ஷவர் மற்றும் பைப்புகளில் இருக்கும் துருக்கறைகளை காணாமல் ஆக்கும் சிம்பிள் வீட்டு வைத்தியம்!

Showerhead Cleaning tips
Showerhead Cleaning tips
Published on

தினமும் தண்ணீர் புழங்கும் இடம் என்பதால் நமது வீட்டு பாத்ரூம்களில் இருக்கும் ஷவர் மற்றும் பைப்புகள் சீக்கிரமே பொலிவிழந்துவிடும். பைப்புகளின் மேல் இருக்கும் பளபளப்பான கோட்டிங் லேசாக உரிக்கப்பட்டால் கூட, உள்ளே இருக்கும் இரும்புப் பகுதி தண்ணீர்ப் பட்டு உடனடியாக துருப்பிடிக்க ஆரம்பித்துவிடும். இப்படி பழுப்பு நிறத்தில் துருப்பிடித்துக் கிடப்பதைப் பார்த்தாலே நமக்கு ஒருவித எரிச்சல் வரும். 

அதுமட்டுமில்லாமல் இந்த துரு தண்ணீரில் கலந்து ஒரு மாதிரி மெட்டல் வாடையையும், பாத்ரூம் சிங்கில் மோசமான கறைகளையும் உருவாக்கும். இதைச் சரிசெய்ய கடைகளில் விற்கும் விலையுயர்ந்த கெமிக்கல்களைத் தேடிப்போக வேண்டிய அவசியமே இல்லை. நமது வீட்டில் இருக்கும் சாதாரண பொருட்களை வைத்தே இந்த துருக்கறைகளை மிக எளிதாகச் சுத்தம் செய்துவிடலாம். அதற்கான சில அருமையான வழிகளைப் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.

சமையலறைப் பொருட்களே போதும்!

  • முதலில் நமது கிச்சனில் இருக்கும் வெள்ளை வினிகரை எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு சின்ன பிளாஸ்டிக் கவரில் வினிகரை ஊற்றி, அதை அப்படியே ஷவரில் மாட்டி ஒரு ரப்பர் பேண்ட் போட்டு இறுக்கமாகக் கட்டிவிடுங்கள். ஒரு மணி நேரம் கழித்து அந்த கவரை எடுத்துவிட்டு தண்ணீரால் கழுவினால் ஷவர் புத்தம் புதிதாக மாறிவிடும். மற்ற பைப்புகளுக்கு வினிகரை நேரடியாக ஸ்ப்ரே செய்து பழைய டூத்பிரஷ் வைத்து லேசாகத் தேய்த்தாலே போதும்.

  • அதேபோல பேக்கிங் சோடாவும் துருவை எடுப்பதில் கில்லாடி. பேக்கிங் சோடாவில் கொஞ்சமாக தண்ணீர் விட்டு பசை போல கலந்து, துருப்பிடித்த இடங்களில் தடவி அரைமணி நேரம் ஊறவிட வேண்டும். பின்னர் ஒரு மென்மையான மைக்ரோஃபைபர் துணியை வைத்துத் துடைத்து எடுக்கலாம். மிக முக்கியமாக, பைப்புகளில் கீறல் விழாதவாறு மிகவும் மெதுவாகத் தேய்ப்பது அவசியம்.

  • இது ஒரு சிறந்த கிளீனிங் காம்போ ஆகும். துரு உள்ள இடங்களில் எலுமிச்சைச் சாற்றை பிழிந்து, அதன் மேல் கல் உப்பை அடர்த்தியாகத் தூவிவிடுங்கள். முப்பது நிமிடங்கள் கழித்து லேசாக ஸ்க்ரப் செய்தால் துரு இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்.

இதையும் படியுங்கள்:
வலிமையே எளிமை: கடினமான சவால்களைக் கடக்கும் சூத்திரம்! 
Showerhead Cleaning tips

கடினமான துருக்கறைகளை நீக்க!

ரொம்ப நாளாகப் படிந்துள்ள துருக்கறைகளை நீக்க கொஞ்சம் பவர்ஃபுல்லான பொருட்கள் தேவைப்படும். கடைகளில் கிடைக்கும் ஆக்சாலிக் அமிலம் கலந்த பிரத்யேக கிளீனிங் பவுடர்களைப் பயன்படுத்திப் பார்க்கலாம். அதை பேஸ்ட் போல தடவி சில நிமிடங்கள் கழித்து மென்மையாகத் துடைக்கவேண்டும்.

ரொம்பவும் மோசமான நிலையில் பைப்புகள் இருந்தால் CLR போன்ற லிக்விட்களைப் பயன்படுத்தலாம். சரிபாதி அளவு தண்ணீரில் இதைக் கலந்து, பைப்புகளை வெறும் இரண்டு நிமிடங்கள் மட்டும் ஊறவைத்து உடனே கழுவிவிட வேண்டும். இதோடு ப்ளீச்சிங் பவுடரை எக்காரணம் கொண்டும் கலக்கக்கூடாது.

இதையும் படியுங்கள்:
தெளிவான மனமே சிறப்பாக செயல்பட முடியும்!
Showerhead Cleaning tips

இண்டு இடுக்குகளில் ஒளிந்திருக்கும் துருவை எடுக்க WD-40 ஸ்ப்ரே பெரிய அளவில் உதவும். இதை ஸ்ப்ரே செய்து சில நிமிடங்கள் கழித்து துடைத்தால் துரு முழுவதும் வந்துவிடும், மேலும் எதிர்காலத்தில் துருப்பிடிக்காமலும் இது பாதுகாக்கும்.

இந்தச் சின்னச் சின்ன விஷயங்களை முறையாகப் பின்பற்றினாலே உங்களின் பாத்ரூம் பைப்புகள் எப்போதுமே புதிது போலவே பளபளக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com