சாவியை தொலைச்சிட்டு வாசல்லயே நிப்பீங்களா? வாழ்க்கையில் ஜெயிக்க இந்த 2 ரகசியம் போதும்!

தடைகளைத் தகர்த்து, அடுத்த கட்டத்திற்கு முன்னேற உதவும் எளிய வாழ்வியல் வழிகாட்டி.
வெற்றி வழிகள்|a guy searching for keys
வெற்றி வழிகள்AI image
Updated on

நாம் எங்கேயாவது ஊருக்கோ அல்லது வெளியிலோ சென்று திரும்பி வரும்போது, முன் வாசல் கதவின் சாவியை எங்கேயோ மறந்து வைத்துவிட்டோம் அல்லது தொலைந்துவிட்டதென்று வைத்துக்கொள்வோம். அத்தகைய சூழ்நிலையில் நாம் என்ன செய்வோம்?

நம்மிடமிருக்கும் அனைத்து பைகளிலும் தேடுவோம். நம்முடன் வேறு யாராவதிருந்தால் அவர்களிடமிருக்கும் பைகளிலோ அல்லது பேன்ட் மற்றும் சர்ட் பாக்கெட்டிலோ இருக்கிறதா என்று தேடச் சொல்வோம்.

இதைத் தவிர‌ நாம் எங்கு சென்றிருந்தோமோ அங்கிருப்பவர்களுக்கு ஃபோன் போட்டு கேட்போம். சரி, இவற்றை எல்லாம் எத்தனை மணி நேரத்திற்கு செய்வோம். அதிகபட்சமாக ஒரு அரைமணி நேரம் வரைதான் முயற்சி செய்வோம். பிறகென்ன செய்வோம்?

தடைகளைத் தகர்க்கும் மாற்று வெற்றி வழிகள்

சாமான்களை வைத்துக் கொண்டு வெளியிலேயே எத்தனை மணி நேரத்திற்கு நிற்க முடியும்? நாம் உடனடியாக இந்த மாதிரி சமயத்தில் இரண்டு விதமான முடிவுகளைதான் எடுப்போம். அதாவது,

1. நாமாகவே அல்லது வேறு ஒருவரின் உதவியோடு பூட்டு சாவி தயாரிப்பவரை அழைத்துக்கொண்டு வந்து அந்த பூட்டிற்கான சாவியை உடனடியாக தயார் செய்ய சொல்வோம். அவரும் டூப்ளிகேட் சாவியை உடனடியாக தயார் செய்து கதவை திறந்திடுவார்.

2. அடுத்தபடியாக அப்படி சாவி செய்பவரை அழைத்து வர முடியாது என்கிற பட்சத்தில் அக்கம் பக்கம் இருப்பவர்களின் உதவியோடு அந்த பூட்டையே உடைத்து விடுவோம். பிறகு கடைக்கு சென்று புதியதாக ஒரு பூட்டு, சாவி செட்டை வாங்கி வருவோம்.

ஆகமொத்தத்தில், இந்த இரண்டில் ஒன்றை செய்து கதவை திறந்து உள்ளே சென்று விடுவோம் இல்லையா? அப்படி செய்யாமல், நான் சாவியை எங்கு வைத்தேன் என்று தேடிக்கொண்டே இருந்தால் தீர்வு கிடைக்குமா? அந்த சாவியால் தான் திறப்பேன், பூட்டை உடைக்கவோ அல்லது வேறு மாற்று சாவியையோ செய்யமாட்டேன் என்று முரண்டு பிடித்தால், யாருக்கு நஷ்டம் ? உங்களுக்கும் மற்றும் உங்களுடன் இருப்பவர்களுக்கும் தானே பிரச்னை ஏற்படும்? அக்கம் பக்கத்திலிருப்பவர்கள் ஒன்று அல்லது இரண்டு முறை தங்களுடைய ஆலோசனையை கூறிவிட்டு கேட்கவில்லை என்றால் அங்கிருந்து சென்று விடுவார்கள்.

வெற்றி வழிகள்|a guy studying hard
வெற்றி வழிகள்AI image

இதைப் போலவேதான் நம்முடைய வாழ்க்கையிலும் சில நேரங்களில் எதிர்பாராத விதமாக நாம் செய்யும் தொழிலிலோ, வேலையிலோ, வியாபாரத்திலோ அல்லது நாம் படித்துக் கொண்டிருக்கும் போதோ எதாவது தடைகள் வரலாம். ஒருமுறை அல்லது இரண்டு முறை அந்த தடைகளை அகற்ற நீங்கள் முயற்சி செய்யலாம்.

ஆனால், அப்போதும் அந்த தடையை நீக்க முடியவில்லை என்றால், ஒன்று மற்றவர்களின் உதவியோடு அந்த தடையை முற்றிலுமாக தகர்த்தெறியங்கள். அப்படி இல்லை என்றால் அந்த தடையை நிராகரித்துவிட்டு வேறு ஒரு முறையை கையாளுங்கள். அப்படி கையாளும்போது வேறு ஒரு புதிய பாதை தானாகவே அமையும்.

மாணவர்கள் பின்பற்ற வேண்டிய முக்கிய வெற்றி வழிகள்

உதாரணத்திற்கு ஒரு மாணவன் CA படிக்கிறான் என்று வைத்து கொள்வோம். CA படிப்பு மிகவும் கடினமானது. அப்படி இருக்கும் படசத்தில் அந்த மாணவனால் மூன்று வருடங்களாகியும் முதல் நிலையையே கடக்க முடியவில்லை என்றால், அந்த மாணவன் இன்னும் ஒருமுறை முயற்சி செய்யவேண்டும். அப்படியும் முடியவில்லை என்றால் அந்த படிப்பிலிருந்து விலகி வேறு எதாவது ஒரு படிப்பை படித்து முன்னேற வேண்டும்.

கால விரயத்தைத் தவிர்க்கும் புதிய வெற்றி வழிகள்

இல்லை, CA படித்தே தீருவேன் என்று உட்கார்ந்து கொண்டிருந்தால் அவனுடைய வயதும் காலமும் ஓடிக்கொண்டே இருக்கும். இறுதியில் வயது வரம்பின் காரணமாக வேற படிப்பையும்‌ படிக்க இயலாமல் போய்விடும். ஆகவே, மாணவர்களே, இந்த தகர்த்தெறி அல்லது மாற்றிக்கொள் என்கிற‌ இரண்டு முக்கியமான வழிகளை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

இதையும் படியுங்கள்:
பழைய பிரிட்ஜை தூக்கிப் போடுங்க! ₹20,000-க்குள் அட்டகாசமான 5 மாடல்கள்!
வெற்றி வழிகள்|a guy searching for keys

இந்த எளிய வாழ்வியல் சூத்திரத்தைப் பின்பற்றுவதன் மூலம், தோல்விகளிலும் தேவையற்ற பிடிவாதங்களிலும் உங்கள் பொன்னான நேரத்தை வீணடிப்பதைத் தவிர்த்து, சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுத்து, உங்கள் வாழ்க்கையையும் எதிர்காலத்தையும் மிகக் குறுகிய காலத்தில் வெற்றிகரமாக மாற்றியமைக்க முடியும்.

logo
Kalki Online
kalkionline.com