கோடையில் வீட்டை குளிர்ச்சியாக வைக்க எளிய ஆலோசனைகள்!

Simple tips to keep your home cool in summer
Simple tips to keep your home cool in summerhttps://www.youtube.com

வீட்டுக்குள் நல்ல காற்றோட்டம் அவசியம். எனவே, ஜன்னல்கள் எதிரெதிர் திசைகளில் இருந்தால், காற்று எளிதாக உள்ளே வந்து வெளியேறும். காலையில் 5 முதல் 8 மணி வரையிலும் மாலையில் 7 முதல் 10 மணி வரையிலும் ஜன்னல்களை திறந்து வைத்தால், குளிர்ந்த காற்று வீட்டுக்குள் நுழைந்து அறையின் வெப்பத்தைக் குறைக்கும்.

* வீட்டின் மாடியில் தோட்டம் அமைத்து செடி, கொடிகள் வளர்த்தால் பெருமளவு வெப்பத்தை அந்தத் தாவரங்கள் உள்வாங்கிக்கொள்ளும். இதனால் வீட்டுக்குள் குளிர்ச்சியாக இருக்கும்.

* ஜன்னலோரங்களில் செடிகள் வளர்த்து கொடிகளை பரவவிடுவதால், வீட்டின் அழகை அதிகரிப்பதுடன், காற்றில் உள்ள வெப்பத்தை உறிந்துகொண்டு, குளிர்ச்சியான காற்றை வீட்டுக்குள் அனுப்பும். வீட்டை சுற்றியுள்ள காற்றும் குளுமையடையும்.

* வீட்டின் கூரை வழியாக வெப்பம் இறங்குவதைத் தடுக்க, தளத்தின் மேற்பரப்புகளிலும், மேற்கூரைகளிலும், ஒயிட் வாஷ் செய்யலாம். வெண்மை நிறம் ஒளியை பெருமளவு பிரதிபலித்துவிடும் என்பதால் வெப்பம் வீட்டுக்குள் இறங்காது. ஆனால், இது நீண்ட காலம் தாக்குப்பிடிக்காது என்பதால் அடுத்த ஆண்டு மீண்டும் ஒயிட் வாஷ் செய்ய வேண்டி இருக்கும்.

* பழைய வகை குண்டு பல்பு, மின்சாரத்தை அதிகம் ஈர்ப்பதுடன், வெப்பத்தையும் அதிகமாக வெளியேற்றும். எனவே, கோடையில் சி.எப்.எல் மற்றும் எல்.இ.டி. விளக்குகளைப் பயன்படுத்துவது அறையின் வெப்பத்தை குறைக்கும்.

* மூங்கிலுக்கு வெப்பத்தை ஈர்க்கும் சக்தி உண்டு. எனவே, வீட்டுக் கதவு, ஜன்னல்களை ஒட்டி மூங்கில் பாய்களை தொங்கவிட்டால், அவை வெப்பத்தை வெளிலேயே தடுத்தி நிறுத்திவிடும். பால்கனி மற்றும் மாடியின் அறையை ஒட்டிய வெளிப்புறத்திலும் இந்தத் திரைகளை தொங்கவிட்டால், அவை வெப்பத்தை அது தடுப்பதுடன் இதமான நிழலையும், வீட்டுக்கு அழகையும் கொடுக்கும்.

* நாம் ஜன்னலை ஒட்டி அமைக்கும் பிளைண்ட்கள், வெளிச்சத்தை மட்டுமல்ல, வெப்பத்தையும் கட்டுப்படுத்தக் கூடியவை. அதுபோல, ஜன்னல் பால்கனியை ஒட்டி ஷேட்கள் அமைத்தாலும் வீட்டுக்குள் வெப்பம் வருவதை கட்டுப்படுத்தலாம்.

* நிறைய பொருட்கள் குவிந்திருக்கும் இடம், வெப்பத்தை தக்க வைக்கும். ஆங்காங்கே குவிந்துள்ள தேவையற்ற புத்தகங்கள், பேப்பர்கள், பர்னிச்சர்கள், துணி மூட்டைகள், எலக்ட்ரிக் பொருட்கள் போன்றவற்றையெல்லாம் வெளியேற்றி சுத்தப்படுத்தி, ஜன்னலை திறந்து வைத்தாலே, வெப்பம் ஜில்லென்று மாறிவிடும்.

இதையும் படியுங்கள்:
பருத்திப் பாலில் உள்ள நன்மைகள் தெரியுமா?
Simple tips to keep your home cool in summer

* நாம் தினசரி பயன்படுத்தும் மிக்சி, கிரைண்டர், ஃப்ரிட்ஜ், ஃபேன், அயர்ன்பாக்ஸ், கம்ப்யூட்டர் போன்ற சாதனங்களின் பிளக்கை பயன்பாட்டில் இல்லாத நேரத்தில் அன்பிளக் செய்து வைக்கவும். சுவிட்ச் ஆப் செய்து வைத்திருந்தாலும், சாக்கெட்களில் சொருகியிருக்கும் எந்த பிளக்கும் வெப்பத்தை உருவாக்கவே செய்யும். வெப்பத்தையும் மின் செலவையும் குறைக்க அதிக ஸ்டார் ரேட்டிங் கொண்ட தரமான மின் சாதனைகளைப் பயன்படுத்தலாம்.

* ஒரு டேபிள் ஃபேன், பெரிய உலோகக் கிண்ணம், கொஞ்சம் ஐஸ்கட்டி இருந்தால் போதும், அறைக்குள் ஏசி ஓடும் உணர்வை ஏற்படுத்திவிடலாம். ஃபேனுக்கு முன்பாக ஐஸ் கிண்ணத்தை வைத்துவிட்டால், ஃபேனில் இருந்து வெளிப்படும் காற்று ஐஸின் குளிர்ச்சியை அறைக்குள் பரவவிடும். ஐஸ் உருகினாலும் குளிர்ந்த நீர் தொடர்ந்து அந்த குளிர்ச்சியை அளிக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com