
மகிழ்ச்சியான, அமைதியான வாழ்க்கையை விரும்பாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அந்த வகையில் அமைதியான வாழ்க்கைக்கு மாலை நேரத்தில் செய்ய வேண்டிய 5 விஷயங்கள் குறித்து இந்தப் பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
1. சிறிது நேரம் அமர்ந்து சிந்தியுங்கள்: தினமும் மாலையில் 10 நிமிடங்கள் அமைதியாக உட்கார்ந்து அன்றைய நாளில் செய்த செயல்களைப் பொறுத்து அந்த நாள் எப்படி சென்றது; மற்றவர்களிடமிருந்து என்ன கற்றுக்கொண்டோம்; என்ன தவறு செய்தோம் போன்றவற்றை அமைதியான மனநிலையுடன் உட்கார்ந்து சுய பரிசோதனை செய்வது நம்முடைய குறைகளையும் பலத்தையும் வெளிப்படுத்தும் விதமாக அமையும் என்பதால் மாலையில் தினமும் சிறிது நேரம் அமர்ந்து சிந்திக்க வேண்டும்.
2. திட்டமிடல்: வாழ்க்கையில் முன்னேறுவதற்கு திட்டமிடல் ஒரு முக்கிய விஷயமாக இருப்பதால் முதல் நாள் இரவே நாளை செய்ய வேண்டிய பட்டியலை தயாரித்து திட்டமிட வேண்டும். இது நேரத்தை வீணாக்காமல் இருப்பதோடு, தெளிவான குறிக்கோளுடன் அந்த நாளைத் தொடங்க உதவும். மேலும், இந்தப் பழக்கம் வேலையில் தரம் மற்றும் உற்பத்தித் திறன் இரண்டையும் அதிகரிக்கும் என்பதால் திட்டத்தை திட்டமிட்டுக் கொள்ள வேண்டும்.
3. மொபைல்களிலிருந்து விலகியிருங்கள்: இன்றைய வாழ்வின் மிக முக்கிய அம்சமாக இருக்கும் மொபைல்கள், மடிக்கணினிகள், கணினிகள் போன்ற டிஜிட்டல் உலகத்தில் இருந்து விலகி இருக்க வேண்டும். அதற்கு பதிலாக தியானம் மற்றும் குடும்பத்தினருடன் பேசி மகிழ வேண்டும். இது நல்ல தூக்கத்தையும் மன அமைதியையும் தருவதாக அமையும்.
4. உடல் செயல்பாடுகள்: ஓய்வு ஒவ்வொரு நாளும் தேவை என்பதால் மாலையில் உங்களுக்காக சிறிது நேரம் ஒதுக்கி நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும் இது உடலில் ஏற்படும் சோர்வை நீக்கி, நல்ல தூக்கத்தை கொடுத்து அடுத்த நாள் புத்துணர்ச்சியுடன் தொடங்குவதற்கு வழி வகுக்கும் என்பதால் உடல் செயல்பாடுகள் அத்தியாவசியமானவை.
5. புத்தக வாசிப்பு: புத்தக வாசிப்பு மனதை அமைதிப்படுத்துவதற்கு சிறந்த வழியாகும். ஆகவே, உங்களுக்கு பிடித்த புத்தகத்தை இரவில் படிப்பது கவனத்தை அதிகரித்து மனதிற்கு அமைதியை தரும் என்பதால் உங்களுக்கு ஆர்வமுள்ள துறையில் உள்ள புனைக்கதை அல்லது புனைக்கதை அல்லாத புத்தகங்களைப் படிப்பதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.
மேற்கூறிய ஐந்து பழக்கங்களும் மனதிற்கு அமைதியை கொடுத்து, மகிழ்ச்சியை உண்டாக்கும் என்பதால் தவறாமல் இவற்றைக் கடைபிடிப்பதை கடமையாகக் கொள்ள வேண்டும்.