
இன்று நம்மில் பலரும் சர்க்கரை நோயால் அவதிப்படுவதைக் காண முடிகிறது. முதலில் சர்க்கரை நோய் என்றால் என்ன என்பதைப் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம். சர்க்கரை என்பது நமது உடலுக்கு எரிபொருளாகப் பயன்படுவது. நாம் சாப்பிடுகிற அனைத்து உணவிலும் உள்ள சர்க்கரையை உடல் எரித்து உங்களுக்கு ஆற்றலாக வழங்குகிறது. இதுதான் இயற்கை. உடலுக்கு எரிபொருளாக இருக்கக்கூடிய சர்க்கரை எவ்வாறு ஒருவருக்கு நோயாக மாறுகிறது என்பதனை இந்தப் பதிவில் காண்போம்.
பசிக்காமல் சாப்பிடுவது, பசித்தும் சாப்பிடாமல் இருப்பது, அவசர அவசரமாக சாப்பிடுவது, வயிறு புடைக்க சாப்பிடுவது, சாப்பிட்ட பின் குளிப்பது, சாப்பிட்ட பின் வயிறு வீங்கும் அளவுக்கு தண்ணீர் பருகுவது, உணவை சுவைக்காமல் சாப்பிடுவது, உணவை பற்களால் நன்கு அரைக்காமல் சாப்பிடுவது, பால், டீ, குளிர்பானம் மற்றும் செயற்கை உணவுகளை சாப்பிடுவது, மலம் மற்றும் சிறுநீரை அடக்குவது, இரவு நேரங்களில் உறங்காமல் விழித்திருப்பது, வாயால் மூச்சு விடுவது, குடிப்பழக்கம், உழைக்காமல் வாழ்வது, அதிக நேரம் குளிர்சாதன அறையில் நேரத்தை செலவிடுவது போன்ற விஷயங்களை நாம் செய்யும்பொழுது நாம் உண்ணக்கூடிய உணவானது முழுமையாக ஜீரணம் ஆகாது.
முழுமையாக ஜீரணம் ஆகாத உணவில் இருந்து பெறக்கூடிய சர்க்கரையை நம்முடைய உடலில் உள்ள உறுப்புகள் ஏற்றுக்கொள்ளக் கூடிய அளவுக்கு தரமான சர்க்கரையாக இருக்காது. நமது ஜீரண மண்டலத்திலிருந்து ஜீரணமான சர்க்கரை இரத்தத்தில் கலக்கிறது. இவ்வாறு இரத்தத்தில் கலக்கக்கூடிய சர்க்கரையை உடல் உறுப்புகள் ஏற்றுக் கொள்கின்றன.
சர்க்கரை தரமானதா? தரமற்றதா என்பதை உடல் உறுப்புகள் அறிந்து கொள்வதற்கு ஒரு அமைப்பு அவசியம் தேவை. அதற்குப் பெயர்தான் இன்சுலின். இன்சுலின் உடலில் உள்ள எந்தெந்த சர்க்கரையை குறித்துக் காட்டுகிறதோ, அந்த சர்க்கரையை மட்டும்தான் உறுப்புகள் ஏற்றுக்கொள்ளும். இதுதான் சர்க்கரையின் தரம் பிரித்தறிந்து உட்கொள்வதற்கு உடல் கையாளும் யுக்தி.
நாம் உண்ணும் உணவு முழுமையாக ஜீரணமாகாமல் இரத்தத்தில் கலந்தால், அதைக் குறைப்பதற்கு இன்சுலின் சுரக்காது. இன்சுலின் குறைக்கப்படாத சர்க்கரை உங்கள் இரத்த ஓட்டத்தில் சுற்றிக்கொண்டே இருக்கும். இதனை சிறுநீரகங்கள் அதிகமாக நீர் வடிவில் வெளியேற்றம் செய்யும். இப்படி வெளியேறும் நீர் ஒரு அளவுக்கு அதிகமாக இருந்தால் அதுவே நீரிழிவு என்கிற சர்க்கரை நோயாக மாறுகிறது. ஆக, நம்முடைய வாழ்க்கை முறையை மாற்றிக்கொண்டு தெளிவான, சரியான ஜீரணத்தை உடலுக்கு வழங்கினால் சர்க்கரை நோய் அறவே வராது.
சர்க்கரை நோய் வராமல் தடுக்க அல்லது வந்தால் அதனைக் கட்டுப்பாட்டில் வைக்க நீங்கள் எப்போது சாப்பிட்டாலும் முதலில் நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள் சாட்டில் ஆரம்பித்து, அதற்கு அடுத்தபடியாக புரோட்டீன் நிறைந்த உணவுகளையும், இறுதியாக கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளையும் எடுத்துக்கொள்ள வேண்டும். சாலடுகள், அனைத்து காய்கறிகளின் ஊட்டச்சத்தையும் உள்ளடக்கிய ஓர் சிறந்த உணவாகும். அவை குறைந்த கலோரிகள் மற்றும் அதிக ஊட்டச்சத்துக்கள் கொண்டவை. இருந்தும் சாலட்களை அதிகமாக சாப்பிடுவதால் அதிக கலோரிகள் உங்கள் உடலில் சேர்க்கப்பட்டு, உங்கள் எடை மேலும் அதிகரிக்க வழிவகுக்கும்.
இந்த முறையில் நீங்கள் சாப்பிட ஆரம்பித்தால் 46 சதவீதம் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதைத் தடுக்க முடியும். இதே உணவுமுறை டைப் 2 சர்க்கரை நோயாளிகளின் இரத்த சர்க்கரை அளவை 53 சதவீதம் குறைக்கும் என்கிறார்கள் நியூயார்க் வெஸ்ட் கார்னெல் மெடிசன் அமைப்பு ஆராய்ச்சியாளர்கள். சாப்பிட்டவுடன் நமது இரத்தத்தில் சர்க்கரையை அதிகரிப்பது GLP - 1 என்ற ஹார்மோன்தான். மேற்கண்ட வகையில் சாப்பிடும் போது GLP-1 தீவிரம் தவிர்க்கப்படுகிறது என்றும் இவர்கள் கூறுகிறார்கள்.