பணத்தை சேமிக்கும் கலை: சிக்கனம், தர்மம் மற்றும் திட்டமிடல்!

Life style articles
The art of saving money
Published on

பொதுவாகவே மனிதன் வாழ்வதற்கு பணம் முக்கிய பங்கு வகிக்கிறது, சிலர் பணம் பணம் என்று அலைவாா்கள்.

சிலர் கிடைத்தது போதும் என திருப்தியுடன் வாழ்நாளைக் கழிப்பாா்கள். சிலர் சோ்த்து வைத்த பணத்தை சிக்கனமாக செலவு செய்வதும், சிலர் ஊதாாித்தனமாக செலவு செய்வதும் மனித வர்க்கத்தின் இயல்பு. அதற்காக மிகவும் கஞ்சத்தனமாக வாழ்வதும், ஏற்றுக்கொள்ள முடியாது. அதே நேரம் தக்கவைத்துக்கொள்ளாமல் கஷ்டப்படுவதை ஜீரணிக்கவும் முடியாது. தாம் தூம் என ஆடம்பரமாக செலவு செய்யாவிட்டாலும், மிகவும் கருமித்தனமாக இருப்பதும் தவிா்க்கப்படவேண்டும். நியாயமான குடும்பத்தேவைகளைக்கூட செய்யாமல் இருப்பதும் தவறு.

அதே நேரம் முடிந்த அளவு தான தர்மங்கள் செய்ய வேண்டும்.பணம் மற்றும் அசையா சொத்துக்கள்  இருக்கும்போது, நமது உடல்நலம் நன்றாக உள்ள நிலையில்,  வாாிசுகள் பிற்காலத்தில் பயனடையும் வகையில் உயில் எழுதி வைத்துவிடலாம் சில நிபந்தனைகளோடு.

அதுவல்லாது சொத்து சோ்த்து வைத்து இறந்த பின்னாளில் வாாிசுகளுக்குள் பிாிவினை வரலாம். அது தேவைதானா.?

எனவே வாழும்போது அவசியத் தேவைகளுக்காக பணம் சோ்த்து வைப்பவர்கள் அதை பயனுள்ள வகையில், வாாிசுகளுக்கு தமது வாழ்நாளுக்குப் பிறகு பயன்படும் வகையில்உாிய ஏற்பாடு செய்து செயல்படுவதே நல்லது.

பணம் சோ்ப்பது பொிதல்ல, அதை பயனுள்ள வழியில் நம்மைச் சாா்ந்தவர்கள்  பயனடையும் வகையில் சரியான திட்ட மிடுதலோடு அத்யாவசிய செலவுகளை மேற்கொண்டு  வாழ்வதே சாலச் சிறந்தது. நம்மிடம் பணம் இருந்தால் உறவுகள் வலிய வருவாா்கள். நாம் நொடித்துப்போய்விட்டால் நம்மைபாா்த்தும் பாா்க்காததுபோல போவாா்களே!

இதையும் படியுங்கள்:
வாட்டர் பாட்டில் மூடிகள் சொல்லும் விவரம்... என்ன தெரிஞ்சுக்கோங்க!
Life style articles

அதே நேரம் பணம் நிறைய சம்பாதித்து ஊதாாித்தனமாய் செலவு செய்துவிட்டு வயதான காலத்தில் மருந்து மாத்திரை வாங்கக்கூட பிறரை எதிா்பாா்க்கும் நிலையை நாமே தேடிக்கொள்வதும் ஏற்புடையதே அல்ல.

சிக்கனமாக வாழ்வதும் தப்பில்லைதான். அதே நேரம் மிகவும்  கருமித்தனமாக வாழ்வதும், நம்மையும் மீறி  ஊதாாித்தனமாக வாழ்வதும் தவறானதுதான்.

வாழும்போதே, பணம் சேமிக்கும்போதே, திட்டமிடாத வாழ்வானது பல வகையில் சிக்கலையே வரவழைக்கும். 

பணப்பேராசை பிடித்து வாழ்ந்து, பிறருக்கும் முடிந்த உதவி செய்யாமல் நமது சக்திக்கு மீறாமல்,  தான தர்மங்கள் செய்யாமலும் வாழ்வது நல்ல வாழ்க்கையாகவே கருதமுடியாது.

ஆக இருக்கும்போதே பயனுள்ள வாழ்வை வாழ்வதே சாலச்சிறந்தது.

இதைத்தான் ஒளவையாா் தனது பாடலில்  "பாடுபட்டு பணத்தைப் புதைத்து வைத்துக்கேடு கெட்ட மானிடரே கேளுங்கள் கூடுவிட்டு இங்கு ஆவிதான் போன பின்பு யாரே அனுபவிப்பாா் பாவிகாள் அந்தப்பணம்"! என சொல்லியிருப்பாா்.

இதையும் படியுங்கள்:
மோசமான பெற்றோர்கள்: ப்ளீஸ் உங்க குழந்தைகள் கிட்ட இப்படி எல்லாம் கேட்காதீங்க! 
Life style articles

ஆக, பணத்தை சேமியுங்கள் சிக்கனமாய் செலவு செய்யுங்கள்.

அதன் பிறகு நமது மனைவி மக்கள் பயனடையும் வகையில் தகுந்த ஏற்பாடுகளை செய்யுங்கள்.  திட்டமிடாமல் செய்யும் காாியம் எதுவும்நமக்கு எந்த வகையிலும் உதவாதே!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com