அன்பின் அடையாளமே சந்தோஷத்தின் எல்லை!

Affection for parents
Affection for parents
Published on

தாயின் கருவறையில் நாம் ஜனித்ததுமே தாயிடம் பற்றுதல், பாசம் அதிகரிக்கும். ‘ஜனனி, ஜன்ம, செளக்யானாம் வர்த்தனி குல சம்பதாம், பதவி பூா்வ புண்யானாம், லிக்யதே ஜன்ம பத்ரிகா’ என்பது பிறந்து ஒரு வருடம் கழித்து ஜாதகம் எழுதும்போது பிள்ளையார் சுழி போட்டு மேலே கண்டுள்ள வாக்கியத்தை எழுதித்தான் ஜாதகம் எழுதுவது வழக்கம்! இதில் பிறவி என்பதும், பிறப்பு என்பதும் ஜன்ம சொந்த பந்தமாகும். அப்படி ஜன்மா எடுத்த நாம் சந்தோஷம், சங்கடம் போன்ற நோ்மறை மற்றும் எதிர்மறை எண்ணங்களைக் கொண்டு வாழ்ந்து வருகிறோம்.

மனிதனின் ஆயுளைக் கூட்டுவதில் சந்தோஷம் பெரும் பங்கு வகிக்கிறது. குழந்தையாய் பிறந்து, தாய், தந்தையின் பாசத்தில் வளா்ந்து, சகோதர, சகோதரிகள் அமைந்து, அவர்களோடு பாசப்பிணைப்பாய் வளா்ந்து, ஆளாகி, படித்து வேலைக்குப் போய், தாய்க்குப் பின் தாரம் என்ற நிலைப்பாட்டிற்குட்பட்டு, மனைவி மற்றும் வாரிசுகளின் பாசப்பிணைப்போடு வாழ்வது இறைவன் கொடுத்த வரமே!

இதையும் படியுங்கள்:
விமான விபத்து ஏற்படுவதைப் போல கனவு கண்டால் என்ன நிகழும் தெரியுமா?
Affection for parents

பலருக்கும் தாய் இருந்தால், தந்தை இல்லை. சகோதரி அமைந்தால் சகோதரன் சரியில்லை, உறவுகள் இல்லை, வாரிசுகளே இல்லாத நிலை. இப்படிப் பல்வேறு நிலைகளிலும் பலரது காலச்சக்கரம் ஏனோதானோ என ஓடிக்கொண்டுதான் இருக்கிறது! எல்லோருக்கும் எல்லாமும் அமைந்து விடாது. அப்படி அமைந்த வாழ்க்கையையும் ஒருசிலர் தொலைத்துவிட்டு, ‘எல்லாம் விதிவிட்ட வழி’ எனப் புலம்புவதும் நடைமுறை.

தாய், தந்தையோடு வாழ்ந்துவரும் பிள்ளைகள் ஒரு காலகட்டத்தில் வேலைக்குப் போய் திருமணம் ஆனதும் மனைவி பேச்சைக் கேட்டுக்கொண்டு தாய், தந்தையை புறக்கணிப்பதும் ஒரு காலகட்டத்தில் அவர்களை முதியோர் இல்லத்தில் சோ்ப்பதும் நடைமுறை. இங்கே பாசம் தோற்றுப்போகிறதே! இது ஒரு சொல்ல முடியா வேதனைதானே?

இன்னும் சிலரோ, ஒரு படி மேலே போய் பேரன், பேத்திகளை பார்த்துக்கொள்ள மாமியாரை மட்டும் வைத்துக்கொண்டு மாமனாரை. கணவனின் தம்பி வீட்டுக்கு அனுப்பி ஏலம் போடுவதும் கொடுமை! இங்கேயும் அன்பு, பாசம் தோற்றுப்போகிறதே! இங்கே சொல்ல முடியா, சொல்லில் அடங்கா வேதனை மிஞ்சுகிறதே.

அதைவிடக் கொடுமை வயோதிகம் மற்றும் இயலாமை, எதிர்பார்க்கும் அன்பு, பாசம் கிடைக்காமை. இதுபோன்ற நிகழ்வுகளும் நடைமுறையில் உள்ளதுதானே. அதையும் தாண்டி சிலர் வேலை நிமித்தமாய் பிள்ளைகள் மற்றும் அவர்களது குடும்பத்தோடு வெளிநாடுகளில் செட்டில் ஆகி விடுகிறார்கள். அப்போதும் பிள்ளை, மறுமகள், பேரன், பேத்திகள் அனைவரும் இருந்தும் இல்லாத நிலை. அங்கேயும் பாசத்திற்கு மிகப்பெரிய தோல்வியே.

இதையும் படியுங்கள்:
தங்க நகைகளை அதன் மதிப்பு குறையாமல் பாதுகாக்கும் முறைகள்!
Affection for parents

திடீரென உறவுகளைப் பார்க்க வேண்டுமானால் ஏக்கம்தான் அன்புக்கான பரிசு. வெளிநாடு சென்ற பிள்ளைகள் தாய், தகப்பனாரைப் பார்த்துக்கொள்ள ஒருசிலரை நியமித்துப் பார்த்துக்கொண்டாலும், நெஞ்சில் ஒருவித சூன்யம் ஏற்படுவதும் நிஜமே. இதில் மரணத்தின் தருவாயில் இருந்தால்கூட பிள்ளைகளைப் பார்க்க முடியவில்லையே என அன்புக்காக ஏங்குவதும் உண்டல்லவா?

பொதுவாக, பிள்ளைகளுக்கு ஒரு அன்பு வேண்டுகோள். உங்களைப் பெற்று வளா்த்து ஆளாக்கியபோது, நீங்கள் அவர்களுக்கு பாரமாகத் தெரியவில்லை! அது அவர்களுக்கு சுகமான சுமை! அதேநேரம் வளா்ந்து ஆளான பிறகு உங்களுக்கு முகவரி தந்தவர்களை சுமையாய் நினைத்து ஒதுக்குவது சுமையிலும் சுமையே. அதிலும் முதுமை பெரிய கொடுமை!

அன்பே வாழ்வின் பிரதானம். அவர்கள் உங்களிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள்? நீங்கள் சோ்த்துவைத்த சொத்துக்களையா கேட்கிறார்கள்? அதைவிட உயர்வான பற்றுதல் பாசமே ஒரே தீா்வு. அவர்கள் இறக்கும் வரை நீங்கள் உள்ளூரில் இருந்தாலும் அல்லது வெளியூரில் இருந்தாலும் உங்கள் அருகிலேயே வைத்து அவர்களை ஆராதியுங்கள். அதுதான் அன்பின் அடையாளம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com