
சிறு வயதில் பெற்றோர் உங்கள் மனதில் பல வகையான நேர்மறையான எண்ணங்களை விதைத்து நல்லதொரு பிள்ளையாக வளர்த்து ஆளாக்கியிருக்கலாம். வளர்ந்த பின் சிறந்த புத்தகங்களைப் படித்து அறிவை வளர்த்துக்கொள்வது நல்ல பழக்கமாகும். உங்களை நீங்களே நேசிக்கும்போது, அது உங்கள் மனநிலையை மாற்றவும், தன்னம்பிக்கையை வளர்க்கவும், மன அமைதி பெறவும் எவ்வாறெல்லாம் உதவிபுரியும் என்பதை கற்றறிந்த சிலரின் பொன்மொழிகள் விளக்குகின்றன. அவர்கள் கூறியுள்ள பொன்மொழிகள் சிலவற்றை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
1. இவ்வுலகில் உள்ள மற்ற எவரும் உங்கள் மீது காட்டும் அன்பையும் பாசத்தையும் போல, உங்கள் மீது நீங்கள் வைத்திருக்கும் காதலையும் பாசத்தையும் ஏற்றுக்கொள்ள நீங்கள் தகுதியானவரே. - புத்தர்
2. உங்களை நீங்களே காதலிப்பது, வாழ்நாள் முழுவதிற்குமான காதலின் ஆரம்பமாகும். - ஆஸ்கார் வைல்ட்
3. நீங்கள் நீங்களாக இருக்கக் கற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில், மற்ற அனைவரும் ஏற்கெனவே எடுக்கப்பட்டுள்ளனர். நீங்கள் நீங்களாக இருக்கும்போது உங்களுக்கு சுதந்திரம் கிடைக்கும். உங்களிடமுள்ள அனைத்து நற்குணங்கள் மற்றும் அனைத்துப் பொருட்களுக்காகவும் உங்களை நீங்களே நேசிக்கவும், உங்கள் பலவீனங்களை ஏற்றுக்கொண்டு உங்களை நீங்களே மன்னித்து விடவும் கற்றுக் கொள்ளுங்கள். - ஆஸ்கார் வைல்ட்
4. நீங்கள் மிக்க பலம் வாய்ந்தவர். நீங்கள் எந்த அளவுக்கு பலம் மிக்கவர் என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். - யோகி பஜன்
5. உனக்கு நீயே போதுமானவர். வேறு எவருக்கும் நீ யாரென்பதை நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை. - மாயா ஆஞ்சலோ
6. உங்களை நீங்களே நேசிக்கவும் உங்களுக்கு நீங்களே ஆதரவளிக்கவும் ஆரம்பிக்கும்போது நிஜத்தில் அந்த ஒரு செயலே உங்களுக்கு மிகப்பெரிய பக்க பலமாக நிற்கும். - பிரெனே பிரவுன்
7. உன் அனுமதி இல்லாமல் எவரும், உன்னை நீயே மற்றவரை விட குறைந்த மதிப்புடைய நபராக கருதச் செய்ய முடியாது. - இலனார் ரூஸ்வெல்ட்
8. உங்களை நீங்களே நேசிப்பது தற்பெருமை அல்ல, நல்லறிவு. - கேத்ரைன் மேயர்
9. நீங்கள் நேசிக்கும் யாரோ ஒரு நபருடன் நீங்கள் பேசுவது போல் உங்களுக்குள் நீங்களே பேசிக்கொள்ளுங்கள். - பிரெனே பிரவுன்
10. மற்றவர்கள் உங்களை எவ்வாறு நேசிக்க வேண்டுமென நீங்கள் அவர்களுக்கு சொல்லிக் கொடுக்கிறீர்களோ, அதே முறையில் நீங்கள் உங்களை நேசிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். - ரூபி கவுர்
என்ன, இன்று முதல் உங்களை நீங்களே காதலிக்க ஆரம்பித்துவிடுவீர்கள்தானே?