To rejuvenate the body and mind
Resting woman

உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சி தரும் ‘சும்மா’ இருப்பதன் அவசியம்!

Published on

ம்மில் பெரும்பான்மையானோர் எப்போதும் பிஸியாக இருக்க விரும்புகிறோம். எதையாவது தேடிக்கொண்டும், துரித உணவு, துரித வேலை என அவசரமாக ஓடிக்கொண்டும் இருக்கிறோம். ஆனால், எப்போதுமே வேகமாக ஓடிக் கொண்டிருத்தல் உடலுக்கும் உள்ளத்திற்கும் நல்லதல்ல. தினமும் சில நிமிடங்கள் சும்மா இருக்க வேண்டியது மனதுக்கும் உடலுக்கும் நல்லது. சும்மா இருப்பதன் அவசியத்தை பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.

1. நிதானமாக வேலை செய்தல்: கடந்த சில வருடங்களாகவே நின்று நிதானமாக சமையல் கூட செய்யாமல் துரித உணவை நாடி வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறோம். அதனால் பலவிதமான வியாதிகளும் மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வுக்கு ஆளாகி இருக்கிறோம். தினமும் ஒரு நேரமாவது நிதானமாக சமைத்து உண்ணுவதை பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும். சமையல் செய்யும் அந்த நேரத்தில் டிவி பார்த்துக் கொண்டு அல்லது செல்போன் பார்த்துக் கொண்டு இருக்காமல் முழுக்க முழுக்க சமையல் மட்டுமே செய்ய வேண்டும். அந்த நேரத்தில் மனதை அலைபாய விடாமல் சும்மா இருக்க வேண்டும். இது சமையலுக்கு மட்டுமல்ல. வேறு எல்லா வேலைகளுக்கும் பொருந்தும்.

இதையும் படியுங்கள்:
விதிமுறைகள், கட்டுப்பாடுகளை வெறுக்கும் ‘சிக்மா’ ஆண்களைப் பற்றிய மர்மம்!
To rejuvenate the body and mind

2. இயற்கையோடு கைகோர்த்தல்: வீட்டிலும் அலுவலகத்திலும் உழைக்கும் நேரம் தவிர, மீதி நேரத்தை வெட்டியாக பொழுது போக்குபவர்கள் பலர். சமூக வலைதளங்களில் பல மணி நேரங்களை தொலைத்து விட்டு தூக்கம் வராமல் தவிப்பதும் மனதிற்கு அமைதி இல்லாமல் இருப்பதும் நடைமுறையாகி விட்டது. வேலை நேரம் முடிந்த பின் ஒரு அரை மணி நேரமாவது இயற்கையோடு கைகோர்த்து இருக்க வேண்டும். பூங்கா அல்லது பசுமை சூழ்ந்த இடத்தில் நடக்கும்போது உடலுக்கும் மனதிற்கும் ரீசார்ஜ் செய்தது போல புத்துணர்ச்சி ஏற்படும்.

3. அமைதியைத் தழுவுதல்: தினமும் சில நிமிடங்கள் எதுவும் செய்யாமல் அமைதியைத் தழுவ வேண்டும். அந்த நேரத்தில் எதுவும் செய்யாமல் சும்மா இருக்க வேண்டும். உடலுக்கு மட்டுமல்ல. மனதிற்கும் எந்த வேலையும் தரக்கூடாது. எதைப் பற்றியும் நினைக்காமல், யோசிக்காமல் இருக்க வேண்டும். தொடர்ந்து அலுவலக வேலை அல்லது வியாபார சிந்தனை என்று இருக்கும்போது மனது சோர்வடைந்து விடும். எதையும் தெளிவாக யோசிக்கவோ, நல்ல முடிவுகளை எடுக்கவோ முடியாது.

இதையும் படியுங்கள்:
தீபாவளி ஷாப்பிங்: பட்ஜெட் கையை மீறிப் போகாமல் தடுக்க 7 பயனுள்ள டிப்ஸ்!
To rejuvenate the body and mind

4. ஓய்வு மற்றும் தளர்வு (Rest and Relaxing): வேலை செய்யும் நேரம் தவிர மற்ற நேரத்தில் மனதை ஓய்வாக வைத்துக்கொள்ளவும். தினம் இருபது நிமிட நேர தியானம், ஆழ்ந்த சுவாசப் பயிற்சி செய்தால் மனதிற்கு தேவையான ஓய்வும், தளர்வும் கிடைக்கும். மனதிற்கும் உடலுக்கும் புத்துணர்ச்சியைத் தரும்.

5. எதுவும் செய்யாமல் இருத்தலின் முக்கியத்துவம்: தினமும் அரை மணி முதல் ஒரு மணி நேரமாவது எதுவும் செய்யாமல் சும்மா இருத்தலின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ளுங்கள். அந்த சும்மா இருக்கும் நேரம் உடலுக்கும் மனதிற்கும் நல்ல ஓய்வு மற்றும் அமைதியைத் தரும். சுகமான உணர்வு கிடைக்கும். ‘இத்தனை நாள் எதற்காக இப்படித் தேவையில்லாமல் வேக வேகமாக வேலை செய்து, நம் உடலையும் மனதையும் கெடுத்துக் கொண்டோம்’ என்று அனுபவப்பூர்வமாக உணரலாம். எனவே, சும்மா இருங்கள் தினமும் சில நிமிடங்களுக்காகவது.

logo
Kalki Online
kalkionline.com