கிராமங்களில், ஏன் நகர்ப்புறங்களில் கூட பலரும் இரவு உணவு முடித்ததும் தாம்பூலம் தரிப்பது வழக்கம். தாம்பூலம் தரிப்பது எனும் வெற்றிலை போடுவதில் சுண்ணாம்பு பெரும் பங்கு வகிக்கிறது. இரவு உணவுக்குப் பின் வெற்றிலை போடுவது ஜீரண சக்தியை அதிகரிக்கும். சுண்ணாம்பு எலும்புகளுக்கு மிகவும் நல்லது. கால்சியம் சத்தை தரக்கூடியது. தொண்டைக்கும் நலம் பயப்பது. அது மட்டுமின்றி, குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தரக்கூடிய இயற்கைப் பொருளாக சுண்ணாம்பு விளங்குகிறது.
குழந்தைகளுக்கு ஒரு தேக்கரண்டி தேனில் ஊசி முனையளவு சுண்ணாம்பு கலந்து கொடுத்தால் அதைவிட பெரிய மருந்தே கிடையாது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி பெருகும். அடிக்கடி உடல்நலக் குறைவால் பாதிக்கப்படும் குழந்தைகள் இதை சாப்பிட்ட பின்பு சுறுசுறுப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பர். அதேபோல், பெண்களுக்கு ஆரோக்கியமான கருமுட்டை உருவாக சுண்ணாம்பு காரணமாக உள்ளது. இனி, சுண்ணாம்பில் உள்ள நன்மைகளைப் பார்ப்போம்.
* சுண்ணாம்பில் அதிகளவு கால்ஷியம் சத்து உள்ளது.
* குளிர்காலத்தில் தொண்டை கட்டினால், முருங்கை இலை சாற்றுடன் சிறிதளவு சுண்ணாம்பை குழைத்து தொண்டையின் வெளிப்புறத்தில் பூசினால், நிவாரணம் கிடைக்கும்.
* சுண்ணாம்பில் ஆண்டிசெப்டிக், வலி நிவாரணி, மூச்சுத்திணறல் எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு மற்றும் மன அழுத்த எதிர்ப்பு பண்புகள் உள்ளன.
* உடல் நலம் தொடர்பான பிரச்னைகளின் சிகிச்சையில் சுண்ணாம்பு மருத்துவ ரீதியாகப் பயன்படுத்தப்படுகிறது.
* ஆயுர்வேதத்தில் சுண்ணாம்பு நல்ல மருந்தாகக் கருதப்படுகிறது.
* சுண்ணாம்பு மனதை அமைதிப்படுத்த உதவும் காரணிகளில் ஒன்றாக விளங்குவதாகக் கூறப்படுகிறது.
* மார்பு சளியை அகற்ற சுண்ணாம்பு உதவுகிறது.
* புற்றுநோய் வளர்ச்சியைத் தடுப்பதில் சுண்ணாம்பு பெரும் பங்காற்றுவதாகக் கூறப்படுகிறது. மேலும், புற்றுநோயின் அறிகுறிகளை இது குறைக்கின்றது.
* ஆஸ்துமா, நாள்பட்ட இருமல், காசநோய் மற்றும் ஜலதோஷத்துக்கு சிகிச்சையளிக்க சுண்ணாம்பு உதவுகிறது. இந்த நோயாளிகள் சுண்ணாம்பு புகையின் நறுமணத்தை சுவாசிக்க, நாளடைவில் குணமடைவார்கள்.