cyberbullying
cyberbullying

‘சைபர் புல்லிங்’ எனப்படும் இணைய மிரட்டலின் அறிகுறிகள் மற்றும் தடுப்பு முறைகள்!

Published on

சைபர் புல்லிங் என்பது டிஜிட்டல் சேனல்கள் மற்றும் ஃபோன்கள், கணினிகள் போன்ற மொபைல் சாதனங்களில் நடைபெறும் ஒரு குறிப்பிட்ட வகையான கொடுமைப்படுத்துதல் ஆகும். இது பல்வேறு ஆன்லைன் மற்றும் டிஜிட்டல் அமைப்புகளில் நிகழலாம். ஆன்லைனில் அச்சுறுத்தும் செய்திகளை அனுப்புவதை குறிக்கிறது. தனிப்பட்ட புகைப்படங்களை அல்லது சங்கடமான வீடியோக்களை அனுப்புவது, ஆன்லைன் கேம்கள் என இன்றைய இளைஞர்கள் பல வகைகளில் ஆன்லைன் கொடுமைகளுக்கு உள்ளாகிறார்கள்.

இது பிள்ளைகளுக்கு கணிசமான மன மற்றும் உளவியல் பாதிப்பை ஏற்படுத்தும். இளைஞர்களை தனிமைப்படுத்தவும், கவலை அடையவும், நம்பிக்கை இழக்கவும் செய்யும். சில சமயங்களில் தற்கொலை முயற்சிக்குக் கூட வழிவகுக்கும்.

அறிகுறிகள்:

* பிள்ளைகள் தங்களுடைய மின்னணு சாதனத்தை பயன்படுத்தும்போது,  செய்திகள் அல்லது மின்னஞ்சல்களை பெறும்பொழுது பதற்றமாக இருப்பதைக் கொண்டு அறியலாம்.

* எப்பொழுதும் மகிழ்ச்சியாக சாதனங்களைப் பயன்படுத்துபவர்கள் திடீரென அவற்றை முற்றிலும் தவிர்ப்பதைக் கொண்டு சைபர் புல்லிங்கின் அறிகுறியாக எண்ணலாம்.

* பிள்ளைகள் அவர்களின் ஆன்லைன் இருப்பை ரகசியமாக வைத்துக் கொள்வதாக நீங்கள் உணர்ந்தால் அது இணைய அச்சுறுத்தலின் அறிகுறியாக இருக்கலாம்.

* இணைய மிரட்டலுக்கு ஆளாகும் ஒருவர் குடும்பம் மற்றும் நண்பர்களிடம் இருந்து விலகி இருக்க முயற்சி செய்வார்கள்.

* பிள்ளைகளின் ஆன்லைன் செயல்பாடு மற்றும் சாதனங்களின் பயன்பாடு பற்றிய பேச்சு வந்தால் உரையாடல்களை தவிர்த்து விடுவது இணைய மிரட்டலின் அறிகுறியாக இருக்கலாம்.

இதையும் படியுங்கள்:
அப்படி என்ன இருக்கிறது நோபல் பரிசு பதக்கங்களில்?
cyberbullying

சைபர் மிரட்டலை தடுப்பதற்கான முறைகள்:

* பிள்ளைகள் சைபர் புல்லிங் செய்யப்படுவதாக சந்தேகம் இருந்தால் முதலில் அவர்களுடன் உட்கார்ந்து மனம் விட்டுப் பேசுவது நல்லது.

* அவர்களின்  இணைய கணக்குகள் மற்றும் போன் நம்பர்களைத் தடுக்க அவர்களை ஊக்குவிக்கலாம்.

* பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு ஆன்லைனில் செல்லும் போதெல்லாம் வலுவான கடவுச்சொற்களை பயன்படுத்தக் கற்றுத் தருதல் அவசியம். வலுவான கடவுச்சொற்களை பராமரிப்பது இணைய அச்சுறுத்தலை தடுப்பதற்கு ஒரு சிறந்த வழியாகும்.

* பெற்றோர்கள், குழந்தைகள் ஆன்லைனில் எந்த பிளாட்பார்மை பயன்படுத்தினாலும் அதற்கான தளம் வழங்கும் அனைத்து தனி உரிமை அமைப்புகளையும் கருவிகளையும் எப்போதும் வைத்திருக்க வேண்டும். உதாரணத்திற்கு ஜூம், கூகுள் மீட், ட்விட்டர் போன்றவை.

* ஒவ்வொரு கணக்கிலும் சென்று சுயவிவர புகைப்படங்களை தனிப்பட்டதாக்கவும், அந்நியர்களிடமிருந்து வரும் கோரிக்கைகளை தடுப்பது போன்ற அவர்களுடைய தனி உரிமை அமைப்புகளை அவர்களுக்குத் தெரியப்படுத்தவும்.

* இணைய மிரட்டல் நிகழ்வுகளை புகார் அளிக்கலாம். இதனால் தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு குற்றவாளியின் கணக்குகள் முடக்கப்படும்.

இதையும் படியுங்கள்:
அதிக மன அழுத்தத்தினால் உடலுக்கு ஏற்படும் பாதிப்புகள்!
cyberbullying

* இணைய சமூக ஊடகங்களில் எப்படி பாதுகாப்பாக இருப்பது என்பதை பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுக்கலாம்.

* தனிப்பட்ட தகவல்களை போன் நம்பர், முகவரி, வீட்டின் இருப்பிடம் போன்ற தனிப்பட்ட தகவல்களை பகிர வேண்டாம் என்று சொல்லிக் கொடுங்கள்.

* பிள்ளைகள் அதிக நேரம் சமூக ஊடகங்களில் செலவழிக்காமல் எச்சரிப்பதும் அவசியம்.

* ஆன்லைன் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் மூலம் நம் பிள்ளைகள் அச்சுறுத்தலுக்கு ஆளாகும் வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன. எனவே நம் பிள்ளைகள் இதிலிருந்து ஒதுங்கி இருக்க பெற்றோர்கள் முக்கியப் பொறுப்பேற்று அவர்களின் சமூக வலைதளங்களை அவ்வப்பொழுது கண்காணிப்பது நல்லது.

logo
Kalki Online
kalkionline.com