

நாம் சில பழக்கங்களை முன்னோர்களிடம் இருந்து கற்றுக் கொண்டுள்ளோம். அவை அனைத்திற்கும் பின்னாலும் அறிவியல் காரணம் இருக்கிறது என்பதை இப்பதிவில் மூலம் அறிந்து கொள்வோம்.
1. வாகனங்களுக்கு எலுமிச்சை வைப்பதன் பின்னாலுள்ள அறிவியல் காரணம்
நாம் பொதுவாக புதிய வாகனங்களுக்குப் பூஜைகள் செய்து அதன் அடியில் எலுமிச்சையை வைப்பது வழக்கம். இன்றும் காலம் காலமாக இருக்கக்கூடிய பழக்கமாகும் காரணம் என்ன தெரியுமா? முந்தைய காலங்களில் போக்குவரத்து என்றாலே அது மாட்டுவண்டி போக்குவரத்துதான். அப்படி மாடுகள் பல்வேறு இடங்களுக்குச் சேர்த்தும்போது அதன் கால்களில் காயம் ஏற்பட வாய்ப்புண்டு.
அதனால் தொற்றுக் கிருமிகள் ஏற்பட்டு மாடுகளின் உடல்நிலைமை பாதிக்கப்படலாம். இதனை கருத்தில் கொண்டே நம் முன்னோர்கள் வண்டியை எடுப்பதற்கு முன்பு மாடுகளின் நான்கு கால்களுக்கிடையில் எலுமிச்சை பழத்தை வைத்து மிதிக்கும் படி செய்தார்கள். அவ்வாறு அவை பழத்தை மிதிக்கும் போது எலுமிச்சைச்சாறு மாடுகளின் கால்களில் பட்டு காலில் இருக்கும் தொற்றுக்களை அழித்துவிடும்.
இதன் காரணமாகவே முன்னோர்கள் வண்டியை எடுப்பதற்கு முன் எலுமிச்சையை பயன்படுத்தினார்கள். இது நாளடைவில் மருவி மருவி சக்கரத்தின் அடியில் அதை வைக்கும் பழக்கமாக மாறியது அவாவாறு பழம் நசுக்கப்படும்போது கண் திருஷ்டி கழிவாக நம்பப்படுகிறது. அதனாலேயே பூஜை செய்யும்போது வாகனங்களின் சக்கரத்தின் கீழ் எலுமிச்சையை வைக்கிறோம்.
2. ஆரத்தி எடுப்பதில் மறைந்திருக்கும் ஆச்சரியமான அறிவியல் காரணம்
பொதுவாக நாம் யார்யார்க்கலாம் ஆரத்தி எடுப்போம். புதுமணத்தம்பதிகள், குழந்தை பிறந்து வீட்டுக்கு வரும் தாய்மார்கள் போன்றோர்க்கே ஆரத்தி எடுப்போம்.
நாம் ஆரத்தி எடுக்கும்போது அதில் மஞ்சள் மற்றும் சுண்ணாம்பை பயன்படுத்துகிறோம். மஞ்சள் மற்றும் சுண்ணாம்பை கலக்கும் போது சிவப்பு நிறம் கிடைக்கும். இதில் வெற்றிலையுடன் கற்ம்பூரத்தை ஏற்றி ஆர்த்தி சுத்தும்போது உருவாகும் நெருப்பில் கீழே உள்ள சுண்ணாம்பானது ஆவியாகும் சுண்ணைம்பிற்கு இயற்கையிலேயே தொற்றை நீக்கும் ஆற்றல் உண்டு. இந்த ஆவி புதிதாக வருபவர்கள் மீது படும்போது அவர்களின் மீதுள்ள தொற்றுக் கிருமிகள் அழியும் என்பதால் முற்காலத்தில் இப்படி ஆர்த்தி எடுத்து வீட்டிற்கு வருபவர்களை வரவேற்றார்கள்.
அதுமட்டுமல்ல, முற்காலத்தில் வீட்டிற்கு வருகை தரக்கூடிய வர்கள் அனைவரும் பெரும்பாலும் தொலைவிலிருந்து வருபவர்கள். ஆதலால் அவர்கள் வரும்போது பல தொற்றுக்களுக்கு ஆளாகியிருக்கலாம். அவற்றை அழிக்கும் பொருட்டே ஆர்த்தி பழக்கம் ஏற்பட்டது. குழந்தை பெற்ற தாய்மார்கள் எதிர்ப்பு சக்தி குறைவாகவே இருப்பர். வெளியிடங்களில் இருந்து வரும்போது இந்த கிருமிநாசினிகளை விரட்டுவதற்காகவே ஆரத்தி எடுத்து வரவேற்கும் பழக்கத்தை கடைப்பிடித்தனர்.
3. தரையில் அமர்ந்து சாப்பிடுவதில் இருக்கும் ஆரோக்கியமான அறிவியல் காரணம்
சாப்பிட தரையில் உட்காரும்போது நம் உடலானது அஷ்ட பத்மாசனம் என்ற நிலையில் இருக்கும். இத்தகைய நிலையில் உட்கார்ந்து சாப்பிடுவது நம் செரிமான மண்டலத்தை சீராக வைக்கும் சாப்பிடும்போது எந்தவித சிக்கலும் இன்றி செரிமானம் அடைய வேண்டும் என்பதற்காகவே நம் முன்னோர்கள் தரையில் உட்காரும் பழக்கத்தைக் கடைப்பிடித்தனர்.
நாம் தொடர்ந்து சில பழக்கங்களை கடைபிடித்து வந்தாலும் அதன் பின்னால் இருக்கும் அறிவியல் காரணங்களையும் தெரிந்துகொள்வது நல்லது.
இந்தப் பதிவை வாசிப்பதன் மூலம், நம் முன்னோர்களின் பழக்கவழக்கங்களை வெறும் சம்பிரதாயங்களாகப் பார்க்காமல், ஆரோக்கியத்தையும் பாதுகாப்பையும் மேம்படுத்தும் ஒரு வாழ்வியல் நுணுக்கமாகக் கருதி, அவற்றை நம்பிக்கையுடனும் பெருமையுடனும் பின்பற்றும் தெளிவைப் பெறுவீர்கள்.