வேலையை தள்ளிப்போடுவது தப்பில்லை; ஆனால் அதை 'இப்படி' செய்யுங்கள்!

The benefits of postponing work
Postponing the work
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

ரு வேலையை செய்யாமல் தள்ளிப்போடுதல் என்பது ஒருவருடைய முன்னேற்றத்திற்குத் தடையாக அமையும். ஆனால், ஆக்கப்பூர்வமான தள்ளிப்போடுதல் (Productive Procrastination) பல நன்மைகளை அளிக்கும். அது பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.

ஆக்கப்பூர்வமான தள்ளிப்போடுதல் என்றால் என்ன?

பொதுவாக, வேலைகளைத் தள்ளிப்போடுதல் என்பது ஒன்றுமே செய்யாமல் வெட்டியாக பொழுதைக் கழிப்பதைக் குறிக்கும். ஆனால், ஆக்கப்பூர்வமான தள்ளிப்போடுதல் என்பது ஒரு குறிப்பிட்ட பணியை தாமதப்படுத்தும் செயலைக் குறிக்கிறது. ஒருவரின் தனிப்பட்ட அல்லது தொழில் முறை வளர்ச்சிக்கு நன்மை பயக்கும் நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவதன் மூலம் குறைவான அதிக முக்கியத்துவம் இல்லாத பணிகளை வேண்டுமென்றே தாமதப்படுத்தும் ஒரு டெக்னிக்.

இதையும் படியுங்கள்:
ஒரு பெண்ணின் ஆன்மா சோர்வடையும்போது அவளிடம் காணப்படும் 10 வகை நிலைப்பாடுகள்!
The benefits of postponing work

ஒரு வேலையை தள்ளிப்போடுவதன் மூலம் இன்னொரு வேலையில் அதிக கவனம் செலுத்தும் திறனைக் குறிக்கிறது. குறைவான லாபம் தரும் அல்லது குறைவான முக்கியத்துவம் உள்ள ஒரு வேலையை தள்ளிப்போட்டு விட்டு அதற்கு பதிலாக இன்னொரு முக்கியமான, உடனே செய்து முடிக்கக்கூடிய ஒரு வேலையில் கவனம் செலுத்துவதைக் குறிக்கிறது.

பயன்கள்:

1. இது ஆக்கப்பூர்வமான சிந்தனையைத் தூண்டி புதுமையான தீர்வுகளுக்கு வழிவகுக்கும். ஒரு அறிக்கை தயாரிப்பதை தள்ளிப்போட்டுவிட்டு மைண்ட் மேப்பிங்பில் நேரத்தை செலவிடலாம். இது அடுத்தத் திட்டப் பணியில் ஈடுபடுவதற்கான புதிய முன்னேற்றத்தைத் தரும்.

2. நேர மேலாண்மைக்கு முக்கியத்துவம் தருவதாக அமையும். முக்கியமில்லாத பணிகளை சற்றே தாமதப்படுத்துவதன் மூலம் உற்பத்தி செயல்பாடுகளில் ஈடுபட முடியும்.

3. மன அழுத்தம் மற்றும் சோர்வை குறைக்கும். தீவிரமான வேலையில் இருந்து சற்றே வேறு விதமான வேலைகளைச் செய்வதன் மூலம் மன அழுத்தத்தை நன்றாகவே குறைக்கும்.

இதையும் படியுங்கள்:
லிஃப்ட் கண்ணாடிகள் உங்கள் அழகைப் பார்க்க அல்ல; அதன் பின்னால் இருக்கும் ரகசியம் இதுதான்!
The benefits of postponing work

சில உதாரணங்கள்:

அடுத்த வாரத்திற்கான ஒரு அறிக்கையை தயார் செய்ய வேண்டும் என்று வைத்துக் கொள்வோம். அந்த நேரத்தில் மேஜையை சுத்தம் செய்யலாம். கோப்புகளை ஒழுங்காக வைக்கவும், பணியிடத்தை தூய்மையாக வைக்கவும், நேரத்தை செலவிடலாம். இது பணிச்சூழலை உற்பத்தித் திறனுக்கு மிகவும் உகந்ததாக ஆக்குகிறது. எதிர்காலப் பணிகளுக்கான கவனச் சிதறல்களைக் குறைக்கிறது.

ஒரு சவாலான புதிய திட்டத்தைத் தொடங்குவதற்கு பதிலாக மின்னஞ்சல் இன்பாக்ஸில் இருக்கும் தேவையில்லாத மெயில்களை படித்து அவற்றை டெலிட் செய்வது, பதில் அளிப்பது போன்ற டிஜிட்டல் தகவல் தொடர்புகளை ஒழுங்கமைப்பதில் நேரத்தை செலவிடலாம். இது இன்பாக்ஸின் அழுத்தத்தை குறைக்க உதவும்.

ஒரு சிக்கலான வேலையை செய்ய வேண்டி இருக்கிறது. அதற்கான காலக்கெடுவும் நிர்ணயிக்கப்பட்டு விட்டது. உடற்பயிற்சி அல்லது நடைப்பயிற்சி செய்யலாம். இது மனநிலையை சமன் செய்து, பணியை திறம்பட செய்ய உதவும்.

ஒரு இலக்கை செயல்படுத்துவதற்கு முன்பு அதற்கான விரிவான திட்டங்களை உருவாக்குவதன் மூலம் அந்த இலக்கை மிகவும் திறமையாகவும் குறைந்த நேரத்திலும் செய்ய முடியும்.

இந்த ஆக்கப்பூர்வமான தள்ளிப்போடும் பணிகளில் ஈடுபடும்போது அதற்கான நேரத்தைப் பயன்படுத்த வேண்டும். சில சமயங்களில் உற்பத்தித் திறன் பற்றிய தவறான உணர்வை அது உருவாக்கலாம்.

எஸ்.விஜயலட்சுமி

logo
Kalki Online
kalkionline.com