
வீட்டில் கண்ணாடி மாட்டியிருப்போம். அந்த கண்ணாடியை எப்படி சுத்தம் செய்ய வேண்டும் என்று தெரியுமா? எலுமிச்சைச்சாறை கண்ணாடியில் துடைத்து விட்டு பேப்பர் கொண்டு துடைத்தால் கண்ணாடி பளிச்சென்று இருக்கும்.
முகம் பார்க்கும் கண்ணாடி ஜன்னல்கள் இவற்றில் உள்ள கண்ணாடிகளை வெறும் தண்ணீரைக்கொண்டு சுத்தம் செய்யாமல் ஈரமான துணியை கொண்டு துடைத்துவிட்டு செய்தித்தாள்களை பயன்படுத்தினால் கண்ணாடியினுள் ஈரம் உறிஞ்சப்பட்டு தண்ணீர் கறைகளும் அகன்றுவிடும்.
வெதுவெதுப்பான தண்ணீரில் வினிகரை கலந்து கண்ணாடியின் மேல் தெளித்து பேப்பர் கொண்டு துடைத்தால் கண்ணாடி பளபளவெனமின்னும்.
கறைபிடித்த கண்ணாடி கதவுகளாக இருந்தால் வெதுவெதுப்பான நீரில் இரண்டு சொட்டு நீலம் போட்டு துடைத்தால் கண்ணாடிகள் பளிச்சென இருக்கும்.
மரச்சாமான்கள் பளபளக்க மண்ணெண்ணெய் மற்றும் நல்லெண்ணையை கலந்து அதில் துணியை நனைத்து துடைக்க வேண்டும்.
கண்ணாடியில் ஒட்டிய பெயிண்டை சூடான வினிகரால் துடைத்தால் போய்விடும்.
கொஞ்சம் நீரில் கடுகு எண்ணெய் கலந்து மிருதுவான துணியில் நனைத்து மரச்சாமான்களை துடைத்தால் வார்னிஷ் செய்ததுபோல் இருக்கும்.
வீட்டிற்கு வெள்ளை அடிக்கும்போது கதவுகளில் உள்ள கைப்பிடிகளில் ஒரு பிளாஸ்டிக் உறையை பொருத்தி கட்டி விட்டால் வெள்ளை அடிக்கும்போது பெயிண்ட் அவற்றின் மேல் விழுந்து அழுக்காகாது.
ஒற்றை அடிக்கும்போது ஒட்டடை குச்சியின் நுனியில் ஈர துணியை சுற்றி எடுத்தால் ஒட்டடை அதிலேயே ஒட்டிக்கொண்டு கீழே விழாது.
கதவுகளில் உள்ள கீல் எண்ணெய் இல்லாமல் சத்தம்போட்டால் அந்த இடத்தில் பென்சிலால் நன்கு தேய்த்துவிட்டால் சத்தம் வருவது நின்றுவிடும்.
மேஜைகளில் உள்ள இழுப்பறைகளை சுலபமாக திறந்து மூட ஓரங்களில் சிறிது சோப்பு அல்லது மெழுகை தேய்த்தால் சுலபமாக திறந்து மூடலாம்.
நாற்காலிகளுக்கு போடும் மெழுகு பாலீஷை ஜன்னல்களுக்கும் போட்டால் சுத்தம் செய்வது எளிது.
அம்மோனியாவை நிறைய சோப்பு நீரில் கலந்து கறைகள் உள்ள வெள்ளை கதவுகளை துடைத்தால் கறைகள் மறைந்து அழகான தோற்றம் தரும்.
நாற்காலிகளை நகர்த்தும்போது தரையில் கீறல் விழாமல் இருப்பதற்கு அவற்றின் கால்களில் காலுறைகளை மாட்டி வைக்கலாம்.
வால் பேப்பர்களில் குழந்தைகள் மெழுகு கிரேயான்களால் கிறுக்கி விட்டால் மெல்லிய உப்புத்தாள் அல்லது உலர்ந்த ஸ்டீல்வுல் கொண்டு மெதுவாக தேய்த்தால் கிறுக்கல்கள் தெரியாது.
சுவரில் உள்ள சிறிய ஓட்டைகளை பற்பசையினால் அடைத்து காய்ந்த பின் சுவரின் நிறத்தை அதன் மீது பூசினால் சுவர் அழகாகிவிடும்.
வரவேற்பறையில் உள்ள சோபா செட்களில் கீறல் இருந்தால் கிட்டத்தட்ட அதே நிறம் உள்ள லிப்ஸ்டிக்கை தேய்த்து ஒரு துணியால் துடைத்துவிட்டால் கீறல் தெரியாது.