உதடுகளின் அமைப்பு சொல்லுமே உங்களின் ஆளுமைத் தன்மையை!

உதடுகளின் அமைப்பு
உதடுகளின் அமைப்பு
ஆர்.ஐஸ்வர்யா

I am a Fashion Technologist graduated from National Institute of Fashion Technology, Gandhinagar, Gujarat. I am interested in creating fashion related articles, Psychology and lifestyle articles. I am grateful to CEO of Kalki group, and it’s publishers. I am thankful to the readers for reading my contributions.

Updated on

ருவருடைய உதடுகளின் வடிவங்கள் அவர்களுடைய ஆளுமைப் பண்புகளுடன் தொடர்புடையவை. அது பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

மெல்லிய உதடுகள்: மெல்லிய உதடுகளைக் கொண்டவர்கள் சுதந்திரமான மனப்பான்மை கொண்டவர்கள். மிகவும் உறுதியான மனம் படைத்தவர்கள். இவர்கள் தன்னம்பிக்கை உடையவர்களாகவும் ஒழுக்கத்தில் மிகவும் கவனம் செலுத்துபவர்களாகவும் இருக்கிறார்கள். பிறருடன் கலந்து பழகுவதை விட தனிமையை இவர்கள் விரும்புவார்கள். சிறந்த லட்சியவாதியாகவும் இலக்கு நோக்கி பயணிப்பவர்களாகவும் இருப்பார்கள்.

அகன்ற உதடுகள்: தன்னம்பிக்கை மிக்கவர்களாகவும் மனதில் இருப்பதை தைரியமாக வெளியில் சொல்பவர்களாகவும் இருப்பார்கள். எப்போதும் உற்சாகமாக இருப்பார்கள். மிகுந்த ஆற்றலுடன் பணிபுரிவார்கள். சமூகத்தில் நல்ல தலைவர்களாக மிளிர்வார்கள்.

குறுகிய உதடுகள்: குறுகிய உதடுகளைக் கொண்டவர்கள் தனிமையை விரும்புபவர்களாக, எச்சரிக்கை உணர்வு மிக்கவர்களாக இருப்பார்கள். அதிகமாக உள்முக சிந்தனையாளர்கள். இவர்கள் எல்லா விஷயங்களிலும் மிகுந்த எச்சரிக்கை உணர்வுடன் செயல்படுவார்கள். மேலோட்டமான தொடர்புகளை விட ஆழமான அர்த்தமுள்ள நட்பு மற்றும் உறவுகளை விரும்புவார்கள்.

வில் வடிவ உதடுகள்: இந்த மாதிரி உதடுகளை உடையவர்கள் ஆக்கப்பூர்வமான, உற்சாகமான மற்றும் கலகலப்பான பேர்வழிகள். இவர்கள் கலைகளில் ஆர்வம் கொண்டிருப்பார்கள்.

இதய வடிவில் ஆன உதடுகள்: இவர்கள் மிகவும் உணர்ச்சிவசப்படும் தன்மை வாய்ந்தவர்கள். காதல் உணர்வு மிக்கவர்கள். பார்ப்பதற்கு மிகவும் வசீகரமாக இருப்பார்கள்.  தங்களைப் பிறர் கவனிக்க வேண்டும் என்று விரும்புவார்கள்.

கனமான மேல் உதடு: கனமான மேலுதடு கொண்டவர்கள் பெரும்பாலும் துடிப்பான, ஆற்றல் மிக்க ஆசாமிகளாக இருப்பார்கள். பிறர் மேல் நிஜமான அன்பை பொழியும் தன்மையுடையவராக இருப்பார்கள். கலகலப்பாக பழகும் தன்மை உடையவர்கள்.

இதையும் படியுங்கள்:
வீட்டிலேயே அதிக நேரத்தை செலவிடும் நபரா நீங்கள்? போச்சு!
உதடுகளின் அமைப்பு

கனமாக  கீழுதடு: கீழுதடு கனமாக இருக்கும்  முக அமைப்பைப் பெற்றவர்கள் தாராள மனப்பான்மையுடன், மகிழ்ச்சியான மனத்தினராகவும் இருப்பார்கள். தாங்கள் மகிழ்ச்சியாக இருப்பதுடன் பிறரையும் மகிழ்ச்சியாக உணர வைப்பார்கள். வாழ்வில் துக்கத்தை விட இனிய நிகழ்வுகளை விரும்புவார்கள்.

சதைப்பற்றுள்ள உதடுகள்: இதுபோல உதடு அமைப்பைக் கொண்டவர்கள் தாராள மனப்பான்மை உள்ளவர்களாகவும் அனுதாபம் மிக்கவர்களாகவும் இருப்பார்கள். பிறர் மேல் அன்பும், அக்கறையும் செலுத்துவார்கள். இவர்களது இரக்க குணம் நிறைய நண்பர்களைப் பெற்றுத்தரும்.

வளைந்த கீழ் உதடுகள்: வளைந்த கீழ் உதடு உள்ளவர்கள் தீவிரமான சிந்தனையாளர்கள், குறிப்பாக உள் முகமாக சிந்திக்கும்  தன்மையாளர்கள். இவர்கள் பிறரை சந்தேகிக்கும் குணம் கொண்டவர்கள். எதையும் மிகவும் ஆராய்ந்துதான் ஒரு செயலை செய்வார்கள்.

வளைந்த மேலுதடு: இவர்கள் நேர்மறையான குணம் மிக்கவர்கள். நம்பிக்கை மற்றும் மகிழ்ச்சியின் பிறப்பிடமாக திகழ்வார்கள். எப்போதும் நேர்மறையாக சிந்திப்பார்கள். நேர்மையான கண்ணோட்டம் மிக்கவர்கள். நட்புகள் மற்றும் உறவுகளை அனுசரித்துச் செல்பவர்களாக இருப்பார்கள்.

logo
Kalki Online
kalkionline.com