ஸ்மார்ட் கிச்சன் டிப்ஸ்: நேரத்தையும் பணத்தையும் மிச்சப்படுத்தும் 12 வழிகள்!

smart-kitchen-maintenance
smart-kitchen-maintenance
சி.ஆர்.ஹரிஹரன்

நான் கேரளாவில் உள்ள ஆலுவா யில் வசித்து வருகிறேன். என் வயது 76. பல வருடங்களாக தினமலர் சிறுவர் மலர், வாரமலர், கல்கி, மங்கையர் மலர், விகடன், குமுதம், பொதிகை சாரல் போன்ற பத்திரிகை களுக்கு ஜோக்ஸ் எழுதி வருகிறேன். எனக்கு மனைவியும், இரு குழந்தை களும் இருக்கிறார்கள். மனைவி ஆர். கீதா பெயரிலும் பல தமிழ் பத்திரிகைகளுக்கு ஜோக்ஸ், சிறு கட்டுரைகள் எழுதி வருகிறேன்.

Updated on

தினமும் இரவில் குக்கரின் கேஸ்கட், வெயிட் முதலியவற்றை நன்கு சுத்தம் செய்வதுடன், குக்கர் மூடியில் உள்ள சேஃப்டி வால்வையும் சரி பார்ப்பது நல்லது. காலைநேர அவசரத்தில் பிரச்னைகள் வராமல் சமாளிக்கலாம்.

கேஸ் அடுப்பு ஒரு பக்கம் எரிந்துகொண்டு இருக்கும்போது மற்ற பாகங்களை சுத்தம் செய்வதை தவிருங்கள். ஸ்டவ் எரியாமல் இருக்கும்போதும் கேஸ் சிலிண்டரை மூடிய பின்னரே சுத்தம் செய்யவேண்டும்.

ஒரு பாத்திரத்தில் தண்ணீரை நிரப்பி ஃப்ரிட்ஜில் எப்போதும் வைத்துவிடுங்கள். கரன்ட் கட்டானாலும் கவலையில்லை.

பால் பாக்கெட்டுகளை ஜில் தண்ணீரில் போட்டு வைத்தால் சிலமணி நேரம் வரை பால் கெட்டுப்போகாமல் இருக்கும்.

தினமும் இரவு சமையலறையை சுத்தம் செய்யும்போது கொதிக்க வைத்த தண்ணீரை சிங்க் உள்ளே வேகமாக ஊற்றுங்கள். இதனால் அங்கு தங்கியிருக்கும் பூச்சிகள் அழிவதோடு, அடைப்புகளும் அகன்றுவிடும்.

சமையலறையில் எண்ணைய் ஊற்றி வைக்கும் பாட்டில்களில் கையில் எடுக்க முடியாத அளவுக்குபிசுக்கு ஏறிவிடும். இதைப்போக்க, பாட்டிலை இறுக மூடி அரிசிமாவால்நன்றாகத் தேய்த்த பிறகு உலர்ந்த துணியால் துடைத்து விடுங்கள்.

பாட்டில்கள் பிசுபிசுப்பு நீங்கி பளபளக்கும். காலியான பெருங்காய டப்பாக்களை குப்பையில் போடாதீர்கள். அவற்றை சுத்தம்செய்து மஞ்சள் தூள், சீயக்காய் தூள், டேபிள் சால்ட், பாத்திரம் துலக்க பயன்படுத்தும் பொடி போன்றவற்றை போட்டுவைக்க பயன்படுத்தலாம்.

உபயோகித்து பழையதாகிப்போன ஹாட் பேக்குகளை பயறு வகைகள் சீக்கிரம் முளைவிட, இட்லி, தோசை மாவு சீக்கிரம். புளிக்க, காயாக உள்ள பழங்கள் சீக்கிரமாக பழுக்க பயன்படுத்தலாம்.

இதையும் படியுங்கள்:
அக்னி வெயிலிலும் வாடாத நந்தவனம்! கோடையைச் சமாளிக்கும் 10 சூப்பர் செடிகள் இதோ!
smart-kitchen-maintenance

பழைய நாலுமுழ வேஷ்டியில் பைகள் தைத்து வைத்துக் கொள்ளுங்கள். தானியங்களை முளைகட்ட, திரித்த பாலை வடிகட்டி பனீர் செய்ய உபயோகப்படும்.

இரவில் ஒளிரும் ஸ்டிக்கர்களை சமையலறையில் உள்ள சுவிட்ச் போர்டு, மெழுகுவர்த்தி, தீப்பெட்டி, டார்ச் லைட், கேஸ் லைட்டர் இருக்கும் இடங்களில் ஒட்டி வைத்தால் திடீரென கரண்ட் கட் ஆகும் சமயங்களில் கைகொடுக்கும்.

மிக்ஸியின் பிளேடு கூர் மழுங்கிவிட்டால் உடனடி பயன் பாட்டுக்கு சிறிதளவு கல்உப்பு போட்டு அரையுங்கள். மிக்ஸி பிளேடு கூர்மை பெறும். இதைச் சில நாட்களுக்கு பயன்படுத்தலாம். அதன் பிறகு ரிப்பேருக்கு கொடுக்கலாம்.

சமையலறையில் பயன்படுத்தும் புதிய பிளாஸ்டிக் டப்பாக்களை உப்பு நீரில் கழுவி வெயிலில் உலரவைத்தால் பிளாஸ்டிக் வாசனை அறவே நீங்கிவிடும்.

காய்கறிகள் நறுக்கும் பலகையில் உள்ள கறைகளை எலுமிச்சைத்தோலால் தேய்த்துக் கழுவினால் கறைகள் அகன்றுவிடும்.

logo
Kalki Online
kalkionline.com