
நம்முடைய ஆரோக்கியமான வாழ்வுக்கு எலும்புகளின் பங்கு மிகவும் இன்றியமையாததாகும். ஆனால், வயதாக ஆக எலும்புகள் தேய்மானம் அடைந்து வலுவிழந்து விடுகின்றன. குறிப்பாக, 50 வயதிற்குப் பிறகு, எலும்பு பலவீனம், ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற பல பிரச்னைகள் வரத் தொடங்குகின்றன. இத்தகைய பிரச்னைகளைத் தவிர்க்க நமது அன்றாட டயட்டில் சேர்க்க வேண்டிய சில சூப்பர் உணவுகளைப் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.
1. பால் மற்றும் பால் பொருட்கள்: பால் (Milk), தயிர் மற்றும் சீஸ் போன்ற பால் பொருட்களில் வைட்டமின் டி மற்றும் எலும்புகளுக்குத் தேவையான கால்சியம் அதிக அளவில் இருப்பதால் இந்த பால் பொருட்கள் எலும்புகளை வலுவாக்கி உறுதியாக்குகின்றன. பால் பொருட்களை உட்கொள்ள விருப்பம் இல்லாதவர்களுக்கு சோயா பால் அல்லது பாதாம் பால் போன்ற மாற்றுகளும் நல்லதாக கருதப்படுகின்றன.
2. பச்சை இலை காய்கறிகள்: கீரை, வெந்தயம், கடுகு கீரை, பசலைக் கீரை, பிற பச்சை இலை காய்கறிகள் (Green Leafy Vegetables) ஆகியவற்றில் வைட்டமின் கே, கால்சியம் மற்றும் மெக்னீசியம் ஆகிய எலும்பின் கட்டமைப்புக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் இருப்பதால் 50 வயதைக் கடந்தவர்கள் அவசியம் அன்றாட உணவில் இவற்றைச் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
3. புரோக்கோலி: புரோக்கோலி (Broccoli)யில் வைட்டமின் கே, போலேட் ஆகிய எலும்பு அடர்த்திக்குத் தேவையான சத்துக்களும் மற்றும் சூப்பர் ஃபுட் காயாகவும் இருப்பதால் இதை சாப்பிட பலவித ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும்.
4. கொட்டைகள் மற்றும் விதைகள்: பாதாம், அக்ரூட் பருப்புகள் போன்ற உலர் பழங்கள் (Dry Fruits) மற்றும் சியா விதைகள், எள் போன்ற விதைகளில் (Seeds) எலும்புகளுக்குத் தேவையான கால்சியம், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் மெக்னீசியம் ஆகியவையும் அதிகமாக உள்ளதால் தினமும் இவற்றை ஒரு கையளவு உட்கொள்வது எலும்பின்ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
5. மீன்: சால்மன், மத்தி மற்றும் ட்ரவுட் போன்ற மீன்களில் (Fish) ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின் டி ஆகிய சத்துக்கள் அதிக அளவில் உள்ளதால் வாரம் இரு முறை மீன் சாப்பிட்டு வர எலும்புகள் வலுவடைந்து,ஆரோக்கியமாக இருக்கும்.
மேற்கண்ட 5 வகை உணவுகளையும் 50 வயதைத் தாண்டியவர்கள் சாப்பிட்டு வந்தாலே எலும்பு தேய்மானம், எலும்பு அடர்த்தி குறைதல், எலும்பு குறை நோய் போன்றவற்றில் இருந்து விடுபட்டு, எலும்பு இரும்பு போல மாறும் என்பதில் சந்தேகமே இல்லை.