

குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று. அதேபோல எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மன்னில் பிறக்கையிலே, அவர் நல்லவர் ஆவதும், கெட்டவர் ஆவதும் அன்னை வளா்க்கையிலே, என்ற பாடலுக்கேற்ப குழந்தைகளை வளா்ப்பதில் பெற்றோா்களின் பங்கு அதிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். பொதுவாக ஆண் அல்லது பெண் குழந்தை பிறந்தால் பாகுபாடு பாா்க்கவேண்டாம்.
இதிலென்ன பேதம்! இருபால் குழந்தைகளையும் வளா்ப்பது என்பது ஒன்றுதான். ஆரம்பத்தில் இருந்தே நோய் எதிா்ப்பு சக்தியை வளர்க்க வேண்டும். அதேபோல ஊட்டமான உணவு வகைகளை அது பிடிக்கும் இது பிடிக்கும் என பாகுபாடில்லாமல் சரிவிகித உணவாக கொடுத்து வரவேண்டும். சாதாரண காய்ச்சல் என்றால் வீட்டில் வயதான பாட்டி அல்லது அம்மா அவர்களால் தயாாித்து கொடுக்கப்படும் கஷாயம் போன்றவைகளை கொடுக்கவேண்டும். தொட்டதற்கெல்லாம் மருத்துவமனை போகவேண்டாம்.
நமக்கு தொல்லை எனக்கருதி செல்போன்களை குழந்தகளிடம் கொடுக்கவேண்டாம். தாய்மாா்கள் குழந்தைகள் படிக்கும் நேரத்தில் தொலைக்காட்சி மெகா தொடர்களை தியாகம் செய்யலாம். அன்றைய பாடதிட்டங்களை படிப்பது போன்ற விஷயங்களில் கவனம் செலுத்துவதும் நல்லதே!
பொியவர்களை மதிக்கும் பழக்கத்தை ஆரம்பத்திலேயே சொல்லிக்கொடுப்பதும் நலமே! பிடிவாதம், ஒட்டாரம், பிடித்து கேட்கும் பொருட்களை உடனே வாங்கித்தருவதை தவிா்ப்பதில் கணவனும் மனைவியும் பேசி ஒரு முடிவுக்கு வருவது நல்லது. நிறைய புத்தகங்கள் படிக்க அறிவுத்தலாம். அழகு தமிழ் இருக்க டாடி மம்மி ஏன் அதை தவிா்க்கலாமே!
உறவினர்கள் வந்தால் மரியாதை கொடுத்து பேசச்சொல்லுங்கள். தெய்வ சிந்தனை, அறநெறி நல்ல பழக்கவழக்கம் மனிதநேயம் நீதி நெறிமுறை இவைகளை நயமாக கற்றுக்கொடுங்கள். பிடிவாத குணத்தை வளர்க்க வேண்டாம். குடும்ப வறுமையை சொல்லி வளர்ப்பது நல்ல காாியமாகும்.
குழந்தைகள் எதிாில் கணவன் மனைவி சண்டை போடுவது நிறுத்தப்படுவதே உசிதமான ஒன்று. நடைப்பயிற்சி, யோகா இவைகளை கற்றுக்கொடுப்பது சிறப்பான செயலே!
பொதுவாகவே அவரவர் வேலையை அவர்களே செய்து கொள்ளும் பழக்கத்தை ஊக்குவிப்பதும் நல்லதே! விளையாட்டு சங்கீதம் போன்ற அவர்களது திறமையை வளர்க்கும் அனைத்தையும் தொடர்ந்து செய்ய அனுமதித்து ஊக்கமளிக்கலாம்.
அக்கம் பக்கத்தினா்கள் உறவினா்கள் ஆகியோா்களை மரியாதையாய் அழைக்க கற்றுக்கொடுக்கலாமே! அடுத்த வீட்டு பிள்ளைகளோடு நம் வீட்டுப்பிள்ளைகளை ஒப்பிட்டு பேசுவதை தவிா்க்கலாம்! அவர்களின் எதிா்காலம் கருதி சேமிப்பில் கவனம்செலுத்தலாம்.
படிப்பு விஷயத்தில் அவர்களின் விருப்பம் அறிந்து எது ஒத்து வரும் என கலந்து முடிவு எடுப்பது நலம். கடவுள் வழிபாடு ஆன்மிக உணர்வு இவைகளில் ஈடுபட வைப்பது சிறந்த ஒன்றாகும்.
பெண் குழந்தைகளை அக்கம் பக்கத்து வீடுகளுக்கோ, இரவு நேரங்களில் பக்கத்தில் இருக்கும் கடைகளுக்கு ஏதாவது வாங்கி வா என அனுப்பவேண்டாம். நல்லவிதமான தொடு உணர்வு கெட்டவிதமான தொடு உணர்வு இவைகளின் அர்த்தம் புாிய வைப்பதே உயர்வானதாகும்.
இன்னும் எத்தனையோ அறிவுரைகள் இருக்கிறது அவைகளை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக கற்றுத்தருவதே சிறப்பிலும் சிறப்பாகும் பொதுவாக நல்ல நெறிமுறைகளை சொல்லிக்கொடுத்து ஒழுக்கம் கடைபிடித்து நல்ல பிள்ளைகளாக அவர்களை உருவாக்குவது பெற்றோா்கள் கையில்தான் உள்ளது.