நம் வீட்டு சமையலறையில் உள்ள ரெடிமேட் கிளினிக்...இதோ உங்களுக்கான 10 டிப்ஸ்!

Indian Kitchen
Indian Kitchenpixabay.com
Published on

டலுக்கு ஆரோக்கியம் தந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள நம்மை சுற்றியுள்ள எளிதில் கிடைக்கும் பழங்கள், காய்கறிகள், இயற்கை உணவுகள் உதவி புரிகிறது என்றால் வியப்பாக இருக்கும். கிச்சன் கிளினிக் என நம் ஒவ்வொருவருக்கும் பயன் தரும் பல பொருட்கள் சமையலறையில் உள்ளது. அவற்றில் சில பொருட்களை காணலாம்.

  1. ரோஜா இதழ்களை நிழலில் காயவைத்து ,அது நன்கு காய்ந்ததும் ஏலக்காய்,சுக்கு சேர்த்து நன்கு பொடித்துக் கொள்ளவும்.தினமும் இதனை வெதுவெதுப்பான தண்ணீரில் தேன் கலந்து பருகி வர உடல்சூடு குறைவதுடன் எடையும் குறையும்.

  2. அத்திப்பழம், பேரீச்சம் பழம் சம அளவு எடுத்து அரைக்கவும். பனை வெல்லத்தை கரைத்து பாகு வைத்து இதனுடன் அரைத்த விழுது சேர்த்து ஜாம் போல செய்து வைத்துக் கொண்டு அடிக்கடி சாப்பிட்டு வர ரத்தசோகை வரவே வராது.

  3. பூண்டு, வெங்காயம், தக்காளி, நச்சுக் கொட்டை கீரை சேர்த்து வதக்கவும். இதனுடன் மிளகு, சீரகம் சேர்த்து அரைத்து சட்னியாகவோ,தொக்காகவோ சாப்பிட வாதம் வராது.

  4. புதினா, நசுக்கிய இஞ்சியை கொதிக்கும் நீரில் போட்டு காய்ச்சி பின் வடிகட்டி அருந்த வயிற்று பொருமல், அஜீரணம் சரியாகும்.

  5. செர்ரிப் பழங்களை பொடியாக நறுக்கி மாதுளைச்சாற்றில் ஊற விடவும்.மாலையில் இதனுடன் ஒரு சிட்டிகை கசகசா பொடிகலந்து சாப்பிட நன்றாக தூக்கம் வரும். உடலில் ரத்தத்தை அதிகரிக்க துணை செய்யும்.

  6. மாதுளம்பழ ஜுஸில் தேன் கலந்து பருகி சருமம் பளபளப்பாவதுடன் பித்தத்தைக் குறைக்கும்.

  7. பயத்தம் பருப்பை வேகவிட்டு அதில் தேங்காய்பால், வெல்லம் சேர்த்து சாப்பிட அல்சர் குணமாகும்.

  8. அரை நெல்லிக்காயுடன் உப்பு, 2 மிளகு 1/4டீஸ்பூன் சீரகம் வைத்து  அரைத்து கடைந்த மோருடன் குடிக்க மஞ்சள் காமாலை குணமாகும்.

  9. உப்பு,புளி, பெருங்காயம், மிளகு எல்லாவற்றையும் தனித்தனியாக சூடான வாணலியில் வறுக்கவும். இதனுடன் கறிவேப்பிலை சேர்த்து துவையலாக்கி சாப்பிட வாயு கோளாறுகள் நீங்கும். இளநரையும் மறையும்.

  10. முடக்கத்தான் கீரையை உணவில் சேர்த்துக்கொள்ள மூட்டு வலி,வீக்கம் குறையும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com