Salt
Salt

ஒரு ரூபாய் உப்பு போதும்! உங்க வீட்டுல இருக்குற 5 பெரிய பிரச்சனைகளை ஈஸியா சரிபண்ணிடலாம்!

Published on

‘உப்பில்லா பண்டம் குப்பையிலே’ன்னு நம்ம பெரியவங்க சும்மாவா சொன்னாங்க? சாப்பாட்டோட சுவையைத் தீர்மானிக்கிறதே இந்த உப்புதாங்க. ஆனா, நம்ம சமையலறையில இருக்குற இந்த சாதாரண உப்பை வெச்சு, ஒரு சூப்பர் ஹீரோ மாதிரி பல வேலைகளை செய்யலாம்னு சொன்னா நம்புவீங்களா? 

ஆமாங்க, வீட்டை சுத்தம் செய்றதுல இருந்து, விரும்பத்தகாத வாசனையை விரட்டுறது வரைக்கும் பல விஷயங்களுக்கு உப்பு ஒரு சூப்பர் ஸ்டார் மாதிரி செயல்படும். இனிமே, காஸ்ட்லியான கெமிக்கல் கிளீனர்கள் வாங்குறதுக்கு முன்னாடி, இந்த எளிய உப்போட மற்ற அவதாரங்களைப் பற்றி தெரிஞ்சுக்கலாம் வாங்க.

பளிச் பளிச் உப்பு!

உங்க வீட்டு சிங்க், டைல்ஸ் இடுக்குல இருக்குற விடாப்பிடியான கறைகளைப் பார்த்து கவலைப்படாதீங்க. கொஞ்சம் உப்பை எடுத்து, அதோட எலுமிச்சைச் சாறு அல்லது வினிகரைக் கலந்து ஒரு பேஸ்ட் மாதிரி செஞ்சுக்கோங்க. இந்த பேஸ்ட்டை வெச்சு கறை படிஞ்ச இடத்துல தேய்ச்சுப் பாருங்க, அப்படியே பளிச்னு ஆகிடும். 

இதையும் படியுங்கள்:
5 ஸ்டார் ஹோட்டலில் ஒரு 'சாயா கடை'!
Salt

அடிபிடிச்ச பாத்திரங்கள், எண்ணெய் பிசுக்குன்னு எதுவா இருந்தாலும் சரி, இந்த உப்பு பேஸ்ட் போட்டுத் தேய்ச்சா மாயமா மறைஞ்சுபோகும். முக்கியமா, கருத்துப்போன உங்க வீட்டு செம்புப் பாத்திரங்கள் மேல இந்த பேஸ்ட்டை தடவி தேய்ச்சா, புதுசு மாதிரி தங்கம் போல ஜொலிக்க ஆரம்பிச்சுடும்.

கெட்ட வாடையை விரட்டும்!

சில பேர் ஷூவைக் கழட்டுனாலே போதும், வீடு ரெண்டாகிடும். அந்த மாதிரி ஷூக்களில் இருந்து வர்ற துர்நாற்றத்தை விரட்ட, ராத்திரி தூங்கப்போகும் முன் கொஞ்சம் உப்பை ஷூவுக்குள் தூவி விடுங்கள். காலையில் அதைத் தட்டிவிட்டுப் பாருங்கள், கெட்ட வாசனை இருந்த இடம் தெரியாமல் போயிருக்கும். 

இதேபோல, நம்ம வீட்டு ஃபிரிட்ஜைத் திறந்தாலே சில சமயம் ஒரு மாதிரி மசாலா வாடை அடிக்கும். அதைத் தவிர்க்க, ஒரு சின்ன கிண்ணத்தில் உப்பைப் போட்டு ஃபிரிட்ஜின் ஒரு மூலையில் வைத்துவிட்டால் போதும், எல்லா கெட்ட வாடையையும் அதுவே உறிஞ்சிவிடும்.

சமையலறை சிக்கல்களுக்கு உடனடித் தீர்வு!

கிச்சன் சிங்குல பாத்திரம் கழுவும்போது தண்ணி போகாம டிராஃபிக் ஜாம் ஆகுதா? உடனே பிளம்பருக்கு போன் பண்ணாதீங்க. ஒரு கைப்பிடி உப்பையும், கொஞ்சம் சமையல் சோடாவையும் சிங்க் துளையில் கொட்டி, அதன் மேல் கொதிக்கிற சுடுதண்ணீரை ஊற்றுங்கள். அடைப்புக்குக் காரணமான அழுக்குகள் கரைந்து, குழாய் சுத்தமாகிவிடும். 

இதையும் படியுங்கள்:
விமர்சனம்: இட்லி கடை - பாதி சுவை மீதி சவ சவ!
Salt

அதேபோல, கடையில் இருந்து வாங்கிட்டு வர்ற காய்கறிகள், பழங்களில் கண்ணுக்குத் தெரியாத கிருமிகளும், பூச்சி மருந்து எச்சங்களும் இருக்கலாம். அவற்றைப் பயன்படுத்தும் முன், ஒரு பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி, அதில் கொஞ்சம் கல் உப்பைப் போட்டு, காய்கறிகளை ஒரு பத்து நிமிடம் ஊறவையுங்கள். பிறகு நல்ல தண்ணீரில் கழுவினால், காய்கறிகள் முழுமையாகச் சுத்தமாகிவிடும்.

இனிமேல், உப்பை சமையலுக்கு மட்டும் பயன்படுத்தாம, இந்த மாதிரி சின்ன சின்ன வீட்டுப் பிரச்சனைகளைத் தீர்க்கவும் பயன்படுத்திப் பாருங்க. 

logo
Kalki Online
kalkionline.com