கல் உப்பை பூஜையறையில் வைக்கலாமா?

Salt benefits
Salt benefits
Published on

உப்பு என்பது நீண்ட காலம் கெடாமல் இருக்கக்கூடிய ஒரு பொருளாகும். அதுமட்டுமில்லாமல் உப்பை பயன்படுத்தி பதப்படுத்தும் பொருட்களையும் அது கெடாமல் பார்த்துக் கொள்ளும். நம்முடைய சாஸ்திரத்தில் மிகவும் முக்கியமான பொருளாக கல் உப்பு கருதப்படுகிறது.

பாற்கடலை கடையும் போது மகாலக்ஷ்மி அவதரித்தார். அவர் அவதரித்த கடலில்தான் உப்பு இருக்கிறது என்பதால், கல் உப்பு செல்வத்தின் அடையாளமாக கருதப்படுகிறது. இந்தப் பதிவில் கல் உப்பை எப்படி பயன்படுத்தினால் என்ன பலன்கள் கிடைக்கும் என்பதைப் பற்றி விரிவாகக் காண்போம்.

வாஸ்து சாஸ்திரத்தின்படி, சமையல் அறை என்பது தென்கிழக்கு திசையில்தான் வர வேண்டும். நாம் சமைக்கும் போது கிழக்கு திசையை நோக்கி பார்த்தவாறு சமைக்க வேண்டும். அவ்வாறு இருக்கும் போது கல் உப்பை சமையல் அறையில் கிழக்கு திசை அல்லது தெற்கு திசையில் தான் வைக்க வேண்டும்.

கல் உப்பை மண் பாத்திரம் அல்லது பீங்கான் பாத்திரத்தில் வைக்க வேண்டும். கல் உப்பை கண்டிப்பாக பிளாஸ்டிக் பாத்திரத்தில் வைக்கக்கூடாது என்று சொல்கிறார்கள்.

மேலும் கல் உப்பை உயரத்தில் வைக்கக்கூடாது. அடுப்பிற்கு கீழே குனிந்து எடுப்பதுப் போல இருந்தால்தான் சகல சௌபாக்கியமும் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
தொலைந்த பொருட்களை மீட்டு தரும் அரைக்காசு அம்மன் - பெயர் காரணம் தெரியுமா?
Salt benefits

வீட்டில் இருக்கும் எதிர்மறையான விஷயங்கள், நெகட்டிவ்வைப்பிரேஷன், தீயசக்திகள் விலக தரையை துடைக்கும் போது அந்த நீரில் ஒரு கைப்பிடி கல் உப்பை போட்டு துடைப்பது நல்லதாகும்.

நமக்கு இருக்கும் கண் திருஷ்டி, தீய எண்ணங்கள் விலக குளிக்கும் போது ஒரு கைப்பிடி கல் உப்பை நீரில் போட்டு குளிப்பதால், இதுப்போன்ற பிரச்னைகள் தீரும் என்று நம்பப்படுகிறது.

வீட்டின் நிலைவாசல் படியில் ஒரு சிகப்பு துணியில் கல் உப்பை வைத்து கட்டிவைத்தால், பில்லி, சூன்யம், கெட்டசக்திகளை தடுத்து செல்வத்தை அதிகமாக ஈர்த்துக் கொடுக்கும் என்று சொல்லப்படுகிறது.

இத்தகைய சிறப்பு வாய்ந்த கல் உப்பை எந்த நேரத்தில் வாங்க வேண்டுமென்றால், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையில் சுக்ர ஓரையில் வாங்கலாம். தமிழ் வருடப்பிறப்பு, தமிழ் மாதப்பிறப்பு போன்ற நல்ல நாட்களில் வாங்கலாம்.

இதையும் படியுங்கள்:
திருப்பதி பக்தர்களுக்கு குட்நியூஸ்.. இனி வாட்ஸ் ஆப் மூலம் டிக்கெட்!
Salt benefits

கல் உப்பு வைத்து பயன்படுத்தும் பாத்திரத்தை மாதத்திற்கு ஒருமுறை சுத்தம் செய்ய வேண்டும். அவ்வாறு சுத்தம் செய்யும்போது மாலை ஆறு மணிக்கு மேல் கல் உப்பு வைத்திருந்த பாத்திரத்தை சுத்தம் செய்வதை தவிர்க்க வேண்டும்.

கல் உப்பை சிறிய பவுலில் நிரப்பி பூஜையறையில் வைப்பதன் மூலமாக இது தெய்வசக்தி மற்றும் செல்வத்தை ஈர்க்கும் என்று சொல்லப்படுகிறது.

எனவே, நீங்களும் கல் உப்பை உங்கள் வீட்டில் இந்த முறையில் பயன்படுத்தி வளமாக வாழுங்கள். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com