2030ல் வளர்ச்சி காணும் துறைகள்: 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான வழிகாட்டி!

Growing sectors
Growing sectors
Published on

12ஆம் வகுப்பு அறிவியல் (PCMB/PCM/PCB):

அறிவியல் பிரிவைத் தேர்ந்தெடுத்த மாணவர்களுக்கு எதிர்காலத்தில் பல வாய்ப்புகள் உள்ளன. டேட்டா சயின்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) துறைகள் மிக வேகமாக வளர்ந்து வருகின்றன. M.Sc. டேட்டா சயின்ஸ், B.Tech/M.Tech in AI, மெஷின் லேர்னிங், மற்றும் ரோபோட்டிக்ஸ் போன்ற படிப்புகள் தொழில்நுட்ப உலகில் முன்னணியில் உள்ளன. இவை தரவு பகுப்பாய்வு, ஆட்டோமேஷன் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்கு அடித்தளமாக அமைகின்றன.

பயோடெக்னாலஜி மற்றும் ஜெனடிக் இன்ஜினியரிங் துறைகளும் முக்கியமானவை. B.Sc/M.Sc. ஜெனடிக்ஸ், பயோ-டெக் போன்ற படிப்புகள் மருத்துவம், மரபணு ஆராய்ச்சி, உணவு தொழில்நுட்பம் ஆகியவற்றில் புரட்சியை ஏற்படுத்துகின்றன.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் துறைகள் சூழல் பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மைக்கு முக்கியத்துவம் அளிக்கின்றன. கிரீன் எனர்ஜி, சோலார் மற்றும் விண்ட் எனர்ஜி இன்ஜினியரிங் போன்றவை எதிர்காலத்தில் தேவைப்படும்.

ஹெல்த்கேர் மற்றும் பயோமெடிக்கல் இன்ஜினியரிங் துறைகளில் BAMS, MBBS, BDS, MLT போன்ற படிப்புகள் AI மற்றும் பிரிசிஷன் மெடிசின் மூலம் மேம்படுத்தப்படுகின்றன.

12ஆம் வகுப்பு வணிகவியல்:

வணிகவியல் மாணவர்களுக்கு நிதி மற்றும் ஃபின்டெக் துறைகள் சிறந்த வாய்ப்புகளை வழங்குகின்றன. CA, CFA, MBA (Finance) போன்ற படிப்புகள் பாரம்பரிய நிதி மேலாண்மையை மேம்படுத்துகின்றன. பிளாக்செயின் மற்றும் கிரிப்டோகரன்சி தொழில்நுட்பமும் வளர்ந்து வருகிறது.

இ-காமர்ஸ் மற்றும் டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறைகள் இன்றைய டிஜிட்டல் உலகில் முக்கிய பங்கு வகிக்கின்றன. MBA (Marketing), விளம்பரம், வெளிநாட்டு வர்த்தகம் போன்றவை வளர்ச்சி பெறுகின்றன.

மேலாண்மை மற்றும் தொழில்முனைவு துறைகளில் MBA, சர்வதேச வணிகம், ஸ்டார்ட்அப்கள், தொழில்நுட்ப அடிப்படையிலான தொழில்கள் முன்னேற்றம் காணும்.

12ஆம் வகுப்பு கலை (ARTS):

கலைப் பிரிவு மாணவர்களுக்கு கிரியேட்டிவ் மற்றும் டிஜிட்டல் மீடியா துறைகள் பிரகாசமான எதிர்காலத்தை அளிக்கின்றன. ஃபில்ம் மேக்கிங், எடிட்டிங், VFX, AR/VR, கன்டென்ட் கிரியேஷன் போன்றவை வேகமாக வளர்கின்றன.

உளவியல் மற்றும் சமூக அறிவியல் துறைகளில் M.A Psychology, HR, கவுன்சிலிங், சமூகவியல் போன்றவை முக்கிய இடம் பெறுகின்றன.

வெளிநாட்டு மொழி மற்றும் சர்வதேச உறவுகள் துறைகள் பன்மொழி வேலைகள், சர்வதேச வணிக ஆலோசகர் பணிகளுக்கு வழிவகுக்கும்.

இதையும் படியுங்கள்:
ஒழுக்கத்தில் சிறந்த குழந்தைகள் - வளர்க்க 6 விதிகள்
Growing sectors

2030 இல்:

2030ஆம் ஆண்டில் AI, டேட்டா சயின்ஸ், பயோடெக்னாலஜி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, டிஜிட்டல் மார்க்கெட்டிங், ஃபின்டெக், AR/VR, ஹெல்த்கேர் போன்ற துறைகள் மிக வேகமாக வளர்ச்சி காணும். இவை தொழில்நுட்பம் மற்றும் புதுமையை அடிப்படையாகக் கொண்டவை.

அதே நேரத்தில், சாஃப்ட் ஸ்கில்ஸ் (மென்திறன்கள்), கிரியேட்டிவிட்டி (படைப்பாற்றல்), மற்றும் மல்டிடிஸிப்ளினரி நாலெட்ஜ் (பல்துறை அறிவு) ஆகியவையும் மிக முக்கியமாக இருக்கும். மாணவர்கள் தங்கள் ஆர்வத்தையும் திறமையையும் புரிந்து, எதிர்கால தேவைகளுக்கு ஏற்ப தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். இந்தத் துறைகள் உலகளாவிய மாற்றங்களுக்கு ஏற்ப வளர்ந்து, புதிய வாய்ப்புகளை உருவாக்கும்.கல்வியில் சிறந்து உங்கள் வாழ்வில் ஜொலித்திட வாழ்த்துகள்.

இதையும் படியுங்கள்:
கெட்ட புள்ளயா நீங்க? இந்த 6 குணங்கள் உங்களுக்கு இருந்தால், உடனே மாத்திக்கோங்க!
Growing sectors

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com