
பள்ளியில் படிக்கும் குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் வரை மன அழுத்தம் தற்போது தவிர்க்க முடியாத ஒன்றாகி வருகிறது. பிள்ளைகளுக்கு பாடச் சுமையினால் மன அழுத்தம் என்றால், பெண்களுக்கு வீட்டு வேலை, அலுவலக வேலை போன்றவற்றாலும் பெரியவர்களுக்கு உறவுகள் புறக்கணிப்பு போன்ற வேறு விதமான வழிகளிலும் மன அழுத்தம் மற்றும் பதற்றம் ஏற்படுகிறது. இதை எப்படிப் போக்குவது என்பது குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
உடல் அழுத்தத்தை குறைக்கும் வழிகள்: நடைப்பயிற்சி, ஓட்டம் அல்லது யோகா போன்ற வழக்கமான உடல் செயல்பாடு பயிற்சிகள் மன அழுத்தத்தைக் குறைத்து மனநிலையை மேம்படுத்த உதவும். இதமான மசாஜ்கள் பதற்றமான தசைகளை தளர்த்தவும் தளர்வை ஊக்குவிக்கவும் உதவும். ஆழ்ந்த சுவாசப் பயிற்சிகள் மனதையும் உடலையும் அமைதிப்படுத்த உதவும்.
மன அழுத்தத்தைக் குறைத்தல்: மனநிறைவு, தியானம், தளர்வு மற்றும் கவனத்தை ஊக்குவிப்பதன் மூலம் மன அழுத்தத்தையும் பதற்றத்தையும் குறைக்க உதவும். நமது மனதில் எழும் எண்ணங்களையும் உணர்வுகளையும் எழுதுவது உணர்ச்சிகளைச் செயலாக்கவும் விடுவிக்கவும் உதவும் வழி. எதிர்மறை சிந்தனையை விடுத்து, நேர்மறையான உறுதிமொழிகளைப் பயிற்சி செய்வது கண்ணோட்டத்தை மாற்றவும் மன அழுத்தத்தைக் குறைக்கவும் உதவும்.
படைப்பு வழியே மன அழுத்தத்தைக் குறைத்தல்: ஓவியம் வரைதல் அல்லது கைவினை போன்ற படைப்பு நடவடிக்கைகள் மற்றும் இசையைக் கேட்பது அல்லது உருவாக்குவது போன்ற கலை வழி சிகிச்சைகள் மன அழுத்தத்தைக் குறைக்கவும் மனநிலையை மேம்படுத்தவும் உதவும். இதில் தாவரங்களை வளர்க்கும் தோட்டக் கலையும் அடங்கும்.
சமூக மன அழுத்தத்தைக் குறைக்கும் மருந்துகள்: தனிமை தரும் மன அழுத்தம் நீங்க நண்பர்கள், குடும்பத்தினர் அல்லது ஆதரவுக் குழுவுடன் இணைவது மிகவும் அவசியம். மற்றவர்களுடன் சிரிப்பதும் நகைச்சுவையைப் பகிர்ந்து கொள்வதும் சோகமான மனநிலையை மேம்படுத்த உதவும். செல்லப்பிராணிகளுடன் நேரத்தைச் செலவிடுவது மன அழுத்தத்தைக் குறைக்கும் முக்கிய வழிகளில் ஒன்று.
மன அழுத்தத்தைக் குறைக்கும் பிற வழிகள்: அரோமா தெரபி எனப்படும் லாவெண்டர் அல்லது கெமோமில் போன்ற சில வாசனை திரவியங்கள் மன அழுத்தத்தைக் குறைக்கும். இயற்கையுடன் நேரத்தைச் செலவிடுவது மற்றும் மனம் மகிழும் பிடித்த செயல்களில் ஈடுபடுவது மனதை அழுத்தத்திலிருந்து திசை மாற்றும்.
குறிப்பாக, தனிமையில் இருப்பதைத் தவிர்ப்பது, தகுந்த ஓய்வு, மனதுக்கு நெருக்கமாக உள்ளவர்களிடம் பேசி பகிர்ந்து கொள்வது, அவ்வளவு ஏன் கள்ளமின்றி சிரிக்கும் குழந்தைகளைக் கொஞ்சுவதும் ஸ்ட்ரெஸ் பஸ்டருக்கு சிறந்த வழிகள்.
இதுபோன்ற எளிய மன அழுத்த நிவாரணிகளை உங்கள் அன்றாட வழக்கத்தில் இணைப்பதன் மூலம் நமது மன அழுத்தத்தை சிறப்பாக நிர்வகிக்கலாம் மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்தலாம்.