
எல்லோருக்குமே தங்களுடைய வாழ்க்கையில் பற்றாக்குறை இல்லாமல் பணம் வந்து சேர வேண்டும் என்ற ஆசையிருக்கும். அவ்வாறு பணம் நம் வீட்டில் சேர வேண்டும் என்றால், அதற்கு நாம் செய்ய வேண்டிய சில விஷயங்கள் இருக்கிறது. அவற்றைப்பற்றி விரிவாக இந்தப் பதிவில் காண்போம்.
1. சம்பளம் வாங்கிய உடனேயே அதை அவசரமாக செலவு செய்யாமல் வருமானத்தில் முதல் செலவாக உப்பு, மல்லிகைப்பூ, இனிப்பு ஆகியவை வாங்க, பணவரவு பலமடங்கு அதிகரிக்குமாம்.
2. தினமும் உங்களுக்கு நடக்க வேண்டும் என்று நினைக்கும் காரியத்தை வேண்டிக் கொண்டு ஒரு நாணயத்தை பூஜையறையில் சேர்த்து வைத்து மாதக்கடைசியில் சேர்ந்த காசை வைத்து பசு மாட்டிற்கு வாழைப்பழம் வாங்கிக் கொடுக்க பண வரவு அதிகரிக்குமாம்.
3. வடகிழக்கு மூலையில் நீரை வைத்து அதில் எழுமிச்சைப்பழம் ஒன்றை போட்டு வைக்க வேண்டும். இதை தொடர்ந்து இரண்டு மாதம் செய்துவர பணப்பற்றாக்குறை நீங்கி செல்வம் பெருகுமாம்.
4. பணப்பெட்டியில் பணத்தை வைக்கும் போது தனிதனியாக போட்டு வைக்காமல் எப்போதும் பணத்தை சுருளாக கட்டி வைக்க வேண்டும். இதனால் பணம் பெருகும் என்று சொல்லப்படுகிறது. மேலும் பணப்பெட்டியை தென்மேற்கு மூலையில் வைத்து மல்லிகைப்பூ போட்டு வைக்க பணம் அதிகரிக்குமாம். பணப்பெட்டியில் பணத்தை வைக்கும் போது ஆறு வெற்றிலைகளும், மூன்று பாக்கும் சேர்த்து வைக்க பணம் மென்மேலுமே பெருகும் என்று சாஸ்த்திரம் கூறுகிறது.
5. இலவங்கப்பட்டையை பொடி செய்து அதை ஒரு பச்சை நிற துணியில் வைத்து பச்சை நிற நூலால் கட்டி நம்முடைய பர்சிலோ அல்லது சட்டைப்பையிலோ வைத்துக்கொள்ள பணம் அதிகரிக்குமாம்.
6. நம் வீட்டில் சாதாரணமாக பயன்படுத்தும் இந்த மூன்று பொருட்களும் ஒன்று சேர்ந்தால் அதற்கு மகிமை அதிகம் என்று சொல்லப்படுகிறது. அவை பச்சைக்கற்பூரம், ஏலக்காய், சோம்பு இந்த மூன்றையும் ஒன்றாக சேர்த்து ஒரு சிறிய டப்பாவில் போட்டு சமையலறை மற்றும் பணம் வைக்கும் இடத்தில் வைத்துவிட்டால் பண வரவு இருக்கும். செல்வம் சேர்ந்து வீட்டில் சுபிக்ஷம் எற்படுவதற்கு இந்த பொருட்கள் உதவும்.