

பொங்கலுக்கு வீட்டிற்கு பெயிண்ட் அடித்து வீட்டை சுத்தப்படுத்தி, பொங்கல் வைப்பது நம் முன்னோர்களின் நடைமுறை. அந்த வகையில் வீட்டிற்கு பெயிண்ட் அடிக்கும்போது பணத்தையும் நேரத்தையும் மிச்சப்படுத்தும் எளிய வழிமுறைகள் குறித்து இப்பதிவில் காண்போம்.
பெயிண்ட் அடிக்க முக்கியமாக பிரஸ் வேண்டும்! அதை வாங்க...
1. ஏற்கெனவே வீட்டின் சுவரில் உள்ள வண்ணத்தில் பெயிண்டை அடித்தால் ஒரு கோட் மட்டுமே தேவைப்படும் என்பதால் அதே வண்ணத்தை அடிப்பது செலவை மிச்சப்படுத்தும்.
2. அடர் வண்ணங்களான மஞ்சள், சிவப்பு போன்ற நிறங்களுக்கு அதிக கோட்டுகள் தேவைப்படும் என்பதால் லேசான மற்றும் நடுநிலை வண்ணங்களை தேர்ந்தெடுப்பது பெயிண்ட் செலவை குறைக்கும்.
3. விலை அதிகம் என்றாலும் தரமான ப்ரீமியம் பெயிண்டுகளை வாங்கி அடிக்கும்போது சுவர் தரமாக இருப்பதோடு, நீண்ட கால செலவைக் குறைக்கவும் முடியும்.
4. ஆன்லைன் கால்குலேட்டரை பயன்படுத்தி வீட்டிற்குத் தேவையான அளவு பெயிண்டை மட்டுமே வாங்குவதால் தேவையற்ற அதிகப்படியான பெயிண்ட் வாங்குவதைத் தவிர்க்க முடியும்.
5. பெயிண்ட் அடிப்பதற்கு முன்பாக பழைய பெயிண்டை சுரண்டி நாமே சுத்தம் செய்வதன் மூலம் கூலி செலவைக் குறைக்கலாம்.
6. பெயிண்ட் உதிர்வதைத் தடுக்க பெயிண்ட் அடிப்பதற்கு முன் சுவரில் உள்ள விரிசல்கள் ஈரப்பதத்தை சரி செய்வது வேலையை எளிதாக்கும்.
7. சுவரில் டார்க் கலரில் இருந்து லைட் கலருக்கு மாறுவது அல்லது அதிக ஷீனிலிருந்து குறைந்த ஷீனுக்கு மாறும்போது மட்டுமே பிரைமர் தேவைப்படும் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.
8. சீசன் இல்லாத நேரங்களில் பெயிண்ட் அடிக்கும்போது ஆட்களிடம் வேலை வாங்கவும் கூலி குறைவாக இருக்கவும் வாய்ப்பு உள்ளதால் ஆப் சீசனில் பெயிண்ட் அடிக்க வேண்டும்.
9. பல ஒப்பந்ததாரர்களிடம் விலையைக் கேட்டு ஒப்பிட்டு வேலைக்கு அமர்த்துவதன் மூலம் செலவை வெகுவாகக் குறைக்கலாம்.
10. ஒரே நேரத்தில் வீட்டின் உட்புறமும் வெளிப்புறமும் பெயிண்ட் அடிக்கும் வேலைகள் அனைத்தையும் முடித்துக்கொள்வது செலவை குறைப்பதற்கான மிகச் சிறந்த வழியாகும்.
மேற்கூறிய வழிமுறைகளைக் கடைபிடித்து பெயிண்ட் அடிக்க வேண்டும் என நினைப்பவர்கள் முன்கூட்டியே அதை மேற்கொண்டால் செலவும் பணமும் வெகுவாகக் குறையும்.
பெயிண்ட் அடிக்க முக்கியமாக பிரஸ் வேண்டும்! அதை வாங்க...