைப்ரேஷனையும், எண்ணத் தெளிவையும் கொடுக்கும். எண்ணம் மேம்பட்டு தெளிவான சிந்தனை இருந்தாலே நாம் செய்யும் செயல்கள், எண்ணங்களில் மேன்மை பெருகும்.
உப்பு நேர்மறை சக்தியை தருவதோடு, உடலில் நோய்கள் அண்டாமல் கிருமித் தொற்றுக்களை அகற்றுகிறது. நம்மை உடலாலும், மனதாலும் நலமாக வைக்க உதவும். உப்பை எல்லா காலங்களிலும் பயன்படுத்தி நலம் பெறுவோம்.