உள்ளுணர்வு நிறைந்தவர்களின் ஆச்சரியமூட்டும் குணங்கள்!

Qualities of intuitive people
Qualities of intuitive people
Published on

பொதுவாக, உள்ளுணர்வு என்கிற ஆற்றல் எல்லா மனிதர்களுக்கும் உண்டு. ஆனால், சிலருக்கு அதிகமாகவும் சிலருக்கு அது குறைவாகவும் இருக்கும். உள்ளுணர்வு அதிகமாக இருக்கும் நபர்களுக்கு சில விசேஷ குணங்கள் உண்டு. அவை என்னவென்று இந்தப் பதிவில் காணலாம்.

தனிமை விரும்பிகள்: இவர்கள் தனிமை விரும்பிகள். உள்ளுணர்வு சொல்வதை கவனிக்க தனிமையில் அதிக நேரம் செலவிடுவார்கள். அப்போதுதான் அவர்களால் தங்கள் உள்ளுணர்வுடன் சரியாக தொடர்புகொள்ள முடியும். தன்னைப் புரிந்துகொள்ளவும் புறச்சூழலின் தொந்தரவுகள் அற்று உள்ளுணர்வு சார்ந்து யோசிக்கவும், அவர்கள் தனிமையை நாடுகிறார்கள்.

இதையும் படியுங்கள்:
சமூக உறவுப்பாலம் விரிசல் விடாமல் இருக்க குழந்தைக்குக் கற்றுத் தர வேண்டிய 4 முக்கிய விஷயங்கள்!
Qualities of intuitive people

புத்திசாலிகள்: பிறரின் எண்ணங்களை, உணர்வுகளை அவர்கள் சொல்லாமலேயே புரிந்து கொள்வார்கள். உள்ளுணர்வு அதிகம் உள்ள ஆசாமிகள் இயல்பிலேயே புத்திசாலிகளாக, சிந்தனையாளர்களாக இருப்பார்கள். பிறர் பொய் சொன்னால் மிக எளிதாகக் கண்டுபிடித்து விடுவார்கள். ஏனென்றால் அவர்களின் உள் மனத்தை படிக்கும் ஆற்றல் இவர்களுக்கு உண்டு.

திறம்பட முடிவுகளை எடுத்தல்: உள்ளுணர்வு சார்ந்து திறம்பட முடிவுகளை எடுப்பது இவர்களுக்குக் கை வந்த கலை. ஏதாவது ஒரு சிக்கல் அல்லது பிரச்னை நேரும்போது மனம் கலங்குவதில்லை. தனிமையில் அமர்ந்து தன்னுடைய பிரச்னையைப் பற்றி தீவிரமாக யோசனை செய்வார்கள். அப்போது அவர்களுடைய உள்ளுணர்வு தகுந்த பதிலைச் சொல்லும். எனவே, அவர்களால் மிக சரியான முடிவை எடுக்க முடிகிறது.

படைப்பாற்றலில் சிறந்து விளங்குவார்கள்: இவர்களால் புதிய கருத்துக்களை பல கோணங்களில் ஆழமாக சிந்தித்து வெளிப்படுத்த முடியும். திரைப்பட இயக்குநர்கள், எழுத்தாளர்களுக்கு உள்ளுணர்வு சக்தி அதிகமாக இருக்கும். புதுவித விஷயங்களை கற்பனை செய்து பார்த்து சிந்திக்கும்போது அவர்களின் படைப்பாற்றல் திறன் மேம்படும்.

இதையும் படியுங்கள்:
ஃப்ரீசரில் ஐஸ் கட்டியா? இனி கத்தி தேவையில்லை! இந்த சூடான ட்ரிக் போதும்!
Qualities of intuitive people

அழகியலைப் போற்றுதல்: எதிலும் அழகைக் காணுதல் இவர்களின் குணம். தான் காணும் ஒவ்வொரு விஷயத்திலும் இவர்களால் அழகை ரசிக்க முடியும். மோசமான பாலைவனத்தில் கூட அங்கு இருக்கும் முட்செடியை ரசிக்கும் ஆற்றல் பெற்றவர்கள்.

கனவுகளில் தீர்வு: இவர்களுக்கு வித்தியாசமான கனவுகள் வரும். உள்ளுணர்வின் அதீத சக்தியால், தூங்கும்போது இவர்களுக்கான பிரச்னை சில நேரங்களில் கனவுகளாக வந்து அந்தப் பிரச்னைகளுக்கு தீர்வைத் தரும். எனவே, இவர்களால் சரியான முடிவு எடுக்க முடியும். காலையில் விழித்து எழுந்தவுடன் தான் கண்ட கனவை மறக்காமல் அவர்களால் ஞாபகப்படுத்தி பார்க்க முடியும்.

இதையும் படியுங்கள்:
உங்களிடம் இந்த 7 குணங்கள் இருந்தால் நீங்கள்தான் 'அழகிய ஆன்மா'!
Qualities of intuitive people

உறவுப் பாலம்: தனது நெருங்கிய நண்பர் அல்லது வாழ்க்கைத் துணைவர் ஏமாற்றமாகவோ சோகமாகவோ இருந்தால் எளிதில் கண்டுபிடித்து விடுவார்கள். இவர்களால் பிறருடன் நன்றாக உறவு பாலம் அமைக்க முடியும். தன்னுடைய உள்ளுணர்வு சக்தியால் பிறரை எளிதாக இவர்களால் கவர முடியும். அவர்களை நன்றாகப் புரிந்து கொள்வதால் இவர்களுக்கு நிறைய நண்பர்களும் உறவுகளும் கிடைப்பார்கள்.

எதிர்காலத்தைப் பற்றிய கணிப்பு: எதிர்காலத்தைப் பற்றி நன்கு அறிந்திருப்பார்கள். அவர்களின் நேர்மறை எண்ணங்களால் செயல்களும் நேர்மறையாக இருக்கும். எனவே, எதிர்காலத்தில் தன்னுடைய வாழ்க்கை எப்படி இருக்கும் என்று இவர்களால் கணித்துச் சொல்ல முடியும். பிறருடைய பிரச்னைகளுக்கும் நல்ல தீர்வு அளிக்க முடியும்.

எஸ்.விஜயலட்சுமி

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com