முகப்பொலிவு வேண்டுமா? இதோ எலுமிச்சை வைத்தியம்!

beauty tips in tamil
Do you want a facial?
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

லுமிச்சை பழம் பொதுவாகவே நம்மை புத்துணர்வாக்க உதவும். அதில் சிட்ரிக் ஆசிட் நிறைய இருப்பதால் நமக்கு எப்போதும் ஒரு எனர்ஜி கிடைக்கும். ஓட்டப்பந்தயத்தில் ஓடுபவர்கள் கூட லெமன்தான் கையில் வைத்திருப்பார்கள்.

அப்படிப்பட்ட எலுமிச்சைப்பழம் உடலில் உள்ள செல்களை மட்டும் அல்ல. தோளில் உள்ள கெட்ட செல்களை நீக்கி, சருமத்தை ஜொலிக்க செய்யும். எப்படி குடித்தால் நல்லது என பார்க்கலாம் வாங்க.

ஊட்டச்சத்து மதிப்பு கொண்ட எலுமிச்சை நீரானது சருமத்திற்கு ஏற்ற ஒரு நல்ல நீரேற்ற மூலமாகும். காலையில் வெறும் வயிற்றில் எலுமிச்சை நீரை குடித்தால் அது உங்கள் சருமத்தின் ஆரோக்கியதில் பெரிய தாகத்தை ஏற்படுத்தும்,

எலுமிச்சை சாறு தீங்கு விளைவிக்கும் நசுக்களை நீக்குவது மட்டுமல்லாமல் சருமத்திற்கு சில அற்புதமான நன்மைகளையும் தருகிறது.

இதை குடிப்பதால் சருமத்தின் தெளிவை ஊக்குவிக்கும் ரத்த ஓட்டத்தில் இருந்து தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் (அ) நச்சு பொருட்களை வெளியேற்றும்.

இதையும் படியுங்கள்:
சமந்தாவின் வைர மோதிரத்தில் ஒளிந்திருக்கும் முகலாய கால வரலாறு!
beauty tips in tamil

எலுமிச்சையில் காணப்படும் வைட்டமின் சி, தோல் சுருக்கங்கள், வறண்ட சருமம், சருமம் வயதாவதையும் சூரிய ஒளியால் ஏற்படும் பாதிப்புகளையும் குறையும் உதவுகிறது.

இது முகப்பருவை தடுக்க உதவுகிறது மற்றும் உங்கள் சருமத்திற்கு இயற்கையான பளபளப்பை கொடுக்கிறது.

-விஜி.

logo
Kalki Online
kalkionline.com