வாட்டர் பாட்டில்ல ஏன் இத்தனை கோடு இருக்கு தெரியுமா.. ஷாக்கிங் உண்மை இதோ!

பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில்களில் உள்ள கோடுகள் வெறும் அழகுக்காக இல்லை; அதன் பின்னணியில் உள்ள வியக்க வைக்கும் பாட்டில் வடிவமைப்பு மற்றும் அறிவியல் ரகசியங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
Water bottle engineering பாட்டில் வடிவமைப்பு
Water bottle engineering பாட்டில் வடிவமைப்புAI Image
Updated on

நமது அன்றாட வாழ்வில் பிளாஸ்டிக் வாட்டர் பாடல்களின் பயன்பாடு அதிகரித்து விட்டது. அலுவலகம் செல்வதானாலும் சரி, நீண்ட தூரப் பயணமானாலும் சரி, அல்லது உடற்பயிற்சிக் கூடத்திற்குச் செல்வதானாலும் சரி, நாம் அனைவரும் நிச்சயமாக ஒரு தண்ணீர் பாட்டிலை கையில் வைத்திருப்போம். ஆனால், அந்த பாட்டில்களை என்றாவது கூர்ந்து கவனித்திருக்கிறீர்களா?

மார்க்கெட்டில் விற்கப்படும் பெரும்பாலான பாட்டில்களின் மேல் வளைவான கோடுகள், மேடு பள்ளங்கள் இருப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம். இது பாட்டிலின் அழகைக் கூட்டுவதற்காக உருவாக்கப்பட்ட வெறும் டிசைன் என்று மட்டுமே நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மை என்னவென்றால், இதன் பின்னணியில் பல ஆச்சரியமூட்டும் அறிவியல் மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்கள் ஒளிந்து கிடக்கின்றன.

வலிமையைத் தரும் அமைப்பு!

பொதுவாக பிளாஸ்டிக் பாட்டில்களைத் தயாரிக்க பாலிஎதிலீன் டெரிப்தாலேட் (Polyethylene Terephthalate) என்ற பிளாஸ்டிக் பொருள் பயன்படுத்தப்படுகிறது. நிறுவனங்கள் தங்கள் உற்பத்திச் செலவைச் சேமிக்கவும், பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்கவும் மிகவும் மெல்லிய பிளாஸ்டிக்கையே பயன்படுத்துகின்றன. இந்த நிலையில் பாட்டில்கள் எந்தவொரு கோடுகளும் இல்லாமல் தட்டையாக இருந்தால் என்ன நடக்கும் என்று யோசித்துப் பாருங்கள்.

நாம் கையால் லேசாகப் பிடித்தவுடனேயே அவை காகிதம் போல எளிதில் நசுங்கிவிடும். இதைத் தவிர்க்கவே பொறியாளர்கள் இந்த மேடு பள்ளங்களை வடிமைத்துள்ளனர். இந்த கோடுகள் பாட்டிலின் கட்டமைப்பிற்கு கூடுதல் வலிமையைத் தருகின்றன. இதனால் ஆயிரக்கணக்கான பாட்டில்களை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வாகனங்களில் கொண்டு செல்லும் போது கூட, அடியில் உள்ள பாட்டில்கள் பாரம் தாங்காமல் நசுங்கிப் போவதில்லை.

கைகளுக்குக் கிடைக்கும் பிடிமானம்!

கோடைக் காலங்களில் நாம் குளிர்சாதனப் பெட்டியிலிருந்து குளிர்ந்த தண்ணீர் பாட்டிலை வெளியே எடுக்கும் போது, அதன் வெளிப்பரப்பில் நீர்த்திவலைகள் படிந்திருக்கும். பாட்டில் வழுவழுப்பாக இருந்தால் அது மிக எளிதாக நமது கைகளிலிருந்து நழுவி கீழே விழுந்துவிடும். குறிப்பாக பயணம் செய்யும்போதோ அல்லது வாகனங்களை ஓட்டும்போதோ இது பெரிய சிரமத்தை ஏற்படுத்தும்.

இதைத் தடுக்கவே இந்த பாட்டில் வடிவமைப்பு பெரிதும் உதவி செய்கிறது. பாட்டிலின் மேலுள்ள இந்த கோடுகள் நமது கைகளுக்கு மிகச் சிறந்த பிடிமானத்தை வழங்குகின்றன. நமது கைகளில் எவ்வளவுதான் வியர்வை இருந்தாலும் அல்லது பாட்டில் ஈரப்பதத்துடன் காணப்பட்டாலும், இந்த வடிவமைப்பின் காரணமாக அது வழுக்கி விழாமல் பாதுகாப்பாக நமது கைகளில் ஒட்டிக்கொள்கிறது.

இதையும் படியுங்கள்:
கொசுக்கள்: சிறிய பூச்சி... பெரிய அச்சுறுத்தல்! - நாம் அறியாத உண்மைகள்!
Water bottle engineering பாட்டில் வடிவமைப்பு

காற்றழுத்தத்தைச் சமாளிக்க!

வெப்பநிலை அல்லது உயரத்தில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப பாட்டிலுக்குள் இருக்கும் தண்ணீரின் அளவும் விரிவடையும் அல்லது சுருங்கும். எடுத்துக்காட்டாக, சமவெளியில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து மலைப் பிரதேசங்களுக்கு பாட்டில்களைக் கொண்டு செல்லும் போதோ, அல்லது சுட்டெரிக்கும் வெயிலில் காரின் உள்ளே பாட்டிலை வைக்கும் போதோ உள்ளே காற்றழுத்தம் பல மடங்கு அதிகரிக்கும்.

இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் இந்த கோடுகள் ஒரு ஸ்ப்ரிங் போல செயல்படுகின்றன. அவை வளைந்து கொடுத்து உள்ளே ஏற்படும் அதிகப்படியான அழுத்தத்தை சீராக உள்வாங்கிக் கொள்கின்றன. இதன் விளைவாக பாட்டிலின் அசல் வடிவம் எந்தவொரு சேதமும் அடையாமல் அப்படியே பாதுகாக்கப்பட்டு நுகர்வோரைச் சென்றடைகிறது. இது ஒரு அற்புதமான பாட்டில் வடிவமைப்பு தொழில்நுட்பமாகும்.

இதையும் படியுங்கள்:
சிறிய நகரங்களில் வீட்டிலிருந்தே தொழில் தொடங்குவது எப்படி? குறுகிய காலத்தில் லாபம் ஈட்ட வழிகள்!
Water bottle engineering பாட்டில் வடிவமைப்பு

இந்தச் சிறிய கோடுகள் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைத்து சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் கட்டுப்படுத்தவும் பெரிதும் உதவுகின்றன. மறுசுழற்சி செய்யும் போது பாட்டிலை எளிதாக மடித்து வைக்க இந்த வடிவமைப்பு கை கொடுக்கிறது. மேலும் நிறுவனங்களின் பிராண்ட் லேபிள்கள் கிழியாமல் கச்சிதமாக ஒட்டிக் கொள்ளவும் இவை உதவுகின்றன. 

logo
Kalki Online
kalkionline.com