

தையல் மிஷினை மாதத்துக்கு ஒருமுறை எண்ணெய் போட்டு துடைக்க வேண்டியது அவசியம். எண்ணெய் போடும் முன் இயந்திரத்தில் உள்ள நூல் அழுக்கு தூசுகளை பிரஷ் கொண்டு சுத்தம் செய்துவிட வேண்டும்.
தையல் இயந்திரத்தை பதினைந்து நாட்களுக்கு ஒரு முறையாவது நன்றாக சுத்தம் செய்து எண்ணெய் விட்டு பெடல் பண்ண வேண்டும் இதனால் மெஷின் நீண்ட நாட்கள் உழைக்கும்.
தடிமனான துணிகளை தைப்பதற்கு முன்பு இயந்திரத்தின் ஊசியில் சோப்பு தடவினால் ஊசி உடைவதை தவிர்க்கலாம்.
நூல் கோர்ப்பதற்கு முன் நூலின் முனையை நக பாலிஷில் நனைத்து பின் கோர்த்தால் ஊசி எளிதில் நுழையும்.
முனை மழுங்கிய ஊசியை தையல் பிரிப்பதற்கு பயன்படுத்தலாம்.
பட்டன்கள் தைப்பதற்கு முன் வைக்க வேண்டிய இடத்தில் சிறிது நகப் பூச்சை தடவி அதன்மேல் பட்டனை தைத்துவிட்டால் எளிதில் பிய்ந்து வராது.
தையல் மிஷின் ஊசிகளை ஒரு ஸ்பான்ஜ் குஷனில் ஊசிகள் குத்தி வைத்தால் தேவைப்படும் பொழுது எடுத்துக்கொள்ளலாம்.
தடிமனான துணிகளை தைப்பதற்கு முன்பு ஊசியில் சிறிது சோப்பு தடவினால் ஊசிகள் உடையாமல் இருக்கும்.
ஊசிகளின் முனை மழுங்கிவிட்டால் உப்புத்தாளில் பல முறை குத்தி எடுத்தால் கூர்மையாகிவிடும்.
கத்திரிக்கோல் மழுங்கிவிட்டால் உப்பு காகிதத்தை கத்திரிக்கோலால் வெட்டினால் கூர்மையாகிவிடும்.
தையல் மிஷினில் பெல்ட் நீளமாக இருந்தால் குளிர்ந்த நீரில் அதை அரை மணி நேரம் ஊற வைத்து பிறகு வெயிலில் காயவைத்து மாட்டினால் இறுகி சரியாக இருக்கும்.
ஊசிகள் வைக்கும் டப்பாவில் சிறிது டால்கம் பவுடரை போட்டு நிரப்பி வைத்தால் ஊசிகள் துருப்பிடிக்காமல் இருக்கும்.
ஆடைகளில் ஜிப் வைத்து தைப்பதற்கு முன்பு சேலெஃபென் டேப்பை கொண்டு ஒட்டி விட்டு பிறகு தைக்கவேண்டும்.
தையல் மிஷினை தேங்காய் எண்ணெய் அல்லது டர்பன் டைன் எண்ணெய் போட்ட பின்பு ஒரு துணியில் சிறிது நேரம் தைத்து விட்டு பின்பு உறையினால் மூடி வைக்கவேண்டும்.
தைக்கும்போது கையில் ஒரு சிறிய குஷன் தலையணையின் மேல் வைத்துக்கொண்டு தைத்தால் கை வலிக்காது அவ்வப்போது மரம் செடிகளை கொடிகளை பார்க்க வேண்டும் பார்வையை திருப்பிக் கொள்ள வேண்டும் இப்படி செய்தால் கண்கள் களைப்படையாது.
தையல் மிஷினை பயன்படுத்தாமல் நீண்ட நாட்கள் வைத்திருக்கக் கூடாது அவ்வப்போது தைத்துக் கொண்டே இருக்கவேண்டும்.
தையல் மிஷினுக்கு எண்ணெய் போடும் முன்பு இயந்திரத்தில் உள்ள நூல் போன்ற அழுக்குகளை பழைய பெயிண்ட் பிரஷ் கொண்டு எடுத்துவிட்டு பின்பே போட வேண்டும் துடைப்பதற்கு முன் ஊசி பாபின் நூல் போன்றவற்றை எடுத்து விட்ட பின்னே துடைக்க வேண்டும்.
பழைய பட்டுப்புடவைகள் உபயோகிக்காவிட்டால் ஜரிகை மட்டும் வெட்டி எடுத்து காட்டன் புடவையில் தைத்துவிட்டால் நியூ பேஷன் ஆக இருக்கும்.
எம்பிராய்டிங் டிசைன் செய்யப்பட்ட புடவை சுடிதார் பழசாகி எம்ராய்டரி மட்டும் நன்றாக இருந்தால் அதனை தனியே வெட்டி எடுத்து உபயோகிக்கும் நிலையில் உள்ள வேறு உடைகளில் அட்டாச் பண்ணி தைக்கலாம்.
பட்டுப்புடவைகளுக்கு பால்ஸ் தைப்பதாக இருந்தால் அடியில் ஒரு கனமான துணியை வைத்துக்கொண்டு பிறகு தைத்தால் பால்ஸ் நூல் சுருங்காது.
பட்டுத்துணியில் ஜாக்கெட் தைப்பதாக இருந்தால் லைனிங்கி ளாத்தை வைத்து தைக்கவேண்டும் இல்லை என்றால் சீக்கிரத்தில் பிளவுஸ் கிழிந்துவிடும்.
துணிக்கு எம்பிராய்டரி போட்டு தைப்பதாக இருந்தால் துணியை நீரில் அலசி விட்டு பின்பு போட்டால் டிசைன் சுருங்காமல் இருக்கும் நூலும் அறுந்து போகாமல் நீண்ட வருடங்கள் உழைக்கும்.
துணி தைக்கும் ஊசிகளை தேங்காய் எண்ணெய் தடவி துணியில் சுற்றி வைத்தால் துரு பிடிக்காது.
நான்கைந்து வண்ண நூல்களை வைத்து தையல் வேலை செய்யும்பொழுது ஒன்றுடன் ஒன்று சிக்கிக்கொள்ளாமல் இருக்க ஒரு பிளாஸ்டிக் பைகளை எடுத்து அதில் சில ஓட்டைகளை போட்டு நூல்கண்டுகளை பையினுள் போட்டு ஓட்டை வழியே எடுக்க வேண்டும் இப்பொழுது தேவையானவற்றை தைக்கமுடியும்.