நிம்மதியான தூக்கத்துக்கு நல்லதாக சில ஆலோசனைகள்!

Deep sleep
Deep sleephttps://www.ayuruniverse.com
Published on

ரோக்கியமான வாழ்வுக்கு அவசியமான ஒன்று தூக்கம். இடையில் எந்த தொந்தரவும் இல்லாமல் தினமும் குறைந்தது 7 மணி நேரம் தூங்குவது அவசியம். தூக்கத்தில் உங்களுக்கு ஏதேனும் பிரச்னைகள் இருந்தால் அதற்கு தீர்வு கட்டாயம் தேட வேண்டும்.

இரவில் படுத்ததும் தூக்கம் வரவில்லையா? மாலை 6 மணிக்கு மேல் காப்பி, டீ குடிக்காதீர்கள். காலையிலோ மாலையிலோ போதுமான உடற்பயிற்சி செய்யுங்கள். தூங்கப் போவதற்கு அரை மணி நேரம் முன்பிருந்தே செல்போன், டிவி, கம்ப்யூட்டர் என ஒளிரும் திரைகளை பார்ப்பதைத் தவிருங்கள்.

தூக்கத்தில் குறட்டை தொல்லையா? மல்லாந்து, குப்புறக் கவிழ்ந்து படுக்காமல் ஒருக்களித்து படுங்கள். வசதியான உயரத்துக்கு தலையணை வைத்துக் கொள்ளவும். தூக்கத்தில் கழுத்து வலி அவதிப்படுத்துகிறதா? இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது பழைய தலையணைகளை தூக்கிப்போட்டுவிட்டு புதிது வாங்குங்கள். தலை புதையும் அளவுக்கு மென்மையாக இல்லாமல் இறுக்கமாக இருக்கும் இலவம் பஞ்சு தலையணைகள் கழுத்து வலியை தருவதில்லை. ஆழ்ந்த உறக்கம் கிடைக்கவில்லையா? அதிக வியர்வையோ, அதிக குளிரோ இல்லாதபடி இதமான சூழலில் ஏசியை வைத்துக் கொள்ளுங்கள்.

படுத்ததும் நெஞ்சில் அமில எரிச்சல் ஏற்படுகிறதா? இரவு உணவுக்கும் தூங்கச் செல்வதற்கும் இடையே இரண்டு மணி நேர இடைவெளி வேண்டும். வயிற்றிலிருந்து அமிலம் உணவுக் குழாய்க்கு வருகிறது என்றால் அதற்கு சிகிச்சை பெறவும்.

தூங்கி எழுந்ததும் தோள்பட்டை வலிக்கிறதா? வலிக்கும் பக்கத்தை தவிர்த்து இன்னொரு பக்கமாக ஒருக்களித்து படுங்கள். அந்தப் பக்கமும் வலிக்கிறது என்றால் மல்லாந்து படுத்துத் தூங்குங்கள். வயிற்றில் ஒரு தலையணையை வைத்து அதைப் பற்றிக் கொண்டு தூங்குவது வலியை தவிர்க்கும்.

தூக்கத்தில் கால்களில் இறுக்கம் ஏற்படுகிறதா? எந்த இடம் இறுகிப் போயிருக்கிறதோ அங்கு மென்மையாக மசாஜ் செய்து விடவும். மணலை வறுத்து துணியில் மூட்டை போல செய்து சூடு ஒத்தடம் தரலாம். கால்களை மடித்து, நீட்டி ஸ்ட்ரெச்சிங் பயிற்சியும் செய்யலாம்.

இதையும் படியுங்கள்:
மாணவர்களே! மேற்படிப்பைத் தொடங்கும் முன் இதையும் கொஞ்சம் பாருங்க!
Deep sleep

தூங்க விடாமல் முதுகு வலி தொல்லை தருகிறதா? உங்களுக்கு கவிழ்ந்து படுக்கும் பழக்கம் என்றால் தொடைகளுக்கு அடியில் ஒரு எக்ஸ்ட்ரா தலையணை வைத்துக் கொள்ளலாம்.

காலையில் எழுந்திருப்பது சிரமமாக இருக்கிறதா? தினமும் குறிப்பிட்ட ஒரே நேரத்தில் தூங்கச் செல்லுங்கள். ஒரே நேரத்தில் தூங்கி எழுங்கள். அது ஞாயிற்றுக்கிழமையாக இருந்தாலும், மற்ற நாளாக இருந்தாலும் அந்த நேரத்திற்கு தானாகவே விழிப்பு வந்து விடும்.

ஒருபோதும் தூக்கத்திற்காக தூக்க மாத்திரைகளை எடுக்காதீர்கள். இனிமையான பாடல், இதமான கதைகள், தோட்டத்தில் மெதுவாக உலாவுதல் இதுபோல் செய்தாலே தானாகவே தூக்கம் வந்துவிடும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com