
வீட்டிற்கு தேவையான ஒரு பொருளை வாங்க வேண்டும் என்று திட்டமிட்ட இல்லத்தரசிகளுக்கு தமிழ் புத்தாண்டு சலுகைகள் ஒரு நல்ல வாய்ப்பாக அமைகின்றன. தமிழ் புத்தாண்டு நாளுக்கு ஒரு மாதம் முன்னதாகவே பல்வேறு சலுகைகளுடன் வீட்டு உபயோக பொருட்கள் தவணை முறையில் பல பரிசுகளுடன் தரப்படுகின்றன.
அவ்வாறு வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்கும் இல்லத்தரசிகள் கவனத்துக்கு…
* சித்திரை புத்தாண்டு சலுகை விலையில் பொருள்களை வாங்கச் செல்லும்போது என்ன பொருள், என்ன பிராண்டு, என்னென்ன வசதி இருக்க வேண்டும் என்பது பற்றி தெளிவு வேண்டும். கடைகளில் ஒவ்வொரு நிறுவனத்தின் பிரதிநிதிகளும் வெவ்வேறு கருத்துக்களை தெரிவிப்பார்கள் என்பதால் தெளிவு அவசியம்.
* ஒரு பொருளை வாங்கும்போது முன்னணி பிராண்டை வாங்குவதா அல்லது லோக்கல் பிராண்டை வாங்குவதா என்று முடிவு செய்ய வேண்டும். குறைந்த காலத்துக்கு பயன்பாடு என்றால் லோக்கல் பிராண்ட், நீண்ட நாள் பயன்பாட்டுக்கு முன்னணி பிராண்ட் வாங்கலாம்.
* கடைக்கு செல்வதற்கு முன் அந்த பொருளை உபயோகப்படுத்தும் நண்பர்களிடம் விபரமாக கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். அதன் மூலம் பல்வேறு பயனுள்ள தகவல்கள் கிடைக்கும். தவணையில் பொருள் வாங்கும்போது ஜீரோ பர்செண்ட் வட்டியில் வாங்குவது நல்லது.
* வீட்டு உபயோகப் பொருள்களை ஆன்லைனில் வாங்குவதைவிட நேரடியாகச் சென்று பார்த்து வாங்குவது நல்லது. அந்த தயாரிப்புக்கு கிடைத்த ஆன்லைன் ரிவ்யூக்களை படித்து சென்றால் சந்தேகங்களைக் கடையில் கேட்டுத் தெளிவு பெறலாம்.
* பொருளை வாங்கும்போது அதற்குத் தேவையான உதிரி பாகங்களையும் வாங்கி விடுவது நல்லது. இல்லாவிட்டால் ஒரிஜினல் கிடைக்காமல் போகலாம்.
* எக்ஸ்டெண்ட் வாரண்டி கொடுக்கப்படும் பொருள்களைப் பார்த்து வாங்குவது நல்லது. வாரன்டி கார்டு தொலைந்துவிட்டால், செல்போன் எண்ணைக் கொடுத்து மீண்டும் வாங்கலாம் என்பதால் செல்போன் எண்ணை மறவாமல் கொடுக்க வேண்டும்.
* வீட்டு உபயோகப் பொருள்களை இன்ஸ்டால் செய்ய பிராண்ட் பிரதிநிதி அல்லது கடை ஊழியர்களை வைத்து செய்வது நல்லது. அவர்கள் இன்ஸ்டால் செய்வது பற்றிய பயிற்சி பெற்றிருப்பார்கள். ஏதேனும் குறைபாடு இருந்தாலோ, இன்ஸ்டால் செய்யும்போது ஏதாவது உடைந்துவிட்டாலோ மாற்றி புதியதாக தர முடியும்.
ஆண், பெண் குழந்தைகளுக்கேற்ற அழகு வண்ண ஆடைகள்
* குழந்தைகளின் ஆடைகளை தேர்வு செய்வதில் சில குறிப்புகளை எப்போதும் மனதில் கொள்ள வேண்டும். முதலாவதாக, ஒன்று முதல் பத்து வயது வரையுள்ள குழந்தைகளுக்கு ஆன்லைன் மூலம் ஆடைகளை வாங்காமல், நேரில் கடைக்குச் சென்று வாங்குவதே பொருத்தமாக இருக்கும். ஆடையின் நிறம், அணியும் நோக்கம் மற்றும் காலம், அணிவதில் உள்ள வசதி ஆகிய விஷயங்களை இல்லத்தரசிகள் மனதில் கொண்டு குழந்தைகளின் உடைகளை தேர்வு செய்யலாம்.
* ஆண் குழந்தைகளை பொறுத்தவரை எப்போதுமே நேரு ஜாக்கெட், மோடி ஜாக்கெட் ஆகியவற்றுடன் குர்தா அணிவது வழக்கம். அந்த ஜாக்கெட்டுகளில் பிரிண்ட் செய்யப்பட்டு, டயகனல் ஓப்பனா செட்டப் ஆக இருக்கும். பேன்ட் பிளெயின் ஆகவும், குர்தா மற்றொரு பிளெயின் நிறத்தில் அதற்கு மேலே ஜாக்கெட் ப்ரோகேட் மற்றும் எம்பிராய்டரி, பிரிண்ட் வகைகளாக கிடைக்கின்றன.
* பிரின்ட் செய்யப்பட்ட குர்தா வகைகளும், சைனீஸ் காலர், சைடு பொத்தான் வைத்து கிடைக்கின்றன. அதற்கேற்ப கீழே அணியும் பேன்ட், கௌல் டோத்தி, டோத்தி சல்வார் என பேன்ட் அல்லது பைஜாமாக்களுக்கு மாற்று வகைகளும் உள்ளது.
* மேற்கத்திய, இந்திய பாணி ஷெர்வானி ஆடைகளில் பட்டில் உருவான அச்கன் ஜாக்கெட், ப்ரோகேட், லக்னோ எம்ப்ராய்டரி செய்த ஷெர்வானி சிறுவர்களுக்கு நன்ராக இருக்கும். லினென் ஆடை குர்தா, பைஜாமா, காட்டன் சில்க் பைஜாமா, டிசைனர் குர்தா, பைஜாமா போன்ற வகைகளும் பரவலாக கிடைக்கின்றன.
* பிளெயின் ஆர்ட் ட்யூபியன் சில்க் குர்தா செட், வோவன் காட்டன் ஜக்கார்டு குர்தா செட், பிளெயின் மட்கா சில்க் குர்தா டோத்தி செட், எம்பிராய்டரி ட்யூபியன் சில்க் ஷெர்வானி, சன்கனேரி பிரிண்ட் காட்டன் குர்தா, பைஜாமா, பாலி காட்டன் குர்தா, பைஜாமா, கை எம்பிராய்டரி குர்தா செட், பஹல்பூரி சில்க் குர்தா செட், காம்போ ஆர்ட் சில்க் ஷெர்வானி செட், சாலிட் காலர் காட்டன் ஏசிமெட்ரிக் குர்தா, ரேயான் குர்தா, பிரிண்டட் கோட்டா சில்க் குர்தா, பிளெயின் காட்டன் பைதானி சூட் போன்ற வகைகள் ஆண் குழந்தைகளின் குறும்புக்கு ஏற்றவையாக உள்ளன.
* பெண் குழந்தைகளுக்கு என்று அழகிய ஆடை வகைகள் கணக்கிலடங்காமல் உள்ளன. வரிசையாக பிளீட்ஸ் கொண்ட லெஹங்காக்கள், இடுப்பு வரை அணியும் சோளி, மேற்கத்திய டாப்ஸ் ஆகியவை இப்போது பரவலாக உள்ளது. சல்வார் சூட், பளாஸோ பேன்ட்டுகள், மேல் கையில்லாத சின்ன டாப், மேலே அணிய நீளமான அங்கி ஆகியவை நாகரீகமாக இருக்கும். டோத்தி ஸ்டைல், கவுன்கள், ஜாக்கெட் வித் சல்வால் கமீஸ், கிராப் டாப் மற்றும் பளாஸோ என பல மாடல்களும் வரிசையாக உள்ளன.
கவுன்களில் கூட விதவிதமான மாடல்கள் அழகழகாய் உள்ளன. நீண்ட கவுன், கைகளில் ஹேண்ட் ஹோல் மாடல், கழுத்தில் நீள்வட்ட வடிவ ஹோல் இருந்தால் பெண் குழந்தைகளுக்கு பொருத்தமாக இருக்கும். கவுனில் இரண்டு மூன்று லேயர் டிசைனும் வருவதும் இப்பொழுது பெண் குழந்தைகள் அணியக்கூடிய புது வரவு என்றே சொல்லலாம். லைனிங் வைத்த கவுன்கள், எம்பிராய்டரி செய்யப்பட்ட கவுன்கள், ஒளி பரப்பும் கிளிட்டரிங் கவுன்கள், செல்ப் டிசைன் கவுன்கள் என்று நிறைய உள்ளன.
முழங்கால் வரை உள்ள குட்டை பிராக்குகளுக்கு போட் நெக் வைத்து, குட்டைக் கை, இடுப்பில் பெல்ட், அதன் மேல் பெரிய ஷேட்டின் பூக்கள் டிசைன் ஆகியவை பெண் குழந்தைகளின் அழகுக்கு ஏற்ற தேர்வாக இருக்கும்.
கைக்குழந்தையைக்கூட அலங்கரிக்கும் விதமாக அழகான வண்ணங்களில் சில்க் பிராக், சிறிய பெட்டியில் கஸ்தூரி மஞ்சள், பால்பாசி மணி, தண்டை, வசம்பு, கருப்பு வெள்ளை கை வளையல், கண் மை ஆகிய அனைத்தும் ஒரே செட்டாக கிடைக்கும்.
அத்துடன் பனாரஸ் கிளாத் லாங் ப்ராக், சுடிதார்கள், லெஹங்கா, டிசைனர் சல்வார் சூட், பட்டுப் பாவாடை செட், வளையல், நெக்லஸ், பொட்டு, கொலுசு என்று எல்லா பண்டிகைக்குமான கலெக்ஷன்ஸ் பெண் குழந்தைகளுக்கு ஏற்றவையாக உள்ளன.