மிக்ஸியில் பூண்டு வாடை குடலைப் புரட்டுகிறதா? 2 நிமிஷத்துல விரட்ட இதோ சூப்பர் டிப்ஸ்!

Mixer Grinder
Mixer Grinder
Published on

நம்ம ஊரு சமையல்ல இஞ்சி, பூண்டு விழுது இல்லாம பிரியாணியோ, குருமாவோ செஞ்சா, ருசிக்காக நாம அரைக்கிற இந்த மசாலா பொருட்கள், நம்ம மிக்ஸி ஜாரை சும்மா விடுறதில்லை. காலையில மசாலா அரைச்சிட்டு, சாயங்காலம் பசங்களுக்கு ஜூஸ் போடலாம்னு மிக்ஸியைத் திறந்தா, ஜூஸ் வாசனைக்குப் பதிலா 'கப்'பென பூண்டு நெடி மூக்கைத் துளைக்கும். 

என்னதான் சோப்பு போட்டு, ஸ்க்ரப்பர் வெச்சுத் தேய்த்தாலும் அந்தப் பிடிவாதமான வாசனை போகவே போகாது. பைசா செலவில்லாம  அந்த வாசனையை ஈஸியா விரட்டலாம். அது எப்படின்னு ஒவ்வொன்னா பார்ப்போம்.

உங்க மிஸ்சி பழுதாகிவிட்டதா? உடனே புது மிக்ஸி வாங்க...

காபி பொடியின் நறுமணம்!

காலையில காபி குடிக்காம பலருக்குப் பொழுது விடியாது. அந்த காபி பொடிக்குத் துர்நாற்றத்தை விரட்டுற சக்தி இருக்கு. உங்க மிக்ஸி ஜார்ல பூண்டு வாசனை அதிகமா இருந்தா, ஜார் முழுக்கத் தண்ணீர் ஊற்றி, அதுல ரெண்டு ஸ்பூன் காபி தூளைப் போடுங்க. 

அல்லது ஃபில்டர் காபி போடுறவங்களா இருந்தா, அந்த காபி கொட்டைகளைக் கூடப் போடலாம். ஒரு அரை மணி நேரம் அதை அப்படியே ஊற விட்டுடுங்க. பிறகு அதைக் கொட்டிட்டு, சாதா தண்ணில கழுவினாலே போதும். பூண்டு வாசனை மாயமா மறைஞ்சு, ஜார்ல காபி வாசனை கமகமக்கும்.

கல் உப்பும், வினிகரும்!

அடுத்தது, நம்ம எல்லார் வீட்லயும் இருக்கற கல் உப்பு. மிக்ஸி ஜாரை நல்லா கழுவின பிறகு, அதுல கொஞ்சம் கொதிக்கிற வெந்நீரை ஊத்துங்க. அதுல ஒரு கைப்பிடி கல் உப்பையும், கொஞ்சம் வினிகரையும் ஊத்தி மூடி வைங்க. வினிகர் ஒரு கிருமி நாசினி மாதிரி செயல்பட்டு, நாற்றத்தை உண்டாக்கும் பாக்டீரியாவை அழிச்சிடும். ஒரு 15 நிமிஷம் கழிச்சு, அந்தத் தண்ணீரைக் கொட்டிட்டு கழுவிப் பாருங்க, ஜார் புதுசு மாதிரி இருக்கும்.

இதையும் படியுங்கள்:
முகப்பொலிவு வேண்டுமா? இதோ எலுமிச்சை வைத்தியம்!
Mixer Grinder

எலுமிச்சை மற்றும் பேக்கிங் சோடா!

எலுமிச்சம் பழத்தோட வாசனைக்கு ஈடு இணையே இல்லை. ஒரு கிண்ணத்துல கொஞ்சம் பேக்கிங் சோடாவை எடுத்து, அதுல எலுமிச்சைச் சாற்றைப் பிழிஞ்சு ஒரு பேஸ்ட் மாதிரி கலக்குங்க. இந்த பேஸ்ட்டை மிக்ஸி ஜாருக்குள்ள, மூடியில, அந்த ரப்பர் கேஸ்கெட்ல எல்லாம் நல்லாத் தடவி விடுங்க. 

ஒரு பத்து நிமிஷம் ஊறினதும், பாத்திரம் கழுவுற சோப்பை வெச்சுத் தேய்த்துக் கழுவிடுங்க. வாசனையும் போகும், ஜாரில் உள்ள கரையும் நீங்கும்.

குப்பையில் போடும் தோல்கள்!

ஆரஞ்சு பழம் சாப்பிட்டா தோலைத் தூக்கிப் போடாதீங்க. அதைத் தண்ணில போட்டுக் கொதிக்க வெச்சு, அந்தத் தண்ணீரைக் கொண்டு மிக்ஸியைக் கழுவினா, சிட்ரஸ் வாசனை சூப்பரா இருக்கும். இது எதுவுமே இல்லைனா, வாழைப்பழத் தோல் போதும். 

பூண்டு வாசனை அடிக்கிற ஜார்ல, நறுக்கின வாழைப்பழத் தோல், கொஞ்சம் அரிசி மாவு, கொஞ்சம் வினிகர் சேர்த்து மிக்ஸியிலேயே ஒரு ஓட்டு ஓட்டுங்க. இந்த கலவை ஜாரின் மூலை முடுக்கெல்லாம் போய் சுத்தம் செஞ்சு, வாசனையை மொத்தமா மாத்திடும்.

இதையும் படியுங்கள்:
சிறுவர் சிறுகதை: ஜூஸ் கடை!
Mixer Grinder

இதுக்காகக் கடையில போய் வாசனை திரவியங்களோ, புது ஜாரோ வாங்க வேண்டிய அவசியமே இல்லை. சமையலறையில் நாம் அன்றாடம் பயன்படுத்தும், அல்லது தூக்கி எறியும் பொருட்களை வைத்தே இந்தப் பிரச்சனையைச் சுலபமாகச் சரி செய்துவிடலாம். 

உங்க மிஸ்சி பழுதாகிவிட்டதா? உடனே புது மிக்ஸி வாங்க...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com