கீபோர்டில் ஒளிந்திருக்கும் ரகசியம்: F மற்றும் J பட்டன்களில் அந்தச் சிறு கோடு ஏன்?

-keyboard-keys
-keyboard-keys
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

கீ போர்டில் F & J எழுத்துக்கள் மட்டும் ஏன் புடைப்பாக உள்ளது என்று எப்பொழுதாவது யோசித்திருக்கிறீர்களா? நாம் தினமும் கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப் உபயோகிக்கும்போது கீ போர்டில் F மற்றும் J பட்டனில் மட்டும் ஒரு சின்ன கோடு அல்லது புடைப்பு (Bump) இருப்பதை பார்த்திருக்கிறோம் அல்லவா. அவை ஏன் அப்படி இருக்கிறது என்று என்றாவது யோசித்து இருக்கிறோமா?

கீ போர்டில் எஃப் அண்ட் ஜே பட்டன்களில் மட்டும் சிறிய கோடு அல்லது புடைப்பு இருப்பது, டச் டைப்பிங் செய்யும்பொழுது திரையைப் பார்த்துக்கொண்டே கீபோர்டை பார்க்காமல் கைகளை சரியான இடத்தில் நிலைநிறுத்த உதவுகிறது. இவை ஹோம் ரோ (Home row) எனப்படும் நடு வரிசையை குறிக்கின்றது.

கீபோர்டை பார்க்காமலே வேகமாகவும் சரியாவும் டைப் பண்ணுவதற்காகத் தான் இந்த ஏற்பாடு. டைப் பண்ணத் தொடங்கும் பொழுது நம் இரண்டு கை ஆள்காட்டி விரல்களும் இந்த எஃப் மற்றும் ஜே மேல் தான் இருக்கவேண்டும். விரைவாக டைப் செய்வதற்கு இதுதான் சரியான "ஹோம் பொசிஷன்".

பார்க்காமலே கைகளை தொடுதல் உணர்வு மூலம் சரியான பட்டனைக் கண்டறிந்து, துல்லியமாக டைப்பிங் செய்ய அதிக வேகத்திலும் அதிக வசதியுடனும் தட்டச்சு செய்ய இவை உதவுகிறது.

தட்டச்சு செய்பவர்கள் அடிக்கடி கீபோர்டை பார்த்து டைப் செய்வதை தவிர்த்து, கவனச் சிதறல் இல்லாமல் திரையில் கவனம் செலுத்த இது உதவுகிறது.

தட்டச்சு செய்யும்போது, இடது கை ஆள்காட்டி விரலை எஃப் விசையிலும், வலது கை ஆள்காட்டி விரலை ஜே விசையிலும் வைக்க வேண்டும். இந்த சிறிய கோடுகள் விரல்களுக்கு ஒரு வழிகாட்டியாக அமைந்து, சரியான எழுத்துக்களை தொட உதவுகின்றன.

இதையும் படியுங்கள்:
உடைகள் முதல் பாத்திரங்கள் வரை: புதிய பொருட்களை முறையாக சுத்தம் செய்வது எப்படி?
-keyboard-keys

கீ போர்டை பார்க்காமலேயே திரையை மட்டும் பார்த்து வேகமாக தட்டச்சு செய்ய இந்த மேடுகள் ஒரு வழிகாட்டியாக அமைகின்றன. இந்த இரண்டு பட்டன்களை மட்டும் நம் விரல்கள் அடையாளம் கண்டுபிடித்தால் போதும், மற்ற எல்லா எழுத்துக்களும் எந்த இடத்தில் இருக்கிறது என்று நம் மூளை தானாக கணிக்கக்கூடும்.

இந்த அருமையான ஐடியாவை 1982ல் June E. Botich என்ற பெண்மணி தான் கண்டுபிடித்தார். இந்த கண்டுபிடிப்பிற்கு முன்பு வரை மக்கள் கீபோர்டை பார்த்து பார்த்து டைப் செய்து ரொம்பவே சிரமப்பட்டனர்.

logo
Kalki Online
kalkionline.com