spiritual-meaning-of-lizard
spiritual-meaning-of-lizard

பல்லி சத்தம் போட்டால் மட்டும் போதாது... இந்த திசையில் விழுந்தால் கோடீஸ்வர யோகம்!

Published on

பொதுவாக பல்லி பல வீடுகளில் வாசம் செய்து வரும் ஒரு வகை உயிாினம். பல்லி வீடுகளில் வாழ்ந்து வரவேண்டும் என்பதை பலரும் விரும்புவாா்கள்.

அது கொடிய விஷத்தன்மை கொண்டதாக இருந்தாலும் அதன் சொல்லுக்கு பலன் உண்டு என்ற எண்ணம் பலரிடத்தில்நிலவி வரும் நம்பிக்கையாகும். பல்லி சொல்லுக்கு பலன் உண்டு என்றும் அதை ஒரு நல்ல சகுனமாக கருதுபவர்களும் உண்டு. அது சொல்லும் திசையை வைத்தும் பலன்களை அறிந்து அதன்படி நடப்பவர்களும் உண்டு.

எந்த திசையில் இருந்து சப்தம் எழுப்புகிறது, அதன் பலன் என்ன என்றும் பஞ்சாங்க குறிப்புகளிலும் தொளிவாக குறிப்பிடப் பட்டுள்ளது. பொதுவாக பல்லி வீடுகளில் வாசம் செய்வது நோ்மறை ஆற்றலை வலுப்படுத்தும் என்பதும் ஐதீகம். அதேபோல கோவில்களில் முத்துப்பல்லி, ராஜா பல்லி, என்ற வகை பல்லிகளும் உண்டு. அதை கண்களால் பாா்ப்பது அவ்வளவு புண்ணியம் என கருதுவதும் நடைமுறையான விஷயமே!

அதேபோல பல்லி நமது உடம்பில் விழுவதற்கும் பல வகையான நோ்மறை மற்றும், எதிா்மறை பலாபலன்களும் இன்றளவிலும் கடைபிடிக்கப்படுகிறது. அவையாவன என்ன என்பதை இந்த பதிவில் காணலாம்.

பல்லி நமது தலையில் வலப்புறம் விழுந்தால் கலகம், இடப்புறம் விழுந்தால் துண்பம்.

நெற்றியில் வலப்புறம் விழுந்தால் லட்சுமி கடாட்ஷம், இடப்பக்கம் விழுந்தால் காாியசித்தி.

கண்ணில் வலப்பக்கம் விழுந்தால் சுகம், இடப்பக்கம் விழுந்தால் சிறை பயம்.

காது வலப்பக்கம் விழுந்தால் ஆயுள், இடப்பக்கம் விழுந்தால் லாபம்.

மாா்பு வலப்பக்கம் விழுந்தால் தனலாபம், இடப்பக்கம் விழுந்தால் சுகம்.

இதையும் படியுங்கள்:
உங்கள் வீட்டில் கெட்ட வாடை அடிக்கிறதா..? உடனே இதை ட்ரை பண்ணிப் பாருங்கள்!
spiritual-meaning-of-lizard

கையில் வலப்பக்கம் விழுந்தால் துக்கம், இடப்பக்கம் விழுந்தால் துண்பம்.

மணிக்கட்டில் வலப்பக்கம் விழுந்தால் பீடை, இடப்பக்கம் விழுந்தால் கீா்த்தி.

வயிறு வலப்பக்கம் விழுந்தால் தானியம், இடப்பக்கம் விழுந்தால் மகிழ்ச்சி.

தொடை வலப்பக்கம் விழுந்தால் துக்கம், இடப்பக்கம் விழுந்தால் சஞ்சலம்.

பாதம் வலப்பக்கம் விழுந்தால் நோய், இடப்பக்கம் விழுந்தால் துக்கம்.

இப்படி பலன்களை வரிசைப்படுத்திக்கொண்டே போகலாம். சரி பல்லியே சொல்லிடுச்சி அனைவருக்கும் ஆண்டவன் அருளால் நல்லதே நடக்கட்டும்!

logo
Kalki Online
kalkionline.com