Rice Insects: அரிசியில் அதிக வண்டு இருக்கா? இப்படி செஞ்சா ஒண்ணு கூட இருக்காது!

rice weevil
Rice weevil
Published on

வீட்டில் அரிசி இருந்தாலே, சில நாட்களில் அதில் வண்டுகள் அங்கும், இங்கும் ஓடிக்கொண்டிருப்பதை பார்க்க முடியும். குறிப்பாக மூட்டைகளில் சேமிக்கப்படும் அரிசியை வண்டு மற்றும் ஈரப்பதத்தில் இருந்து காப்பாற்றுவதே இல்லத்தரசிகளுக்கு பெரும் வேலை. அதனை சின்னஞ்சிறு குறிப்புகள் மூலம் விரட்டியடிப்பது எப்படி என பார்க்கலாம்.

இந்தியர்களின் முக்கிய உணவாக அரிசி உள்ளது. அதனால் ஒவ்வொரு வீட்டிலும் அரிசி மூட்டைகள் குவிந்து கிடக்கின்றன. ஆனால், அரிசியில் பூச்சித் தாக்குதல் பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. ஒரு வண்டு அரிசிக்குள் நுழைந்து நூற்றுக்கணக்கான வண்டுகளையும், புழுக்களையும் உருவாக்குகிறது.

இதனால் அரிசி முழுவதும் கெட்டுவிடும். அவற்றை விரட்டியடிக்க மணிக்கணக்கில் செலவழிக்க வேண்டும். எனவே அரிசியில் பூச்சிகள் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்வது நல்லது.

பூச்சிகள் வராமல் தடுக்க:

அரிசி மூட்டையைத் திறக்கும்போது, அரிசிக்குள் பூச்சிகள் வராமல் இருக்க சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அரிசியை சேகரித்து வைக்கக்கூடிய மூட்டை அல்லது டப்பாவில் சில பிரியாணி இலைகளைப் போட்டு வைக்கலாம்.

பிரியாணி இலைகள் ஆரோக்கியத்திற்கும் நல்லது. தற்செயலாக சாப்பிட்டாலும் பிரச்னை இல்லை. இது மிகவும் எளிமையான தீர்வு.

கிராம்பு இருக்க பயமேன்:

கிராம்பு வீட்டில் இருப்பது இயற்கை. கிராம்பு வாசனை பூச்சிகளுக்கு பிடிக்காது. எனவே அரிசி பையில் கிராம்புகளை எடுத்து கலக்கவும். மேலும், கிராம்பு சேர்த்த பிறகு, அரிசி பையை திறக்காமல் இறுக்கமாக கட்டவும். அந்த கார வாசனை அரிசியுடன் கலந்துவிடும். இது பூச்சி உள்ளே நுழைவதைத் தடுக்கிறது. புழு முட்டையிடாமல் வெளியேறும் சாத்தியமும் உள்ளது.

இதையும் படியுங்கள்:
நீங்க காளான்களை சரியாதான் சுத்தம் செய்றீங்களா?
rice weevil

பூண்டு மற்றும் கிராம்பு:

பூண்டுப் பற்கள் அரிசியில் தொற்று ஏற்படாமல் தடுக்கின்றன. ஏனெனில் பூண்டு கிருமி நாசினியாக செயல்படுகிறது. தோல் நீக்கப்பட்ட பூண்டுடன் கிராம்புகளைச் சேர்க்கவும். ஏனெனில் பூண்டின் தோல் அகற்றப்படாவிட்டால், கடுமையான வாசனை அரிசியில் ஒட்டிக்கொண்டு போகாது.

புதினா இலைகள்:

புதினா இலையை உலர்த்தி பொடி செய்து, அதனை அரிசியுடன் கலந்தால் அரிசியில் பூச்சி தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறையும். புதினா ஆரோக்கியத்திற்கும் நல்லது. இதனை அரிசியுடன் கலந்து சமைத்தாலும், பிரச்னை இருக்காது.

இதேபோல் வேப்ப இலைகள் அரிசியை பூச்சிகளிடமிருந்து பாதுகாக்கும். இந்த வேப்ப இலைகளையும் உலர்த்தி பொடியாக்கி சாதத்துடன் கலந்து சாப்பிடுவார்கள். ஆனால் சமைக்கும் போது அரிசியை சுத்தம் செய்யவில்லை என்றால், வேம்பு அரிசியில் கசப்பை சேர்க்கும். எனவே உலர்ந்த வடிவத்திற்கு பதிலாக அரிசியில் வேப்ப இலைகளை கலக்க முயற்சிக்கவும்.

அரிசியை நனைய விடாதீர்கள்.

எல்லாவற்றிற்கும் மேலாக, அரிசி மூட்டையைத் திறந்த பிறகு ஈரமாகாமல் பார்த்துக் கொள்வது அவசியம். ஈரப்பதம் இருந்தால், புழு விரைவில் அங்கு குடியேறும்.

இதையும் படியுங்கள்:
40 வயதிற்கு மேற்பட்டோர் அவசியம் சாப்பிட வேண்டிய 3 வகை உணவுகள்!
rice weevil

வெற்றிட சீல் (Vaccume Seal) முறையும் அரிசியில் உள்ள ஈரப்பதத்தை நீக்கி பூச்சிகளிடமிருந்து பாதுகாக்கும். ஆனால் இந்த முறை அனைவருக்கும் கிடைக்காது. எனவே மேற்கூறிய வீட்டுக் குறிப்புகளைப் பின்பற்றி அரிசியைப் பாதுகாப்பது சிறந்தது.

அதேபோல் பிரியாணி அரிசியில் சிறிதளவு உப்புத்தூள் கலந்து நிழலில் உலர்த்திய பிறகு டப்பாவில் போட்டு வைத்தால் வண்டுகள், பூச்சிகள் அண்டாது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com